கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கருணை அடிப்படையில்‌ பணி நியமனம்‌ - பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர்களின்‌ திருமணமான பெண்‌ வாரிசுதாரர்களுக்கும்‌ கருணை அடிப்படையில்‌ பணி நியமனம்‌ வழங்குதல்‌ - அரசாணை (நிலை) எண்: 78, நாள்: 21-04-2017 வெளியீடு...


கருணை அடிப்படையில் (Compassionate Ground Basis Appointment - G.O.Ms.No. 78, Dated: 21-04-2017) பணி நியமனம்‌ - பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர்களின்‌ திருமணமான பெண்‌ வாரிசுதாரர்களுக்கும்‌ கருணை அடிப்படையில்‌ பணி நியமனம்‌ வழங்குதல்‌ - அரசாணை (நிலை) எண்: 78, நாள்: 21-04-2017 வெளியீடு...



>>> அரசாணை (நிலை) எண்: 78, நாள்: 21-04-2017 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



கருணை அடிப்படையில்‌ பணி நியமனம்‌ - பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர்களின்‌ திருமணமான பெண்‌ வாரிசுதாரர்களுக்கும்‌ கருணை அடிப்படையில்‌ பணி நியமனம்‌ வழங்குதல்‌ - ஆணை வெளியிடப்படுகிறது.

அரசாணை (நிலை) எண்‌.78. நாள்‌ 21.04.2017.

ஹேவிளம்பி வருடம்‌, சித்திரை மாதம்‌ 8 -ஆம்‌ நாள்‌, திருவள்ளுவர்‌ ஆண்டு 2048.

படிக்க:

1 அரசாணை (நிலை) எண்‌.560, தொழிலாளர்‌ மற்றும்‌ வேலைவாய்ப்புத்‌ துறை, நாள்‌ 03.08.1977.

2. அரசாணை (நிலை) எண்‌.8, தொழிலாளர்‌ மற்றும்‌ வேலைவாய்ப்புத்‌ துறை, நாள்‌ 07.01.1987.

3... அரசாணை (நிலை) எண்‌:155, தொழிலாளர்‌ மற்றும்‌ வேலைவாய்ப்புத்‌ துறை, நாள்‌ 16.07.1993.

4... அரசாணை (நிலை) எண்‌. 135, தொழிலாளர்‌ மற்றும்‌ வேலைவாய்ப்புத்‌ துறை, நாள்‌ 04.10.2006.
 
5: அரசாணை (நிலை) எண்‌.165, தொழிலாளர்‌ மற்றும்‌ வேலைவாய்ப்புத்‌ துறை, நாள்‌ 30.08.2010.

6. அரசாணை (நிலை) எண்‌.96, தொழிலாளர்‌ மற்றும்‌ வேலைவாய்ப்புத்‌ (க்யூ) துறை, நாள்‌ 18.06.2012.

7. சென்னை, உயர்நீதிமன்ற நீதிப்பேராணை மனு எண்‌.14344/2012, தீர்ப்பு நாள்‌ 17.4.2014.

8. அரசு தலைமை வழக்குரைஞரின்‌ கருத்து எண்‌.82/15, நாள்‌ 8.6.2015.


ஆணை.

மேலே ஒன்றில்‌ படிக்கப்பட்ட அரசாணையில்‌, நெருங்கிய உறவினர்கள்‌ என வரையறுக்கப்பட்டுள்ள, பணியிடை மரணமடைந்த அரசு ஊழியரின்‌ மனைவி / கணவர்‌ / மகன்‌ / திருமணமாகாத மகள்‌ ஆகியோர்‌ கருணை அடிப்படையில்‌ பணி நியமனம்‌ பெறத்‌ தகுதியுடையவர்‌ என்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 

2. மேலே இரண்டில்‌ படிக்கப்பட்ட அரசாணையில்‌, இறந்த அரசு ஊழியரின்‌ கணவன்‌ / மனைவி கருணை அடிப்படையில்‌ பணிநியமனம்‌ கோரி, தங்களின்‌ வாரிசுதாரர்களில்‌, யாரை பரிந்துரை செய்கிறார்களோ, அவர்களுக்கே பணிநியமனம்‌ வழங்கப்பட வேண்டும்‌ என ஆணை வெளியிடப்பட்டுள்ளது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...