கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கருணை அடிப்படையிலான பணி நியமனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருணை அடிப்படையிலான பணி நியமனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திருமணமாகாத அரசு ஊழியர், மரணமடைந்தால் அவரது சகோதரர் அல்லது சகோதரிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கலாம் - அரசுக் கடிதம்...


 திருமணமாகாத அரசு ஊழியர், ஓய்வுபெறுவதற்கு முன் மரணமடைந்தால் அவரது திருமணமாகாத சகோதரர் அல்லது சகோதரிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கலாம்...

கருணை அடிப்படையிலான பணி நியமனம்

Compassionate Ground Basis Appointment...



>>> அரசு கடிதம் எண்.11379 / க்யூ 1 / 2019-1 . நாள் 26.06.2019 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தகவல் அறியும் உரிமைச் சட்டம் , 2005 விரைவு அஞ்சல் AHA இப தலைமைச் செயலகம் , சென்னை -9 . தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை


 அரசு கடிதம் எண்.11379 / க்யூ 1 / 2019-1 . நாள் 26.06.2019 


அனுப்புநர்:

திருமதி . பா . சித்ரா , பி . ஏ . பொது தகவல் அலுவலர் அரசு சார்புச் செயலாளர் , 


பெறுநர் 

செல்வி.க.சத்யப்பிரியா , த.பெ.காளைலிங்கம் , காடனேரி கிராமம் , பாகனேரி அஞ்சல் , சிவகங்கை மாவட்டம் . ( இ )


அம்மையீர் , 

பொருள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் , 2005- தகவல் கோரியது தொடர்பாக , 


பார்வை :

 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான மனு நாள் 11.06.2019 . ( இத்துறையில் கிடைக்கப்பெற்ற நாள் 13.06.2019 . பார்வையில் கண்ட தங்களது மனுவில் கோரப்பட்ட தகவலுக்கு கீழ்க்கண்ட விளக்கம் அளிக்கப்படுகிறது 


திருமணமாகாத ஒரு அரசு வாழியர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு இறந்து விட்டால் அவரது திருமணமாகாத சகோதரர் அல்லது சகோதரிக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கலாம் என அரசாணை ( நிலை ) எண் .134 , தொழிலாளர் மற்றம் வேலைவாய்ப்புத் துறை , நாள் 22.10.1998 - ல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது . 

 


அதன் நகல் இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது . 


தங்கள் உண்மையுள்ள ,


 பொதுத் தகவல் அலுவலர் | அரசு சார்புச் செயலாளர் . ✍🏼



கருணை அடிப்படையில்‌ பணி நியமனம்‌ - பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர்களின்‌ திருமணமான பெண்‌ வாரிசுதாரர்களுக்கும்‌ கருணை அடிப்படையில்‌ பணி நியமனம்‌ வழங்குதல்‌ - அரசாணை (நிலை) எண்: 78, நாள்: 21-04-2017 வெளியீடு...


கருணை அடிப்படையில் (Compassionate Ground Basis Appointment - G.O.Ms.No. 78, Dated: 21-04-2017) பணி நியமனம்‌ - பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர்களின்‌ திருமணமான பெண்‌ வாரிசுதாரர்களுக்கும்‌ கருணை அடிப்படையில்‌ பணி நியமனம்‌ வழங்குதல்‌ - அரசாணை (நிலை) எண்: 78, நாள்: 21-04-2017 வெளியீடு...



>>> அரசாணை (நிலை) எண்: 78, நாள்: 21-04-2017 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



கருணை அடிப்படையில்‌ பணி நியமனம்‌ - பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர்களின்‌ திருமணமான பெண்‌ வாரிசுதாரர்களுக்கும்‌ கருணை அடிப்படையில்‌ பணி நியமனம்‌ வழங்குதல்‌ - ஆணை வெளியிடப்படுகிறது.

அரசாணை (நிலை) எண்‌.78. நாள்‌ 21.04.2017.

ஹேவிளம்பி வருடம்‌, சித்திரை மாதம்‌ 8 -ஆம்‌ நாள்‌, திருவள்ளுவர்‌ ஆண்டு 2048.

படிக்க:

1 அரசாணை (நிலை) எண்‌.560, தொழிலாளர்‌ மற்றும்‌ வேலைவாய்ப்புத்‌ துறை, நாள்‌ 03.08.1977.

