கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

IFHRMS - ஏப்ரல் 2024 முதல் Income Tax Auto Deduction நடைமுறைக்கு வரவுள்ளதால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் - திண்டுக்கல் மாவட்டக் கருவூல அலுவலரின் கடிதம்...


IFHRMS - ஏப்ரல் 2024 முதல் Income Tax Auto Deduction நடைமுறைக்கு வரவுள்ளதால் கீழ்காணும் நடைமுறைகளை பின்பற்ற உத்தரவு...


 அனைத்து பணம் பெறும் அலுவலர்களின் கவனத்திற்கு,


ஏப்ரல் 2024 முதல் Income Tax Auto Deduction நடைமுறைக்கு வரவுள்ளதால் கீழ்காணும் நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது.


1. ஏப்ரல் 12-க்குள் PAN Number இல்லாத பணியாளர்களுக்கு Employee Profile-ல் PAN Number update செய்ய வேண்டும்.


2. PAN Number இல்லாத பணியாளர்களுக்கு வருமான வரித்துறையின் விதிகளின் படி தானாகவே 20% Income Tax பிடித்தம் செய்யப்படும்.


3. அனைத்து பணியாளர்களும் TDS பிடித்தம் முறை Old Regime அல்லது New Regime என்பதை தேர்வு செய்ய வேண்டும்.


4. களஞ்சியம் Mobile App அல்லது களஞ்சியம் மென்பொருளில் Employee Self Service ஆகிய இரண்டு வழிகளில் பணியாளர்கள் option-ஐ தேர்வு செய்யலாம்.


5. ஏப்ரல் 12-க்குள் Income Tax Option-ஐ தேர்வு செய்யாத பணியாளர்களுக்கு தானாகவே New Regime தேர்வு செய்யப்படும்.


6. Old Regime தேர்வு செய்த பின்பு பணியாளர்கள் தங்களது declaration-ஐ (Savings மற்றும் Expenses) Self Service-ல் கொடுக்க வேண்டும்.


7. Initiator தங்களது அலுவலக அனைத்து பணியாளர்களுக்கும் Initiator id -ல் Option-ஐ தேர்வு செய்யலாம் மற்றும் Declaration work ஆகியவற்றை செய்ய இயலும். Intiator-ன் Employee Self Service portal-லில் இதனை செய்யலாம்.


8. ஒவ்வொரு மாதமும் Payroll Run-க்கு முன்னதாக Declaration-ஐ மாற்றிக்கொள்ளலாம்.


9. Old Regime தேர்வு செய்த பணியாளர்கள் டிசம்பர் மாதம் 10-ம் தேதிக்குள் தங்களது சேமிப்பு மற்றும் செலவுகளுக்கான அசல் ரசீதுகளை Scan செய்து IFHRMS மென்பொருளில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


10. அவ்வாறு அசல் ரசீதுகளை பதிவேற்றம் செய்யாத பட்சத்தில் December மாதம் முதல் IT கூடுதலாக பிடித்தம் செய்யப்படும்.


11. அனைத்து பணியாளர்களும் தங்களது Income Tax Projection Report-ஐ Employee Service --> Reports --> Income Tax Projection Report Self Service பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



>>> திண்டுக்கல் மாவட்டக் கருவூல அலுவலர் கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...