கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28-02-2024...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28-02-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: அன்புடைமை.


குறள் 74:


அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்பு என்னும் நாடாச் சிறப்பு.


விளக்கம்:


அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும். அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்..



பழமொழி : 


The mills of God grind slow but sure.


அரசன் அன்றே கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்



பொன்மொழி:


 “This too shall pass.” 


இது கூட கடந்துபோகும்.



அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


 படியெடுத்தலில் பங்கு பெறும் நொதி - ஆர்.என்.ஏ.பாலிமரேஸ்

மிகப்பெரிய முட்டையினை இடும் உயிரினம் - நெருப்புக்கோழி

அக்ரோசோமின் முக்கியப் பணி - அண்டத்தினுள் நுழைதல்

இரத்தச் செல்களை உண்டாக்கும் மூலச் செல்களின் பெயர் - ஹீமோபாயிடிக் செல்கள்

பாம்புக் கடிக்கு விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படும் தாவரம் - ராவுல்ஃபியா சர்பன்டைனா (சர்ப்பகாந்தி)



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Extend - நீட்டித்தல் 

Faint - மயக்கம்

Faith - விசுவாசம்

Famous - பிரபலமான 

Fast - வேகமான 


ஆரோக்கியம்


கற்றாழை: சிறிய புண்கள், வெட்டுக் காயங்கள், தோல் எரிச்சல் இவற்றுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது.



இன்றைய சிறப்புகள்


பிப்ரவரி 28


1953 – ஜேம்ஸ் வாட்சன், மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் தாம் டிஎன்ஏயின் வேதியியல் அமைப்பைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.


2007 – புளூட்டோவை நோக்கி ஏவப்பட்ட நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் வியாழனை அண்மித்தது.



பிறந்த நாள் 

-


நினைவு நாள் 

-


சிறப்பு நாட்கள்


அமைதி நினைவு நாள் (சீனக் குடியரசு)

கலேவலா நாள், (பின்லாந்து)

தேசிய அறிவியல் நாள்

ஆசிரியர் நாள் (அரபு நாடுகள்)



நீதிக்கதை


பேசும் குகை 


வெகு காலத்துக்கு முன்பு மிருகங்களின் ராஜாவாகிய சிங்கம் ஒரு காட்டில் வசித்து வந்தது. அங்கு இருந்த மற்ற மிருகங்கள் சிங்கத்தை பார்த்து பயந்து வாழ்ந்து வந்தனர். ஒருநாள் சிங்கம் இரையைத் தேடி காட்டில் அலையும் போது ஒரு குகையை கண்டது.


உள்ளே சென்று பார்க்கும் போது அங்கே யாரும் இல்லை. “நிச்சயமாக இங்கே யாரோ வசித்து வருகிறார்கள், அவர்கள் வரும் வரை இங்கே இருந்தால் நிச்சயமாக பெரிய விருந்து இன்றைக்கு உண்டு” என்று சிங்கம் தனக்குத்தானே பேசிக்கொண்டு, அங்கே ராஜா போல் அமர்ந்து இருந்தது. 



மாலை நேரத்தில் அங்கு வசித்து வந்த குள்ள நரி திரும்பி வந்து பார்க்கும்போது வெளியே சிங்கத்தின் கால்தடங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தது. “இப்போது நான் உள்ளே சென்றால் நானே அபாயத்தை ஏற்படுத்தியது போல் இருக்கும்” என்று குள்ளநரி எண்ணியது.


“ஆனால் குகைக்குள் சிங்கம் இருக்கிறதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது” புத்திசாலியான குள்ளநரி மனதில் ஒரு திட்டமிட்டது. “ஓ.. குகையே” என்று பெரிய சத்தத்தில் நரி கத்தியது.  இதைக் கேட்டு சிங்கம் சந்தோஷப்பட்டாலும் சத்தமிடாமல் பதுங்கி இருந்தது. மீண்டும் குள்ள நரி சத்தமாக,” ஓ குகையே நீ ஏன் இன்று மௌனமாக இருக்கிறாய்” என்று கேட்டது.


நரி குகையிடம் பேசுவது அதிசயமாக இருந்தாலும் சிங்கம் அமைதியாகவே இருந்தது. மீண்டும் குள்ளநரி, “ஓ குகையே உனக்கு என்ன ஆயிற்று. எல்லா நாளும் நான் திரும்பி வந்த உடனே எனக்கு வணக்கம் சொல்லுவாய், இன்று ஏன் பேசாமல் இருக்கிறாய்? என் மேல் ஏதாவது கோபமா? நான் திரும்பி செல்கிறேன்” என்று சொன்னது.


“அடக்கடவுளே.. இப்போது நான் எதுவும் செய்யாமல் இருந்தால், எனக்கு உணவு ஆக வேண்டிய அந்த நரி நிச்சயமாக தப்பித்து செல்லும். ஒருவேளை என்னை கண்டு பயந்து தான் இந்த குகை பேசாமல் இருக்கிறதோ” என்று எண்ணியது அந்த சிங்கம். உடனே  தன் கர்ஜிக்கும் குரலால் வணக்கம் சொல்லியது.


அதைக் கேட்ட உடன் நரி பயந்து ஓடியது. தன்னுடைய புத்திசாலித்தனத்தினால்  நரி தன்னுடைய உயிரைக் காப்பாற்றியது.


நீதி : சிந்தித்து செயல்பட வேண்டும்.




இன்றைய முக்கிய செய்திகள் 


28-02-2024 


சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு ஒரு வார காலமாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள்...


ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து நிறுத்திய தென்காசி தம்பதியருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.. ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்தார்...


ககன்யான் திட்டத்தின்கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி...


கர்ப்பிணியாக இருப்பதால் வேலை மறுக்கப்படுவது அரசியலமைப்புக்கு எதிரானது : உயர்நீதிமன்றம் அதிரடி...


பணிக் காலத்தில் இறந்த அரசு மருத்துவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு இனி அரசுப் பணி வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு...


4 ஆண்டுகளுக்குப் பின் குறைந்தது பயணிகள் ரயில் டிக்கெட் கட்டணம்: பயணிகள் மகிழ்ச்சி...



Today's Headlines:

28-02-2024


School Education Minister Anbil Mahesh Poiyamozhi appealed to the teachers who have been protesting continuously for a week demanding equal pay for equal work... 


Chief Minister M.K.Stalin praised the Tenkasi couple who prevented the train accident.. announced a reward of Rs.5 lakh... 


Prime Minister Modi introduced 4 astronauts who will go to space under Gaganyaan project...


Being denied a job because of pregnancy is unconstitutional: High Court takes action... 


Family heirs of government doctors who died during service will now be given government jobs: Tamilnadu government notification... 


Passenger rail ticket fares lowest after 4 years: Passengers happy...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Selected Candidates in Thirukkural Quiz held yesterday 21-12-2024 - Karur District

    நேற்று 21-12-2024 நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் - கரூர் மாவட்டம்  List of Selected Candidates ...