கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.01.2024 - School Morning Prayer Activities...

 


 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.01.2024 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: நடுவுநிலைமை


குறள் : 112


செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி

எச்சத்திற் கேமாப்பு உடைத்து. 


பொருள்:

நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்.



பழமொழி :

It is better to plough deep than wide.


அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. எந்த காரியம் செய்தாலும் பேசினாலும் நன்கு ஆராய்ந்து செய்வேன் பேசுவேன். 


2. எனது பேச்சு அடுத்தவர்களை ஊக்குவிக்கும் படி பேசுவேன்.


பொன்மொழி :


வாழ்க்கையின் இன்ப துன்பங்களை சமமாய் ஏற்றுப் பாவிக்கிற மனிதன் முறையான கல்வியைப் பெற்றிருப்பான். 


பொது அறிவு :


1.அடகாமா பாலைவனம் எங்கு உள்ளது ? 


தென் அமெரிக்காவில். 


2. டில்லி நகரை வடிவமைத்தவர் யார்? 


எல் லுட்யன்ஸ்.


English words & meanings :


pray - addressing a prayer to God. verb. வழிபடு. வினைச் சொல். 

prey - an animal that is killed for food. noun. இரையாகும் விலங்கு. பெயர்ச் சொல்


ஆரோக்ய வாழ்வு :


உடலுக்கு தேவையான ஆற்றலுக்கு வைட்டமின் பி அவசியமானது. மொச்சை பயிறில் இரும்புச் சத்து இருப்பதால் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி மற்றும் ஆற்றல் உற்பத்திக்கு உதவுகிறது.


இரத்த சோகை போன்ற இரும்புச் சத்து குறைப்பாட்டை போக்குகிறது. எனவே உடல் எப்பொழுதும் சோர்வாக இருப்பவர்கள் மொச்சை பயிறை தங்கள் உணவில் சேர்த்துக் கொண்டு வரலாம். இந்த மொச்சை பயிறில் உள்ள நார்ச்சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.



ஜனவரி 26


இந்தியக் குடியரசு நாள் 


1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர சனவரி 26ஆம் நாள் விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. 


12ஆம் நாள் டிசம்பர் மாதம் 1946 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4ஆம் நாள் அரசியமைப்பு சட்ட வரைவை அவையில் சமர்ப்பித்தது.


2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் எழுதி முடிக்கப்பட்டது. பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக சனவரி 24ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.


அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1950ஆம் ஆண்டில் சனவரி 26ஆம் நாளை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது.


1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.


நீதிக்கதை


நேர்மையான பிச்சைக்காரர்


ஒரு மன்னனுக்கு ஒரு மனிதன் தனக்கு கிடைக்கும் அதிர்ஷ்டத்தை எப்படி பயன்படுத்துகிறான் என்று அறிய ஆசைப்பட்டான். அதை சோதிப்பதற்கு ஒரு நாள் இரண்டு ரொட்டித் துண்டுகளை வரவழைத்து, விலையுயர்ந்த வைரக்கற்களை ஒன்றினுள் பதுக்கி வைத்தான். பிறகு இரண்டு ரொட்டித் துண்டுகளையும் பணியாளன் ஒருவனிடம் கொடுத்து, தகுதியுள்ள கண்ணியமான மனிதன் ஒருவனுக்கு இந்த கனமான ரொட்டியையும், மற்றொரு சாதாரண ரொட்டியை ஒரு பிச்சைக்காரனுக்கும் கொடு என்று சொன்னான். 


நீண்ட அடர்ந்த தாடியுடன் சாமியாரைப் போன்ற ஒரு நபருக்கு அந்தப் பணியாளன் வைரக்கற்கள் உள்ள ரொட்டியை அளித்தான். பிறகு மற்றொன்றை ஒரு பிச்சைக்காரனுக்கு அளித்தான். சாமியார் போன்ற நபர் தனக்குக் கிடைத்த ரொட்டியை உற்றுப்பார்த்து இது சரியாக பக்குவப்படுத்தப்படாததால் கொஞ்சம் கனமாக உள்ளது என்று நினைத்து தன் அருகில் வந்து கொண்டிருந்த பிச்சைக்காரனிடம் எனக்குக் கிடைத்த ரொட்டி கனமாக உள்ளது. எனக்கு அவ்வளவு பசியில்லை. ஆகையால் இதை நீ எடுத்துக்கொண்டு உன்னுடையதை எனக்குக்கொடு என்றான். உடனே இருவரும் தங்களுடைய ரொட்டிகளை மாற்றிக்கொண்டனர். உடனே அந்த சாமியாரையும், பிச்சைக்காரனையும் பின் தொடருமாறு தன் வேலையாட்களுக்கு உத்தரவிட்டான் மன்னன். 


