கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21-02-2024...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21-02-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: அறிவுடைமை.


குறள் 429:


எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

அதிர வருவதோர் நோய்.


விளக்கம்:


வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது.



பழமொழி : 


Penny-wise and pound-foolish.

கடுகு போன இடம் ஆராய்வார்; பூசனிக்காய் போன இடம் தெரியாது.


பொன்மொழி:


A thousand mile journey begins with one step.


 ஆயிரம் மைல் பயணம் கூட ஒரு அடியில் தான் தொடங்குகிறது.


அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


 இந்தியாவிலிருந்து இலங்கையை பிரிக்கும் ஜலசந்தி - பாக் ஜலசந்தி

இநதியாவில் பிரிட்டீஷ் உதவியுடன் தொடங்கப்பட்ட இரும்பு எஃகு தொழிற்சாலை - துர்காப்பூர்

சூப்பர் 301 என்பது - அமெரிக்க வர்த்தகச் சட்டம்

ஒர் ஆண்டிற்கு ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் நீரின் அளவில் இந்தியா பெற்றுள்ள இடம் - 133வது இடம்

உலகிலேயே நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்தும் நாடு - இந்தியா



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Eager - ஆசை 

Ear - காது 

Earnestness - ஆவல் 

Earth - பூமி

Easily - சுருக்கமாக


ஆரோக்கியம்


சுண்ணாம்புச் சத்தின் தேவை என்ன?


எலும்பின் உறுதித்தன்மைக்குச் சுண்ணாம்புச் சத்து அவசியம். பால், பால் பொருட்கள், பசுமையான கீரைகள், முட்டை ஆகியவற்றிலிருந்து சுண்ணாம்புச் சத்து கிடைக்கிறது.




இன்றைய சிறப்புகள்


பிப்ரவரி 21


1960 – பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அனைத்து வியாபார நிறுவனங்களையும் அரசுடமையாக்கினார்.


1972 – சோவியத்தின் ஆளில்லா லூனா 20 சந்திரனில் இறங்கியது.


பிறந்த நாள் 

-


நினைவு நாள் 

-


சிறப்பு நாட்கள்


பன்னாட்டுத் தாய்மொழி நாள்




நீதிக்கதை


ஏமாற்றாதே ஏமாறாதே 


ஒரு காலத்தில் காட்டில் ஓர் ஓநாய் இருந்தது. மிகவும் வயதாகி விட்டதால் இறையைத் தேட அதற்கு உடலில் வலுவில்லை. நாட்கள் செல்ல செல்ல மிகவும் பலவீனமாக போனதால் நகர்வதற்கு கூட அதற்கு சக்தி இல்லை. காட்டுக்கு நடுவே செல்லும் பாதையில் அது பசித்தவாறு படுத்து கிடந்தது.


ஓநாய் படுத்தவாறு, “நான் விரைவாக இறையை தேடாவிட்டால் நிச்சயமாக இறந்து விடுவேன்,” என்று தனக்குள் சொல்லிக் கொண்டது. அந்த நேரத்தில் அவ்வழியாக ஒரு கொழுத்த வெள்ளாடு வந்தது. அதனிடம் ஓநாய், “தயவு செய்து எனக்கு உதவி செய். உடலில் வலுவில்லாததால் நான் மிகவும் களைப்பாக இருக்கிறேன் குடிப்பதற்கு சிறிது தண்ணீர் கொடுக்கிறாயா?” என்று கேட்டது.


வெள்ளாட்டுக்கு ஓநாயை பார்க்க பாவமாக இருந்தது. உதவி புரிய அதன் அருகில் சென்றது. தனக்கு அருகில் வெள்ளாடு வந்தவுடன் தன்னிடம் இருந்த சக்தியெல்லாம் ஒன்று திரட்டிய ஓநாய் அதன் மீது பாய்ந்து அதை கொல்ல முயன்றது.


ஆனால் வெள்ளாடு வலிமை உள்ள மிருகம், ஓநாயை உதைத்தும் தள்ளியும் கொம்புகளால் முட்டியும் தடுத்துவிட்டு, அதனிடமிருந்து தப்பித்துக் கொண்டது.