2. அரசாணை (நிலை) எண்‌.8, தொழிலாளர்‌ மற்றும்‌ வேலைவாய்ப்புத்‌ துறை, நாள்‌ 07.01.1987.

3... அரசாணை (நிலை) எண்‌:155, தொழிலாளர்‌ மற்றும்‌ வேலைவாய்ப்புத்‌ துறை, நாள்‌ 16.07.1993.

4... அரசாணை (நிலை) எண்‌. 135, தொழிலாளர்‌ மற்றும்‌ வேலைவாய்ப்புத்‌ துறை, நாள்‌ 04.10.2006.
 
5: அரசாணை (நிலை) எண்‌.165, தொழிலாளர்‌ மற்றும்‌ வேலைவாய்ப்புத்‌ துறை, நாள்‌ 30.08.2010.

6. அரசாணை (நிலை) எண்‌.96, தொழிலாளர்‌ மற்றும்‌ வேலைவாய்ப்புத்‌ (க்யூ) துறை, நாள்‌ 18.06.2012.

7. சென்னை, உயர்நீதிமன்ற நீதிப்பேராணை மனு எண்‌.14344/2012, தீர்ப்பு நாள்‌ 17.4.2014.

8. அரசு தலைமை வழக்குரைஞரின்‌ கருத்து எண்‌.82/15, நாள்‌ 8.6.2015.


ஆணை.

மேலே ஒன்றில்‌ படிக்கப்பட்ட அரசாணையில்‌, நெருங்கிய உறவினர்கள்‌ என வரையறுக்கப்பட்டுள்ள, பணியிடை மரணமடைந்த அரசு ஊழியரின்‌ மனைவி / கணவர்‌ / மகன்‌ / திருமணமாகாத மகள்‌ ஆகியோர்‌ கருணை அடிப்படையில்‌ பணி நியமனம்‌ பெறத்‌ தகுதியுடையவர்‌ என்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 

2. மேலே இரண்டில்‌ படிக்கப்பட்ட அரசாணையில்‌, இறந்த அரசு ஊழியரின்‌ கணவன்‌ / மனைவி கருணை அடிப்படையில்‌ பணிநியமனம்‌ கோரி, தங்களின்‌ வாரிசுதாரர்களில்‌, யாரை பரிந்துரை செய்கிறார்களோ, அவர்களுக்கே பணிநியமனம்‌ வழங்கப்பட வேண்டும்‌ என ஆணை வெளியிடப்பட்டுள்ளது.



கருணை அடிப்படையில் பணிநியமனம் - தேவையான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் விரிவான வழிகாட்டுதல்களுடன் அரசாணை (G.O.Ms. No.33, Dated: 08-03-2023) மற்றும் அரசிதழ் (Gazette No.83, Dated: 08-03-2023) வெளியீடு (Compassionate ground basis appointment – Application Formats - G.O. & Gazette publication with detailed Guidelines)...



இனி கருணை அடிப்படையில் பணி நியமனம் தொடர்பாக கருத்துருக்கள் அனுப்பும் போது 18 கலம் படிவத்திற்கு பதிலாக இந்த அரசாணையில் வழங்கப்பட்டுள்ள 23 கலம் படிவத்தில் பூர்த்தி செய்து கருத்து அனுப்பி வைக்க வேண்டும் 



>>> கருணை அடிப்படையில் பணிநியமனம் - தேவையான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் விரிவான வழிகாட்டுதல்களுடன் அரசாணை  (G.O.Ms. No.33, Dated: 08-03-2023) வெளியீடு (Compassionate ground basis appointment – Application Formats - G.O. publication with detailed Guidelines)...



>>> கருணை அடிப்படையில் பணிநியமனம் - தேவையான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் விரிவான வழிகாட்டுதல்களுடன் அரசிதழ் (Gazette No.83, Dated: 08-03-2023) வெளியீடு (Compassionate ground basis appointment – Application Formats - Gazette publication with detailed Guidelines)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

திருமணமான பெண்களுக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலை பெற உரிமை உண்டு - உயர்நீதிமன்றம் (Married women also entitled to government jobs on compassionate grounds - High Court)...



>>> திருமணமான பெண்களுக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலை பெற உரிமை உண்டு - உயர்நீதிமன்றம் தீர்ப்பு (Married women also entitled to government jobs on compassionate grounds - High Court Judgement)...


விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சத்துணவுத் திட்டத்தில் உதவி சமையலராகப் பணியாற்றி இருக்கிறார். 2014-ல் உடல்நலக் குறைவால் இவர் மரணமடைந்திருக்கிறார். தன்னுடைய தாயின் பணியை தனக்கு வழங்கக் கோரி, அவரின் மகள் சரஸ்வதி, அவர் இறந்த ஆண்டே விண்ணப்பித்து இருக்கிறார்.


ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.


அதனால், 2017 ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் அந்தப் பணிக்கு விண்ணப்பித்து இருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இவர் விண்ணப்பித்ததாகக் கூறி, இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.


அதனைத் தொடர்ந்து கருணை அடிப்படையில் தனக்குப் பணி வழங்குமாறு உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள்  சுப்பிரமணியன் மற்றும் திலகவதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.


வழக்கை விசாரித்த நீதிபதிகள், `சத்துணவுத் திட்டம் தொடர்பான அரசு உத்தரவுகளில் கருணை அடிப்படையில் பணியமர்த்தக் கோரி விண்ணப்பிக்க, எந்தக் கால வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை.


திருமணமான பெண்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் கேட்க உரிமையில்லை என்ற கர்நாடக அரசின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. எனவே மனுதாரரின் கல்வித் தகுதிக்கேற்ப, அவருக்கான பணியை அரசு வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளனர்.


திருமணமான பெண்களும் கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரலாம் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு, மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.







கருணை அடிப்படையில் மணமான பெண்ணிற்கு வேலை...


திருமணமான மகள்களுக்கும் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு G.O. Ms. No - 78, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை என்ற எண்ணின் கீழ் 21.4.2017 ஆம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது.


 பெற்றோர்களை பராமரிப்பதாக திருமணமான பெண்கள் உறுதி அளித்தால், அவர்களுக்கு அரசுப் பணியை கருணை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யலாம் என்ற ஒரு நிபந்தனையை சேர்க்க வேண்டும். அந்த நிபந்தனையோடு திருமணமான பெண்களுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.



பணி நியமனம் பெற்ற பிறகு திருமணமான பெண்கள் தங்களுடைய பெற்றோர்களை பராமரிக்கவில்லை என்று ஏதேனும் புகார் அளிக்கப்பட்டால், அந்த பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்படும் என்கிற நிபந்தனையோடு திருமணமான பெண்களுக்கு அரசுப் பணி கருணை அடிப்படையில் வழங்கலாம் என்பதை நீதிமன்றம் வலியுறுத்துகிறது.


எனவே கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் திருமணமான பெண்கள் தங்கள் பெற்றோர்களை பராமரிக்க வேண்டும், இல்லாவிட்டால் அந்த பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கருணை அடிப்படையில் நியமனம் - 2020-2021 மற்றும் 2021-2022ஆம் ஆண்டில் இளநிலை உதவியாளர் பணி நியமனம் பெற்றோருக்கு ஆணை வழங்கும் நிகழ்வு - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 21-09-2022 அன்று நடைபெற உள்ளது - பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் (Appointment on Compassionate Basis - 2020-2021 and 2021-2022 Appointment of Junior Assistants - Order issue event - to be held on 21-09-2022 under the Chairmanship of Minister of School Education - Proceedings of Joint Director of School Education - Staff Block) ந.க.எண்: 39671/ ஜே/ இ4/ 2021, நாள்: 18-09-2022...


>>> கருணை அடிப்படையில் நியமனம் - 2020-2021 மற்றும் 2021-2022ஆம் ஆண்டில் இளநிலை உதவியாளர் பணி நியமனம் பெற்றோருக்கு ஆணை வழங்கும் நிகழ்வு - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 21-09-2022 அன்று நடைபெற உள்ளது - பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் (Appointment on Compassionate Basis - 2020-2021 and 2021-2022 Appointment of Junior Assistants - Order issue event - to be held on 21-09-2022 under the Chairmanship of Minister of School Education - Proceedings of Joint Director of School Education - Staff Block) ந.க.எண்: 39671/ ஜே/ இ4/ 2021, நாள்: 18-09-2022...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


உடல்நல இயலாமை காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கும் கருணை அடிப்படையில் வேலை - தமிழக அரசு உத்தரவு (Compassionate Ground Basis Appointment for the heirs of Government Servants retiring due to ill health - Government of Tamil Nadu Order)...

