கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04-04-2024...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04-04-2024  - School Morning Prayer Activities...


திருக்குறள்:


இனியவைகூறல்

பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: இனியவைகூறல்.


குறள் 99:


இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்கு வது.


விளக்கம்:


இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?



பழமொழி : 


Bare words buy no barely


 வெறுங்கை முழம் போடுமா?



பொன்மொழி:


ஒவ்வொருவரும் கட்டளையிடவே விரும்புகின்றனர்.

யாரும் கீழ்படிவதற்கு தயாராகயில்லை.

முதலில் நல்ல வேலைக்காரனாக இருக்க கற்றுகொள்.

பின் எஜமானனாகும் தகுதி உனக்கு வந்துவிடும்.




அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?


விடை: ஞானபீட விருது


அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது?


விடை: ஐரோப்பா


உலகிலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது?


விடை: வாஷிங்டன் D.C. (அமெரிக்கா)


“பஞ்சாப் சிங்கம் ” என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர்


விடை: லாலா லஜபதிராய்


 இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் எது?


விடை: ஆரியபட்டா



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Military - ராணுவம் 

Milk - பால் 

Millet- தானியம் 

Million - பத்து லட்சம் 

Mind - மனம் 

Minute - நிமிடம்


ஆரோக்கியம்


  அத்திப்பழம் மிகவும் சத்துள்ளது, இதை பச்சையாகவும் எடுத்து கொள்ளலாம். இல்லை என்றால் நன்கு உலர்த்தி ட்ரை ஃபிக் (Dry Fig) அதாவது உலர் அத்திப்பழமாகவும் சாப்பிடலாம்.


வயிறு சார்ந்த பிரச்சனை என்றால் நம்முடைய முன்னோர்கள் உலர்ந்த அத்திப்பழத்தை தண்ணீரில் ஊறவைத்து குடிப்பார்கள்.



இன்றைய சிறப்புகள்


ஏப்ரல் 3


1975 – அமெரிக்காவின் பாபி ஃபிஷர் அனதோலி கார்ப்பொவ்வுடன் சதுரங்கப் போட்டியில் பங்குபற்ற மறுத்ததால் கார்ப்பொவ் உலக வெற்றிக்கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டார்.

1981 – உலகின் முதலாவது பெயரத்தகு கணினி "ஒஸ்போர்ன் 1" சான் பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தப்பட்டது.


2010 – ஆப்பிள் நிறுவனம் 1-வது தலைமுறை ஐ-பேடு கைக் கணினியை வெளியிட்டது.



பிறந்த நாள் 

-



நினைவு நாள் 

-


சிறப்பு நாட்கள்

_



நீதிக்கதை 


நான்கு நண்பர்கள் 


முன்னொரு காலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் நான்கு அந்தணர்கள் வசித்து வந்தனர். அவர்கள் சத்தியானந்தன், வித்தியானந்தன், தர்மானந்தன், சிவானந்தன் என்று அழைக்கப்பட்டனர். 


சிறுவயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்த அவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். முதல் மூவரும் சிறந்த அறிவாளிகள்; பல கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள். ஆனால், சிவானந்தன் உண்பதிலும் உறங்குவதிலுமே தன் பொழுதைக் கழித்து வந்தான். அவன் ஒரு முட்டாள் என்றே மற்றவர்கள் கருதினர். 


ஒரு முறை அந்தக் கிராமத்தில் பஞ்சம் தலைவிரித்தாடியது. ஆறுகளும் ஏரிகளும் வற்றத் தொடங்கின. பயிர்கள் கருகின. உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது.


 உயிர் பிழைக்க அந்தக் கிராம மக்கள் மற்ற இடங்களைத் தேடிச் செல்ல ஆரம்பித்தனர். மற்றவர்களைப் போல் நாமும் வேறு இடத்திற்குச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் நாம் இறந்து விடுவோம், என்றான் சத்தியானந்தன். அவன் கூறியதை மற்ற நண்பர்கள் ஏற்றுக் கொண்டனர். “சிவானந்தனை என்ன செய்வது?” என்று கேட்டான் சத்தியானந்தன். 



“நம்முடன் அவனை அழைத்துச் செல்ல வேண்டுமா ? அவனுக்குப் படிப்பும் இல்லை; எந்தத் திறமையும் இல்லையே” என்று தொடர்ந்து கூறினான் சத்தியானந்தன்.


“நம்முடன் அவனை அழைத்துச் செல்ல முடியாது. அவன் நமக்குச் சுமையாக இருப்பான்” என்று பதில் கூறினான் தர்மானந்தன். 


“அவனை இங்கேயே இருக்க விட்டு நாம் மட்டும் எப்படிச் செல்லமுடியும்? நம்முடன் வளர்ந்தவன் அவன். நாம் சம்பாதிப்பதை நம் நால்வரிடையே சமமாகப் பங்கிட்டுக் கொள்ளலாம்,” என்று வித்தியானந்தன் கூறினான். 


