கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21-03-2024...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21-03-2024  - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: விருந்தோம்பல்.


குறள் 90:


மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குநழ்யும் விருந்து.


விளக்கம் :


அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது. அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்.




பழமொழி : 


Coveret all loss all


 பேராசை பெருநஷ்டம்



பொன்மொழி:


தீமை செய்வதற்கும் மட்டும் பயப்படு.

வேறு எந்த பயமும் உனக்கு வேண்டாம்...




அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


சக்தி தரும் உணவுச் சத்து - கார்போஹைட்ரேட்

ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும் வெள்ளையணு - லிம்ப்போசைட்டுகள்

வேதியாற்றலை இயக்க ஆற்றலாக மாற்ற உதவும் செல்லும் - தடை செல்கள்

பெரியம்மையை உண்டாக்கும் வைரஸ் - வேரியோலா வைரஸ்

 ஹார்மோன்களைச் சுரப்பவை - நாளமில்லாச் சுரப்பிகள்...



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Lesson - பாடம் 

Letter - கடிதம் 

Level - நிலை 

Liberal - தாராளம் 

Library - நூலகம்

Lid - மூடி 


ஆரோக்கியம்


  உங்கள் உணவில் 50 சதவீத காய்கறிகளும் இருக்க வேண்டும் (முள்ளங்கி, கேரட், இலை காய்கறிகள், முட்டைக்கோஸ், பூசணி, வெள்ளரி, வெங்காயம், செலரி, தக்காளி, மிளகு, காளான், ப்ரோக்கோலி, கத்திரிக்காய், காலிஃபிளவர் போன்றவை, 25 சதவீதம் புரதம் மற்றும் முழு தானியங்கள் இவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.


இன்றைய சிறப்புகள்


மார்ச் 21


1965 – நாசா ரேஞ்சர் 9 என்ற சந்திரனுக்கான தனது ஆளில்லா விண்ணுளவியை ஏவியது.


2006 – டுவிட்டர் சமூக ஊடகம் உருவாக்கப்பட்டது


பிறந்த நாள் 

-



நினைவு நாள் 

-


சிறப்பு நாட்கள்

பன்னாட்டு வன நாள்

பன்னாட்டு வண்ண நாள்

அன்னையர் நாள் (அரபு நாடுகள்)

உலகக் கவிதை நாள்

சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு நாள்

உலக டவுன் நோய்க்கூட்டறிகுறி நாள்

ஈரானியப் புத்தாண்டு நாள்

சர்வதேச தடுத்து வைக்கப்பட்ட, காணாமற்போன பணியாளர்களுடன் கூட்டு ஒருமைப்பாடு நாள்

உலக பொம்மலாட்ட நாள்



நீதிக்கதை



அறம் செய விரும்பு 


பிள்ளையாருக்கு பூஜை செய்து முடித்துவிட்டு, பிரசாத பாத்திரத்தை எடுத்துக் கொண்ட பூசாரி அருகில் இருக்கும் சத்திரத்தை நோக்கி நடந்தார். 


கோயில் பூசாரி பாத்திரத்துடன் சத்திரத்தின் உள்ளே நுழைவதைக் கண்டதும், சத்திரத்தில் படுத்திருந்த வயதான பெரியவர்கள் ஒரு சிலர் எழுந்து தள்ளாடியபடி பூசாரியை நோக்கி வந்தார்கள். 


பூசாரியும் தன் கையில் இருந்த பாத்திரத்திலிருந்து உணவையெடுத்து அவர்களின் தட்டில் போட்டார். 



அவர்களும் பூசாரியை வாழ்த்தியபடி அந்த உணவை சாப்பிடலானார்கள். பூசாரி தினமும் கோயில் பிரசர்தத்தை அந்த முதியோர்களுக்குக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 


இதனை நெடு நாட்களாக கவனித்து வந்த சத்திரத்து காவலாளியானவர் ஒரு நாள் பூசாரியை நெருங்கி “ஐயா ! பூசாரியே ! சில கோயில்களில் பூஜை முடிந்து அந்த பிரசாதத்தை பக்தர்கள் யாரும் வாங்கவில்லையென்றால் அதனை பூசாரிகளே தங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்வதைப் பார்த்திருக்கின்றேன். ஆனால் நீங்களோ இந்த சத்திரத்தில் இருக்கின்றவர்களுக்கு கொடுக்கின்றீர்களே! அதுவும் நாள் தவறாமல் கொடுக்கின்றீர்களே! அதன் காரணம் என்னவென்றுதான் எனக்குப் புரியவில்லை” என்று குழப்பத்துடன் கூறினான். 