 உடல்நல இயலாமை காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கும் கருணை அடிப்படையில் வேலை - தமிழக அரசு உத்தரவு (Compassionate Ground Basis Appointment for the heirs of Government Servants retiring due to ill health - Government of Tamil Nadu Order)...



>>> கருணை அடிப்படையிலான பணி நியமனம் - விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை (நிலை) எண்: 18, நாள்: 23-01-2020 தமிழாக்கம் வெளியீடு... 



>>> கருணை அடிப்படையில் பணி நியமனம் - குறித்த தகவல்கள்...



>>> உடல் நலம் இயலாமை காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல் [அரசாணை]...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


கருணை அடிப்படையிலான வாரிசு வேலையை உரிமையாக கோரமுடியாது - புதிய விதிகளை சேர்க்க கோரிய மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி (Compassionate Ground Basis Appointment cannot be claimed as Right - High Court dismisses petition seeking addition of new rules)...

 கருணை அடிப்படையிலான வாரிசு வேலையை உரிமையாக கோரமுடியாது - புதிய விதிகளை சேர்க்க கோரிய மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி (Compassionate Ground Basis Appointment cannot be claimed as Right - High Court dismisses petition seeking addition of new rules)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு கோருதல்(Compassionate Ground Basis Appointment) - பணி வாய்ப்புக் கோரி காத்திருப்பவர்கள் சார்பாக விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் சமர்பிக்க கோருதல் - தொடர்பாக - பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்: 39671/ஜே/இ4/2021, நாள்: 04-08-2021...


17-11-2013 வரை பணியிலிருக்கும் பொழுது இறந்தவர்களின் வாரிசுதாரர்களில் 250நபர்களுக்கு 14-07-2021 அன்று கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டுள்ள நிலையில் 18-11-2013 முதல் 31-12-2015 வரை பணியிலிருக்கும் பொழுது இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு  கருணை அடிப்படையில் பணி வாய்ப்புக் கோரி காத்திருப்பவர்கள் சார்பாக விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் சமர்பிக்க கோருதல் - தொடர்பாக - பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்: 39671/ஜே/இ4/2021, நாள்: 04-08-2021...


>>> பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்: 39671/ஜே/இ4/2021, நாள்: 04-08-2021...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


கருணை அடிப்படையில் பணி நியமனம் - குறித்த தகவல்கள் (Appointment on Compassionate Basis - Information)...



>>> கருணை அடிப்படையில் பணி நியமனம் - குறித்த தகவல்கள் PDF கோப்பாகத் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கருணை அடிப்படையில் பணி நியமனம் - குறித்த தகவல்கள்...


1. கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது?

இறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்து எடுக்கப்பட்ட மகன் / மகள்.  விவாகரத்து பெற்ற மகள் / விதவையாக உள்ள / கணவரால் கைவிடப்பட்ட மகள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.



2     கருணை அடிப்படையில் பணிநியமனம் கோர கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?    

 ஆம்,  அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.



3     கருணை அடிப்படையில் பணி நியமனம் எந்தெந்த பதவிகளில் வழங்கப்பட்டு வருகிறது?  

   தற்போது, தமிழ்நாடு அமைச்சுப் பணியில், இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / வரைவாளர் / கிடங்கு மேலாளர் தரம் – 3 மற்றும் தலைமைச் செயலக உதவியாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.


 

4     இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர் B.E., பட்டம் பெற்றுள்ளார்,  அவருக்கு கருணையடிப்படையில் உதவிப் பொறியாளர் பதவி வழங்கப்படுமா?     

உதவிப் பொறியாளர் பதவி வழங்க இயலாது,  இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்படும்.



5     இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுவது அவர்களின் சட்டபூர்வ உரிமையா?  

   இல்லை. இறந்த அரசு ஊழியரின் குடும்பம் வறிய நிலையில் இருக்கிறது என, வட்டாட்சியரிடமிருந்து சான்றிதழ் பெற்று, பணி நியமனம் கோரும் விண்ணப்பத்துடன் மற்ற சான்றாவணங்களுடன் சமர்ப்பித்தால் தான், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க இயலும்.



6     கருணை அடிப்படையில் பணிநியமனம் பெற யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்? 