பின்னர் கோபத்துடன், “தந்திரமாக ஏமாற்றி என்னை கொல்ல நினைத்தாயா? நீ ரொம்ப பலவீனமாக இருப்பதால் அதைக் கூட உன்னால் நிறைவேற்ற முடியவில்லை. ஏ, வஞ்சக ஓநாயே! இங்கேயே கிடந்து பசி தாங்காமல் நீ இறந்து போ,” என்று ஓநாயிடம் கத்திவிட்டு வெள்ளாடு அங்கிருந்து ஓடி விட்டது.


ஓநாய் அங்கேயே கிடந்த போது ஒரு செம்மறியாடு அந்த பாதை வழியாக வந்தது. செம்மறியாடு வருவதை பார்த்த ஓநாய், ‘இந்த செம்மறி ஆடு நிச்சயமாக வெள்ளாட்டை போல் வலிமையாக இருக்காது. வஞ்சகமாக அதை என் அருகில் நான் வரவழைத்தால் என்னால் அதை கண்டிப்பாக கொல்ல முடியும்’ என்று நினைத்துக் கொண்டது.


செம்மறியாடு வெள்ளாடு போல் வலிமையானது இல்லைதான். ஆனால், இது மிகவும் புத்திசாலி. தந்திரம் செய்து வெள்ளாட்டை ஓநாய் ஏமாற்ற முயன்றதை செம்மறி ஆடு பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறது. வெள்ளாட்டை ஓநாயால் கொல்ல முடியாமல் போனதை கண்டு அது மகிழ்ச்சி அடைந்தது.


செம்மறியாடு நெருங்கியதும் ஓநாய் அதை கூப்பிட்டது. “தயவுசெய்து எனக்கு கொஞ்சம் தண்ணீர் கொடு. நான் மிகவும் களைப்பாகவும் பலவீனமாகவும் இருக்கிறேன். நீ எனக்கு உதவவில்லை என்றால் நான் கண்டிப்பாக இறந்து விடுவேன்” என்று அதனிடம் கெஞ்சியது.



அதைக் கேட்ட செம்மறியாடு ஓநாயை பார்த்து கூறியது, “வஞ்சக ஓநாயே! வெள்ளாட்டை நீ என்ன செய்ய முயன்றாய் என்பதை நான் பார்த்துக் கொண்டுதானே இருந்தேன். நான் இன்னும் சற்று அருகில் வந்தாலும் நீ என் மீது பாய்ந்து கொன்று விடுவாய் என்பது எனக்கு தெரியுமே! பசியால் துடித்து நீ இறப்பதே சிறந்தது. அதனால், உனக்கு நான் கண்டிப்பாக உதவ போவதில்லை,” என்று சொல்லியவாறு அந்த புத்திசாலி செம்மறியாடு ஓநாயை அது கிடக்கும் இடத்திலேயே விட்டுவிட்டுச் சென்றது.



இன்றைய முக்கிய செய்திகள் 


21-02-2024 


2047ம் ஆண்டுக்குள் 35 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்: இலக்கு நிர்ணயித்த ஒன்றிய அமைச்சர்...


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு...


மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு...


தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத்தொகை வழங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்...


அரசு உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது என்பதை வேளாண் நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்...


குறுவை சாகுபடியை பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும்: எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்...



Today's Headlines:

21-02-2024


35 Trillion Dollar Economy by 2047: Union Minister Targets... 


Promulgation of ordinance allocating funds to repair houses affected by rain and flood... 


Senior Congress leader Sonia Gandhi elected as Rajya Sabha member unopposed...


Allotment of Rs 500 crores to provide Tamil Nadu government's paddy purchase incentive: Minister MRK Panneerselvam... 


 Agriculture Finance Report shows that government considers farmers as life: Chief Minister M.K.Stalin... 


Crop insurance should include crop insurance: Leader of Opposition Edappadi Palaniswami urges...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2024-2025 – 1st to 8th Standard - Term 2 (Half Yearly) Examination Time Table & Question Papers Download Instructions – Proceedings of Director of Elementary Education

    2024-2025 - ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை & இரண்டாம் பருவம் (அரையாண்டு) தேர்வு கால அட்டவணை & வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யும...