அன்று மாலையே மன்னனிடம் வேலையாட்கள் அவ்விருவரைப் பற்றிய தகவலை கூறினர். சாமியார் போல் தோற்றமளித்தவர் தன் வீட்டுக்குச் சென்று பொய்த் தாடியை எடுத்துவிட்டு, ஆசைதீர ரொட்டியை உண்டு விட்டு, பிறகு பழையபடி தாடியை ஒட்ட வைத்துக்கொண்டு சாமியார் வேடத்தில் பிச்சை எடுக்க கிளம்பி விட்டதாகவும், தன் வீட்டிற்குச் சென்ற பிச்சைக்காரன், தன் மனைவியுடன் ரொட்டியை உண்ணத் தொடங்கியதும் அதற்குள் இருந்த வைரக் கற்களைக் அவனும் அவன் மனைவியும் கண்டனர். வைரக்கற்களை நாமே எடுத்துக்கொள்ளலாம் என்று விரும்பினான். ஆனால், அந்தப் பிச்சைக்காரன், இந்த ரொட்டியை அளித்த அரசுப் பணியாளரிடம் இதைப் பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வைரக்கற்கள் உள்ளிருப்பது அவருக்குத் தெரியாது என்றால், அவருடைய பொருளை அவரிடமே சேர்க்க வேண்டும். ஆனால், தெரிந்தே இவ்வாறு கொடுத்தார் என்றால் இவை அந்தச் சாமியாரைச் சேர வேண்டும். அதுதான் நியாயம் என்று கூறியதாகவும் வேலையாட்கள் கூறினர். 


அந்தப் பிச்சைக்காரனின் நேர்மையையும், உயர்ந்த உள்ளத்தையும் அறிந்த மன்னன், கடவுளின் அருளால் வைரக்கற்கள் ஒரு போலிச் சாமியாரிடம் சிக்காமல் நேர்மையான ஒரு பிச்சைக்காரனை அடைந்ததை எண்ணி மகிழ்ந்த மன்னன், பிச்சைக்காரனை அரண்மனைக்கு அழைத்து அந்த வைரக்கற்களை அவனுக்கே கொடுத்து, மேலும் பல பரிசுகளும் வழங்கினான். பிச்சைக்காரரும் அதை விற்று கிடைத்தப் பணத்தில் வியாபாரம் செய்து சந்தோஷமாக வாழ்ந்தார்.


இன்றைய செய்திகள்


26.01.2024


நாட்டின் 75வது குடியரசு தினம்: மூவர்ணத்தில் ஜொலிக்கும் அரசு கட்டிடங்கள்...


இன்று 75வது குடியரசு தின விழா டெல்லியில் - பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு: ஜனாதிபதி முர்மு தேசிய கொடி ஏற்றுகிறார் 70,000 வீரர்களுடன் உச்சகட்ட பாதுகாப்பு...


பழைய ஓய்வூதிய திட்டம் கர்நாடகாவில் மீண்டும் அமல்: கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவு...


ஜெய்ப்பூரில் உற்சாக சாலைப் பேரணி பிரான்ஸ் அதிபரை டீக்கடைக்கு அழைத்து சென்ற பிரதமர் மோடி: யுபிஐ மூலம் பணம் செலுத்தினார்...


160கிமீ வேகத்தில் சென்ற ரயில் இன்ஜினில் கவாச் கருவி சோதனை...


நெக்ஸ்ட் தேர்வை செயல்படுத்த கருத்து கேட்கும் தேசிய மருத்துவ ஆணையம்...



Today's Headlines


Country's 75th Republic Day: Govt buildings lit up in tricolour... 


75th Republic Day Celebrations Grand Army Parade in Delhi Today: President Murmu hoists National Flag Maximum security with 70,000 soldiers... 


Karnataka Chief Minister Siddaramaiah orders resumption of old pension scheme...


Enthusiastic road rally in Jaipur - PM Modi takes French President to tea shop: Pays through UPI... 


Kavach instrument test on a train engine that ran at a speed of 160 kmph... 


National Medical Commission seeks feedback on implementation of NEXT exam...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School students staged road blockade in support of suspended teacher

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் School students staged road blockade in support of sus...