     இறந்த அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தின் அலுவலர் மூலம் நியமன அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.



7     கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற எந்தெந்த சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்?    

    கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் கணவரின் / மனைவியின் விண்ணப்பக் கடிதம்.


    கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுதாரரான விண்ணப்பதாரரின் விண்ணப்பக் கடிதம்.


    இறந்த அரசு ஊழியரின் இறப்புச் சான்றிதழ்.


    இறந்த அரசு ஊழியரின் வாரிசுச் சான்றிதழ்.


    இறந்த அரசு ஊழியரின் இதர வாரிசுதாரர்களின் மறுப்பின்மைச் சான்றிதழ்கள்.


    நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்கள்.


    கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்களின் மெய்த்தன்மைக் கடிதம்.


    வட்டாட்சியாரிடமிருந்து பெறப்பட்ட ஒருங்கிணைந்த சான்றிதழ்.


    இறந்த அரசு ஊழியரின் மனைவி பணிநியமனம் கோரினால் அவர் மறுமணம் செய்யவில்லை என்பதற்கான சான்று.



8     கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரி விண்ணப்பித்து பணி நியமனம் பெற  நிர்ணயிக்கப்பட்ட வயது எவ்வளவு?     

 காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியாக/ கணவனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 50 மற்றும் மகள் அல்லது மகனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 35 ஆகும்.



9     கருணை அடிப்படையில் நியமனம் பெற நிர்ணயிக்கப்பட்ட வயது எந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது?   

  காலஞ்சென்ற அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து  கணக்கிடப்படுகிறது.



10     காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுகள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரினால் யாருக்கு பணி நியமனம் வழங்கப்படும்?     

காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியால்/ கணவனால் முன்மொழியப்படும் நபருக்கு வழங்கப்படும்,  ஆனால் மற்ற வாரிசுதாரர்களின் ஆட்சேபணையின்மைச் சான்றும் அவசியமானதாகும்.



11     என் தந்தை இறக்கும் தருவாயில் என் வயது 3,  என் தாயும் என் தந்தை இறந்த ஓராண்டுக்குள் மறைந்து விட்டார்,  நான் இந்த வருடம் 10ஆம் – வகுப்பு தேர்வு எழுதியுள்ளேன்,   என் தந்தையின் வாரிசு என்பதால் கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு எனக்கு வழங்க கோரி விண்ணப்பிக்கலாமா?   

  அரசு ஊழியர் மறைந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்,  எனினும் தாயும் இல்லாத காரணத்தால் இதனை ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி ஏற்றுக் கொள்ளலாம்,  ஆனால் கருணை அடிப்படையில் அரசுப் பணியில் சேர குறும வயது 18 ஆகும்.



12     என் தந்தை இறக்கும்போது பன்னிரண்டாம் வகுப்பு  தேர்ச்சி பெற்றதினால் இளநிலை உதவியாளர் பணி கோரியிருந்தேன்,  5 வருடங்களாகியும் இன்னும் பணி வழங்கப்படவில்லை,  எனவே இடைப்பட்ட காலத்தில் தட்டச்சு ஆங்கிலம். தமிழ் ஆகிய இரண்டிலும் முதுநிலை தேர்ச்சி பெற்றுள்ளேன்,  நான் தட்டச்சர் பணி கோரி விண்ணப்பிக்கலாமா?    

 தட்டச்சர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி பெற்றுள்ளபடியால் அப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்,  ஆனால் தட்டச்சர் பணியிடம் காலியிருந்தால் மட்டுமே தட்டச்சர் பணியிடம் வழங்கப்படும், மொத்த காலியிடத்தில் 25 சதவிகிதம் மட்டுமே கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு வழங்கப்படும்.



13     கருணை அடிப்படையில் பணி நியமனம். இறந்த அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு பணி வழங்க வேண்டுமென்பது கட்டாயமா? உரிமையுடன் கோரலாமா?    

 கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு என நிர்ணயிக்கப் பட்டுள்ள அனைத்து சான்று – ஆவணங்கள் அரசாணை எண் 560. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை. நாள் 03.08.1977-இன் படி சமர்ப்பிக்கப்பட்டு. பணி நியமன அதிகாரிக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே பணிவழங்கப்படும்,  மறுக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு.



