பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06-03-2024 - School Morning Prayer Activities...
திருக்குறள்:
பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: அன்புடைமை.
குறள் 79:
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
அன்பு என்னும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புக்கள் அழகாக இருந்து என்ன பயன்?
பழமொழி :
நம்பிக்கையே வாழ்க்கையின் உந்து சக்தி
Faith is the force of life
பொன்மொழி:
Every great achievement was once considered impossible.
எல்லா பெரிய சாதனைகளும் ஒருவரால் முடியாது என்று கருதப்பட்டவை.
அறிவியல் பொது அறிவு வினா விடைகள் :
டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் - புகையிலை
முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது - ஹைடிரா
நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு - கிளாமிடோமானஸ்
மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி - பிளாஸ்மோடியம்
அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு - மண்புழு
ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :
Guest - விருந்தினர்
Happen - நிகழ்தல்
Happiness - மகிழ்ச்சி
Hawk - பருந்து
Health - உடல்நலம்
ஆரோக்கியம்
சளி, இருமல்
ஆடாதோடை இலைகள் 3, துளசி இலைகள் 10, மிளகு 5 சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து 1 டம்ளராக வற்ற வைத்து ஒரு நாளைக்கு இருவேளை கொடுத்து வரலாம்.
நொச்சி இலைகளுடன் மஞ்சள் சேர்த்து கொதிக்கின்ற நீரிலிட்டு ஆவி பிடிக்கலாம். தொண்டைக் கட்டு இருந்தால் சூடான பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், அதிமதுரத் தூள் சேர்த்து இரவில் சாப்பிட்டு வந்தால் தொண்டைக் கட்டிற்கு இதமாய் இருக்கும்.
இன்றைய சிறப்புகள்
மார்ச் 6
1967 – திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.
1975 – ஈரானும் ஈராக்கும் தமது எல்லை தொடர்பாக உடன்பாட்டிற்கு வந்தன.
பிறந்த நாள்
1937 – வலண்டீனா தெரெசுக்கோவா, ரசிய விண்வெளி வீராங்கனை
1938 – சி. வி. விசுவேசுவரா, இந்திய வானியலாளர்
நினைவு நாள்
-
சிறப்பு நாட்கள்
நிறுவன நாள் (நோர்போக் தீவு, 1788).
விடுதலை நாள் (கானா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1957)
நீதிக்கதை
அன்னப் பறவை மற்றும் ஆமை
ஒரு குளத்துக்கு பக்கத்துல ஒரு ஆமையும் இரண்டு அன்னப்பறவையும் இருந்தாங்க. நிறைய நேரம் ஒருத்தருக்கு ஒருத்தர் கதை சொல்லிக்கிட்டே நல்ல நண்பர்களாய் இருந்தார்கள். அப்படியே சில வருடங்கள் போயிடுச்சு, அப்போ ஒரு வருஷம் அங்கு மோசமான வரட்சி ஏற்பட்டது. அப்போது “இந்த குளம் கிட்டத்தட்ட வற்றி போயிடுச்சு தண்ணி இல்லாம நாம எப்படி இங்க வாழுறது” என்று அன்னப் பறவை கேட்டது.
அதற்கு ஆமை “கவலைப்படாதே நண்பா ஒரு வழி கண்டு பிடிக்கலாம்.” என்றது. உடனே மற்றொரு அன்னப் பறவை “ஒரு வழியும் இல்லை நாங்க பறந்து போனாலும் நீ இங்க தான் இருக்கணும், ஏன்னா நீ ரொம்ப மெதுவா நடப்ப இல்ல, அது மட்டும் இல்ல உன்ன நாங்க தனியா விட்டுட்டு போக மாட்டோம்.” என்று சொன்னது.
கொஞ்ச நேரம் யோசித்து விட்டு ஆமை சொன்னது “ஹே! பசங்களா என்கிட்ட ஒரு சூப்பரான ஐடியா இருக்கு, முதலில் நீங்க ரெண்டு பேரும் போயி தண்ணி நிறைய இருக்கிற குளமா பார்த்து தேடிட்டு வாங்க.
அப்படி திரும்பி வரும்போது ஒரு பெரிய குச்சியை கொண்டு வாங்க அந்த குச்சியின் நடுவில நான் பிடிச்சுக்கறேன், நீங்க ரெண்டு பேரும் உங்க காலால குச்சியின் ரெண்டு ஒரத்தையும் புடிச்சுகிட்டு என்னை புது குளத்துக்கு பறந்து கூட்டிட்டு போங்க, நம்ம வாழ இதுதான் ஒரே வழி. இது ஒரு செம்மையான ஐடியா!.” என்றது.
அதை கேட்ட அன்னப் பறவைகள் “இது கண்டிப்பாக வேலை செய்யும். ஆனா நாங்க பறக்கும் போது நீ தான் உன் வாய தொறக்காம பாத்துக்கணும்.. இல்லன்னா நேரா கீழே விழுந்துவிடுவ.” என்று கூறி அந்த இரண்டு அன்னப்பறவையும் பறந்து போய் நிறைய தண்ணீர் உள்ள ஒரு குளத்த அவங்களோட புது வீட தேட போனாங்க.