எனவே, சிவானந்தனைத் தம்முடன் அழைத்துச் செல்ல அவர்கள் தீர்மானித்தனர். தேவையான பொருள்களை மூட்டை கட்டி எடுத்துக் கொண்டு, அருகிலுள்ள நகரத்தை நோக்கிச் சென்றனர். போகும் வழியில் ஒரு காடு குறுக்கிட்டது. அதன் வழியே செல்லத் தொடங்கினர். 



ஓர் இடத்தில் ஒரு விலங்கின் எலும்புகளைக் கண்டனர். வியப்படைந்த அவர்கள் அவற்றை அருகில் சென்று பார்த்தனர். 


“இவை ஒரு சிங்கத்தின் எலும்புகளாகத்தான் இருக்க வேண்டும்” என்று வித்தியானந்தன் கூறியவுடன் மற்ற மூவரும் அதை ஆமோதித்தனர். 


உடனே, ” நம்முடைய கல்வியறிவைப் பயன் படுத்துவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு, ” என்று சத்தியானந்தன் கூறியதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். 



“இந்த எலும்புகளை என்னால் ஒன்று சேர்க்க முடியும், ” என்று கூறியவாறே சத்தியானந்தன் அந்த எலும்புகளை ஒன்று சேர்த்துச் சிங்கத்தின் எலும்புக் கூட்டை உருவாக்கினான். 


“அதற்கு இரத்தமும் தசையும் என்னால் அளிக்க முடியும்” என்றான் தர்மானந்தன் அவனுடைய திறமையால் உயிரற்ற சிங்கத்தின் முழுமையான உடல் இப்போது அவர்கள் முன்னால் கிடந்தது.


“இந்தச் சிங்கத்தின் உடலுக்கு என்னால் உயிரூட்ட முடியும்” என்று துடிப்புடன் கூறினான் வித்தியானந்தன். 


உடனே முன்னால் ஓடி வந்து சிவானந்தன் அவனைத் தடுத்தான். “வேண்டாம், வேண்டாம். நீ ஒன்றும் செய்ய வேண்டாம்.நீ இந்தச் சிங்கத்திற்கு உயிரூட்டினால் இது நம்மைக் கொன்றுவிடும், என்று கூறியவாறே அவனைத் தடுக்க முயன்றான் சிவானந்தன். 


” ஏ. கோழையே ! என்னுடைய அறிவையும் திறமையையும் பரிசோதித்துப் பார்ப்பதிலிருந்து நீ என்னைத் தடுக்க முடியாது,” என்று கோபத்துடன் வித்தியானந்தன் கத்தினான். 


தொடர்ந்து, ” நான் மற்றவர்களை வேண்டிக் கேட்டுக் கொண்டதாலேயே, நீ எங்களுடன் இங்கு வர முடிந்தது. இப்போது என்னையே நீ தடுக்கப் பார்க்கிறாயா ? ” என்று சிவானந்தனைக் கடிந்து கொண்டான்.


 ” இரு, இரு, நான் முதலில் இந்த மரத்தின் மீது ஏறிக் கொள்கிறேன், ” என்று பயந்தவாறு கூறிய சிவானந்தன், அருகில் இருந்த மரத்தின் மீது தாவி ஏறினான். 



மரத்தின் உச்சாணிக் கிளையில் அவன் ஏறி அமர்ந்த போது வித்தியானந்தன் தன் திறமையால் அந்தச் சிங்கத்தை உயிர் பெறச் செய்தான். 


பலமாகக் கர்ச்சித்தவாறு எழுந்த சிங்கம் அந்த மூன்று அறிவில் சிறந்த அந்தணர்களையும் தாக்கிக் கொன்றது ! உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவர்கள் அறிவு அவர்களுக்குப் பயன்படவில்லை.


 நீதி : கல்வியறிவைவிடச் சமயோசித அறிவே சிறந்தது.



இன்றைய முக்கிய செய்திகள் 


03-04-2024 


 தைவான் கிழக்கு கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு...


அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3 லட்சத்தைக் கடந்தது: பள்ளிக்கல்வித்துறை தகவல்...


கனடா நாட்டிலும் காலை உணவுத் திட்டம் நடைமுறை - முதலமைச்சரின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த வெற்றி.. தமிழ்நாடு அரசு பெருமிதம்...


மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 25 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1,487 கோடி நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது: தமிழ்நாடு அரசு ஐகோர்ட்டில் தகவல்...


30 அருணாச்சல் கிராமங்களுக்கு சீனா புது பெயர்: மே 1 முதல் அமலுக்கு வருவதாக அறிவிப்பு...


அருணாச்சல் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி தான்: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்...




Today's Headlines:

03-04-2024


 Powerful earthquake hits east coast of Taiwan: Tsunami warning off...


 Enrollment in government schools crosses 3 lakh: School Education Department informs...


 Breakfast program is implemented in Canada too - Chief Minister's vision is a success.. Tamilnadu government is proud... 


About 25 lakh families affected by the Michaung storm have been given Rs 1,487 crore as relief: Tamil Nadu Government informs in High Court...


China new name for 30 Arunachal villages: Notification effective May 1... 


Arunachal will always be an integral part of India: External Affairs Minister...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...