கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23-02-2024...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23-02-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: அன்புடைமை.


குறள் 71:


அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்.


விளக்கம்:

உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்.



பழமொழி : 


Strike while the iron is hot. Make hay while the sun shins.


அலை மோதும்போதே தலை முழுகு; காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்


பொன்மொழி:


Without continual growth and progress, such words as improvement, achievement, and success have no meaning. 


 தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் இல்லாமல், முன்னேற்றம், சாதனை, வெற்றி போன்ற வார்த்தைகளுக்குப் பொருள் இல்லை.


அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


 கொத்து வேர்கள் கொண்ட தாவரம் - டாலியா

பின்னுகொடி தாவரம் - அவரை

ஏறு கொடி தாவரம் - மிளகு, வெற்றிலை

பூண்டின் நறுமணத்திற்குக் காரணம் அதில் உள்ள - சல்பர் உள்ள சேர்மம்

டெங்கு காய்ச்சலைத் தோற்றுவிக்கும் வைரஸ் - ஃபிளேவி வைரஸ்



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Enough - போதும்

Enquire - விசாரணை

Enthusiasm - தெம்பு

Entire - முழுமை

Envy - பொறாமை


ஆரோக்கியம்


துளசி: 

சிறந்த பூச்சி விரட்டியாகத் திகழும் இது ஜுரம், சளித் தொந்தரவு, குழந்தைகளுக்கு வரும் நோய்கள் போன்றவற்றை குணமாக்கப் பயன்படுகிறது.



இன்றைய சிறப்புகள்


பிப்ரவரி 23


1947 – சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.


1954 – போலியோவிற்கு எதிரான சால்க் தடுப்பு மருந்து ஏற்றும் திட்டம் பிட்ஸ்பர்க், பென்சில்வேனியாவில் ஆரம்பிக்கப்பட்டது.



பிறந்த நாள் 

-


நினைவு நாள் 

-


சிறப்பு நாட்கள்


குடியரசு நாள் (கயானா)



நீதிக்கதை


உழைத்தால் மட்டும் போதுமா? 


 நாள் முழுக்க வேலை தேடி அலைந்தார் ஒருவர். மாலையில் மரக்கடை ஒன்றை கண்டார். ஐயா நான் கடின உழைப்பாளி எந்த வேலை கொடுத்தாலும் நன்றாக செய்வேன் என முதலாளியிடம் உறுதி அளித்தார்.


மரம் வெட்டும் வேலை கிடைத்தது. முதல் நாள் அக்கறையுடன் வேலை செய்தார். மற்ற தொழிலாளிகளை விட வேகமாக மரம் வெட்டும் பணியை செய்து முடித்தார். புதியவரின் திறமையை கண்டு அனைவரும் வியந்தனர்.


ஆனால் விதி சதி செய்தது. அடுத்தடுத்த நாட்களில் அவரால் முதல் நாளைப் போல வேகமாக வேலை செய்ய முடியவில்லை. மற்றவர்களின் பரிகாசத்திற்கு ஆளானார். ஒரு வாரம் கடந்த பின்,” என்ன ஆச்சு முதல்நாள் ஆர்வமாக மரம் வெட்டினிர்களே இப்போது ஏன் முடியவில்லை வேகம் குறைந்துவிட்டது” என்று கேட்டார் முதலாளி.



ஏன் என்று தெரியவில்லை முதல் நாளைப் போல் அக்கறையுடன் தான் வேலை செய்கிறேன் என்றார் அவர். “அப்படியானால் கோடாரியை காட்டுங்கள் அதை எப்படி கூர்மை செய்துள்ளீர்கள் என்று பார்க்கட்டும்” என்றார் முதலாளி. கூர்மையா இதுவரை பட்டை  தீட்டவே இல்லை என்றார் அவர்.



“முதல்நாளில் பட்டை தீட்டி கொடுத்தேனே அதை வைத்தே வெட்டிக் கொண்டு இருக்கிறீர்களா” என்றார் முதலாளி. அவரும் “ஆமாம்” என்றார். இதுதான் பிரச்சனை பட்டை தீட்டாமல் வெட்டினால் கோடாரி மட்டுபட்டு விடும். கடினமாக உழைத்தும் பலன் கிடைக்காது என்றார் முதலாளி. அதன்பின் கோடாரியை கூர்மை படுத்துவதை தன் முதல் வேலையாக கொண்டார் மரம் வெட்டுபவர்.


 நீதி : உழைத்தால் மட்டும் போதுமா வெற்றிபெற புத்திசாலித்தனமும் அவசியம்.




இன்றைய முக்கிய செய்திகள் 


23-02-2024 


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்கள் நாளை  முதல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் என அறிவிப்பு...


 நோயாளிகளின் மருந்துச் சீட்டில் ‘CAPITAL’ எழுத்துகளில் எழுத மருத்துவர்களுக்கு உத்தரவு பிறப்பித்தது தமிழ்நாடு அரசு...


தமிழ்நாடு ஒப்புதலின்றி மேகதாதுவில் அணை கட்ட முடியாது: சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்...


கரும்பு கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.315ல் இருந்து ரூ.340 ஆக உயர்த்தி வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்...


மாணவர்களுக்கு வண்ண அடையாள அட்டை.. பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு குழு.. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்புகள்...


2024-2025ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் - விவசாயிகளுக்கு ரூ.16,500 கோடி பயிர்க்கடன்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு...



Today's Headlines:

23-02-2024


Individual candidates who are going to write the 10th general examination will be notified to download the admit cards from tomorrow... 


Tamilnadu govt orders doctors to write 'CAPITAL' letters on patients' prescriptions... 


Dam cannot be built in Meghadatu without Tamil Nadu's approval: Minister Durai Murugan's Speech in the Assembly...


The Cabinet meeting chaired by Prime Minister Modi approved the increase in sugarcane procurement price from Rs.315 to Rs.340 per quintal... 


Color ID card for students.. Child protection committee in schools.. Announcements in Chennai Corporation Budget... 


Agriculture budget presentation for the financial year 2024-2025 - Rs 16,500 crore crop loan for farmers: Minister MRK Panneerselvam Announcement...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2024-2025 – 1st to 8th Standard - Term 2 (Half Yearly) Examination Time Table & Question Papers Download Instructions – Proceedings of Director of Elementary Education

    2024-2025 - ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை & இரண்டாம் பருவம் (அரையாண்டு) தேர்வு கால அட்டவணை & வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யும...