அந்த நேரத்துல ஆமை இப்படிப்பட்ட ஒரு புத்திசாலித்தனமான ஐடியாவை யோசித்ததை நினைத்தும், வானத்தில் அப்படியே பறந்து போகிறதை நினைத்தும் ரொம்ப பெருமையா இருந்துச்சு. சீக்கிரமாவே அன்னப் றவைகள் ஒரு குளத்தை கண்டுபிடித்து ஒரு பெரிய குச்சியோட ஆமைய பார்க்க வந்தாங்க. ‘இதோ இதுதான் உன் குச்சி பிடிச்சுக்கோ” என்றது அன்னம்.
ஆமை எவ்வளவு வேகமா முடியுமோ அவ்வளவு வேகமா அதோட குட்டி கால்களை நகத்தி தன்னோட வாயால் அந்த குச்சியை புடிச்சுது. அப்போ அன்னப்பறவைகள் பட படனு இரக்கைகள விரிச்சிட்டு சீக்கிரமா பறக்க ஆரம்பிச்சாங்க. அவங்க மேகத்துக்கு மேல் பறந்து போனாங்க, ஆமையோட ஐடியா சூப்பரா வேலை செஞ்சுது.
“நான் பறக்குறேனு என்னாலேயே நம்ப முடியல, இப்படி ஒரு ஐடியாவை யோசிச்ச நான் எவ்ளோ பெரிய புத்திசாலி” என்று ஆமை தன்னை ரொம்ப பெருமையாக நினைத்தது. அவங்க போற வழியில ஒரு நகரம் இருந்தது. அந்த நகரத்தின் மேலே பறக்கும் போது கீழே இருந்த மக்கள் அவங்கள பாக்க ஆரம்பிச்சாங்க.
இரண்டு அன்னப்பறவையும், ஒரு ஆமையும் பறக்குறத பாக்க ரொம்ப அழகா இருந்திச்சி. “ஹே! அங்க பாருங்க அந்த ரெண்டு அன்னபறவையும் ஒரு ஆமைய தூக்கிட்டு போகுது.” கீழே இருக்கிற மக்கள் சொன்னத கேட்டு ஆமை ரொம்ப பெருமை பட்டுச்சு. மக்களுக்கு இது ஆமையோட ஐடியானு தெரியாததுனால ஆமைக்கு கோவம் வந்திச்சு.
“என்ன ஒரு புத்திசாலி பறவைகள் அவங்க ஒரு குளத்திலிருந்து மற்றொரு குளத்திற்கு போறாங்க போல கூட அவங்க ஃபிரண்ட் ஆமையும் கூட்டிட்டு போறாங்க பாருங்க. ஆமா இது யாருடைய ஐடியானு தெரியல, அதை யோசித்த விலங்கு ரொம்ப புத்திசாலி” என்று மக்கள் புகழ்ந்து பேசுறத கேட்ட ஆமையால் கொஞ்சம் கூட பொறுக்க முடியாமல். அதோட வாய திறந்து கத்தி “அது என்னோட ஐடியா” என்று சொல்லிச்சு.
ஆமை, தன்னோட வாய திறக்க கூடாது என்பதை மறந்ததனால் மேல இருந்து ரொம்ப வேகமாக கீழே விழுந்திச்சு. ஆமையோட பெருமையான குணத்தினால அன்னப்பறவைகள் தங்களோட நண்பனை இழந்திட்டாங்க. அவங்களல எதுவும் பண்ண முடியல. அன்னப் பறவைகள் மட்டும் புது குளத்திற்கு பறந்து போனாங்க.
நீதி: தங்கத்தை போல் அமைதியாக இருக்க வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள்
06-03-2024
உயர்கல்வி பயிலும் மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்பிற்கான EDII’s ஹேக்கத்தான்-2023-24, நிகழ்வு தொடங்கப்பட்டுள்ளது...
மிக்ஜாம் புயல்; சேதமடைந்த வீடுகளை சீரமைக்க ரூ.45.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு...
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மார்ச் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...
13 ஆண்டுகளில் 1,030 விபத்துகளை கண்ட தொப்பூர் சாலையில் ரூ.775 கோடி மதிப்பில் அமைகிறது உயர்மட்ட பாலம்...
தங்கம் விலை ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.48,000ஐ தாண்டியது… 5 நாளில் ரூ.1,640 விலை அதிகரிப்பு...
Today's Headlines:
06-03-2024
EDII's Hackathon-2023-24 event for higher education students' innovation has been launched...
Michaung Storm; Tamil Nadu government orders allocation of Rs 45.84 crore for repairing damaged houses...
Local holiday for Kanyakumari district on March 12: District Collector announces...
Thoppur Road, which witnessed 1,030 accidents in 13 years, is being constructed at a cost of Rs 775 crore...
Gold price rises by Rs 680 to cross Rs 48,000 per sovereign… Rs 1,640 rise in 5 days…