அதனைக் கேட்ட பூசாரி “காவலாளியே ! இந்த பூமியில் மனிதர்களாகப் பிறந்தவர் ஒவ்வொருவரும் ஒருநாளைக்கு ஒரு தர்மமாவது செய்யவேண்டும். ஏதாவது ஒரு வகையில் மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். எனக்கு வீட்டில் உணவு கிடைக்கும். ஆனால் இந்த சத்திரத்தின் அருகே இருக்கின்ற வறியவர்கள் இந்தக் கோயில் பிரசாதத்தை நம்பியே உயிர் வாழ்கிறார்கள். அதனால் நான் நாள் தவறாமல் அவர்களுக்கு பிரசாதம் கொடுக்கின்றேன். இந்த உலகத்தில் காற்று நம்மை சுவாசிக்கும்படி செய்து வாழவைக்கிறது. மழை நீரைக் கொடுக்கிறது. தாவரங்கள் உணவைக் கொடுக்கின்றன. சூரியன் வெப்பத்தைக் கொடுக்கிறது. இப்படி இயற்கைகள் எல்லாம் நமக்கு ஏதாவது ஒன்றைக் கொடுக்கின்றபோது, மனிதர்களாகிய நாம் நம் மனித இனத்தார் ஒருவருக்கு தினமும் நன்மைபயக்கும் வகையில் ஏதாவது ஒன்றைக்கொடுத்தால் தவறில்லையே !” என்று கூறினார் பூசாரி. 


அதனைக் கேட்ட காவலாளி “பூசாரியாரே ! நான் தினமும் உணவு உண்ணும் முன்னர் காக்கைக்கு சோறு வைக்கின்றேன். அதுகூட நன்மைதரும் செயல்தானே !” என்று கேட்டார். 



உடனே பூசாரி “கண்டிப்பாக நன்மை தரும் செயல்தான். அதிலும் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் உணவளிப்பது, எல்லாவற்றையும் விட நன்மை தரும் செயலாகும். நாம் பிறருக்கு செய்கின்ற தர்மம்தான் நம்மை வாழவைக்கும். அதனால் நாம் எந்நாளும் மறவாமல், பிறருக்கு நன்மை செய்தே வாழ வேண்டும்” என்று கூறினார். 


சத்திரத்துக் காவலாளியும் பூசாரியின் கருத்தை உண்மைதான் என்று ஏற்றுக் கொண்டார். 


 நன்மை என்ற அறம் செய்ய ஆசை கொள்ள வேண்டும்.



இன்றைய முக்கிய செய்திகள் 


21-03-2024 


காத்திருப்போர் பட்டியலில் ரத்தான டிக்கெட் மூலம் 3 ஆண்டில் ரூ.1,230 கோடி வருவாய்: ரயில்வே நிர்வாகம் தகவல்...


தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேருக்கு தரப்பட்ட இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து வசூலிக்காதது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி...


லஞ்சம் வாங்கும்பொழுது பிடிபட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்...


நாடு முழுவதும் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் மக்களவை, சட்டமன்றம், இடைதேர்தல்களுக்கான வேட்பு மனு தாக்கல் தொடக்கம்...


தமிழ்நாட்டில் காலை 7 முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெறும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு...


நீட் முதுநிலை நுழைவுத் தேர்வு ஜூன் 23ஆம் தேதிக்கு மாற்றம்: தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு...




Today's Headlines:

21-03-2024


Rs 1,230 crore revenue in 3 years from canceled tickets in waiting list: Railway administration informs...


 Why was the compensation given to the 13 victims of the Thoothukudi firing not collected from the concerned authorities? The High Court asked... 


Supreme Court granted conditional bail to Enforcement Directorate officer Ankit Tiwari who was caught while accepting bribe...


Filing of nominations for the Lok Sabha, Legislative Assembly and by-elections in the first phase of elections across the country has begun... 


Polling will be held in Tamil Nadu from 7 am to 6 pm: Election Commission announces... 


NEET PG Entrance Test Shifted to June 23: National Testing Agency Announces...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...