பத்மஸ்ரீ விருதை திருப்பியளிக்கும் மேலும் ஒரு மல்யுத்த வீரர்...
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக வீராங்கனைகளால் பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளான பிரிஜ் பூஷண் சிங்கின் நெருங்கிய ஆதரவாளரான சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலும் ஒரு மல்யுத்த வீரர் தனது பத்மஸ்ரீ விருதினை திருப்பியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக பிரிஜ் பூஷண் சிங்கின் நெருங்கிய ஆதரவாளரான சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரிஜ் பூஷண் சிங்கின் ஆதரவாளர் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்தத்தில் இருந்து விலகுவதாக சாக்ஷி மாலிக் மீடியா சந்திப்பில் அழுதபடி அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பியளிப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங் யாதவ் தனது பத்மஸ்ரீ விருதினை திருப்பியளிப்பதாக தெரிவித்துள்ளார்.