14     கருணை அடிப்படையில் பணி நியமனம், காலிப் பணியிடமின்மை காரணமாக எனக்கு மறுக்கப்படுகிறது,  ஆனால். வேலைவாய்ப்புத் துறை மூலம் 2 தற்காலிகப் பணியாளர்கள் பணியிலுள்ளார்கள்,  என்ன செய்வது?

  தற்காலிகப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு. அவ்விடம் நிரந்தரப் பணியிடமாக இருப்பின் தங்களுக்கு பணி வழங்கப்படலாம்.



15     திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர. சகோதாரிகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுகிறதா?  

   திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர சகோதரிகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படுகிறது.



16     மருத்துவ இயலாமையின் காரணமாக மருத்துவரீதியில் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் அரசு ஊழியரின் வாரிசுதாரர்களுக்கு. கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக் கோரும் விண்ணப்பத்துடன். மருத்துவ இயலாமையால் ஓய்வு பெறும் அரசு ஊழியரின் எந்தெந்த சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்?   

   கருணை அடிப்படையில் பணி நியமனம் கோருவதற்கு தேவையான சான்று / ஆவணங்களுடன் கீழ்க்காணும் சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.


    மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு, அவர் மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறுவதற்கு மருத்துவக் குழுவினரால் அளிக்கப்படும் மருத்துவ குழுச்சான்று (அசல்).


    அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தில் அவர் எந்நாளிலிருந்து மருத்துவ இயலாமையால் ஒய்வு பெறுகிறார் என்பதற்கு அத்துறைத் தலைவரால் வழங்கப்படும் சான்று.


    மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியரின் பணிப்பதிவேட்டின் நகல்.


>>> கருணை அடிப்படையில் பணி நியமனம் - குறித்த தகவல்கள் PDF கோப்பாகத் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கொரானா நோய் தொற்றினால் உயிரிழக்கும் GDS ஊழியரின் வாரிசுக்கு இரண்டு மாதத்திற்குள் பணி வழங்க வேண்டும்- அஞ்சல் தலைமையகம்...

கொரானா நோய் தொற்றினால் உயிரிழக்கும் GDS ஊழியரின் வாரிசுக்கு இரண்டு மாதத்திற்குள் பணி வழங்க வேண்டும் என்றும் அஞ்சல் தலைமையகம் புது டெல்லி உத்தரவிட்டுள்ளது.


GDS களுக்கு வாரிசுகளுக்கு பணி வழங்குவதற்கான கமிட்டியானது  உடனடியாக நேரிலோ இல்லை ONLINE மூலமாக கூடி பணி உத்தரவை   வழங்க வேண்டும் என அஞ்சல் தலைமையகம் அறிவுறுத்தி உள்ளது.






கருணை அடிப்படையில் 02.01.2016 முதல் 31.12.2019 வரை பணிநியமனம் செய்யப்பட்டவர்களின் பணியினை வரன்முறைப்படுத்துதல் சார்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - இணைப்பு: அரசாணை...



 கருணை அடிப்படையில் (Compassionate Ground Basis Appointment) 02.01.2016 முதல் 31.12.2019 வரை பணிநியமனம் செய்யப்பட்டவர்களின் பணியினை வரன்முறைப்படுத்துதல் சார்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 21925/ ஜே / இ4/ 2021, நாள்: 09-04-2021...


>>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 21925/ ஜே / இ4/ 2021, நாள்: 09-04-2021 & அரசாணை (நிலை) எண்: 48, நாள்: 26-02-2021 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கருணை அடிப்படையில் வேலை - தாயாரை நிர்கதியாக விட்ட மகனின் சம்பளத்தில் 25 சதவீதம் பிடித்தம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு...

கருணை அடிப்படையில் வேலை பெற்ற பின், தாயாரை நிர்கதியாக விட்ட மகனின் சம்பளத்தில் இருந்து, 25 சதவீதம் பிடித்தம் செய்யும்படி, கல்வித்துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


விழுப்புரம் மாவட்டம், தேவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலை; தலைமை ஆசிரியராக பணியாற்றினார். 1998ல், பணியில் இருக்கும்போது இறந்தார். திருமலை - வள்ளியம்மாள் தம்பதிக்கு, இரண்டு மகன்; இரண்டு மகள்கள் உள்ளனர்.குடும்பத்தை கவனித்து கொள்வதாக, மகன் தேசிங்குராஜா உறுதி அளித்ததை தொடர்ந்து, கருணை வேலையை மற்றவர்கள் விட்டு கொடுத்தனர்.



தேவனுாரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில், 2013ல் எழுத்தர் வேலை தேசிங்குராஜாவுக்கு கிடைத்தது.வேலை கிடைத்த பின், நிர்கதியாக விட்டு விட்டதாகவும், தாக்கியதாகவும், மோசமாக திட்டியதாகவும், மகன் தேசிங்குராஜாவுக்கு எதிராக, வள்ளியம்மாள் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.மகனின் தொடர் துன்புறுத்தலால், உயர் நீதிமன்றத்தில் வள்ளியம்மாள் வழக்கு தொடுத்தார்.


தேசிங்கு ராஜாவுக்கு எதிராக துறை நடவடிக்கை, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், விசாரணை முடியும் வரை, 'சஸ்பெண்ட்' செய்யவும், மனுவில் கோரியிருந்தார்.


மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:கருணை வேலைக்கு, தேசிங்குராஜாவின் சகோதரிக்கு முழுமையான தகுதி இருந்தும், குடும்பத்தை கவனித்துக் கொள்வார் எனக் கருதி, விட்டு கொடுத்துள்ளார். பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய, உத்தரவிட முடியாது. முழுமையான விசாரணை முடிந்த பின், அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும்.ஏற்கனவே, உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில் பிறப்பித்த உத்தரவின்படி, இந்த வழக்கிலும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.


தேசிங்குராஜாவின் சம்பளத்தில், 25 சதவீதம் பிடித்தம் செய்து, மனுதாரருக்கு மாதம் தோறும் செலுத்தப்படுவதை, அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.மனுவுக்கு, கல்வித்துறை பதில் அளிக்க வேண்டும். விசாரணை, ஜூன், 14க்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.




கருணை அடிப்படையில் வேலையில் சேர்ந்தவர்கள் பணி நியமனம் வரன்முறை செய்வது எப்படி? தமிழக அரசு உத்தரவு...



 2016ம் தேதி முதல் 2019ம் தேதி வரை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணி வரன்முறை செய்வது தொடர்பான வழிகாட்டி நெறிமுறை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 


இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கடந்த 2016 பிப்ரவரி 2ம் தேதி 2019 டிசம்பர் 31ம் தேதி வரை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட இளநிலை வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தட்டச்சர் ஆகியோருக்கு எந்த வித விதித்தளர்வு மற்றும் அரசாணைகளுக்கு விலக்கு தேவைப்படாத அனைத்து பணியாளர்களின் பணி நியமனங்களையும் ஒரே அரசாணையில் பணிவரன்முறை செய்ய பரிந்துரை செய்தது. 


இதையேற்று கடந்த 2016 பிப்ரவரி 2ம் தேதி முதல் 2019 டிசம்பர் 31ம் தேதி வரை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட பணியாளர்களின் பணி வரன்முறை செய்திட ஏதுவாக வழிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு, எந்த வித விதித்தளர்வு மற்றும் அரசாணைகளுக்கு விலக்கு தேவைப்படாத அனைத்து பணியாளர்களின் பணி நியமனமும் நடைமுறையில் உள்ள விதிகளுக்குட்பட்டு வரன்முறைப்படுத்தப்படும்.

கருணை அடிப்படையிலான பணி நியமனம் - விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை (நிலை) எண்: 18, நாள்: 23-01-2020 தமிழாக்கம் வெளியீடு - G.O.(Ms.)No.18, Dated: 23-01-2020, Appointment on Compassionate Ground - Comprehensive Guidelines - Orders issued...

 

G.O.(Ms.)No.18, Dated: 23-01-2020, Appointment on Compassionate Ground - Comprehensive Guidelines - Orders issued...


>>> Click here to Download G.O.(Ms.)No.18, Dated: 23-01-2020...



>>> கருணை அடிப்படையிலான பணி நியமனம் - விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை (நிலை) எண்: 18, நாள்: 23-01-2020 தமிழாக்கம்... 




அரசாணை (நிலை) எண்: 18, நாள்: 23-01-2020 - கருணை அடிப்படையில் பணிநியமனம் செய்வதற்கான தமிழ்நாடு அரசின் புதிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு...

 


>>> அரசாணை (நிலை) எண்: 18, நாள்: 23-01-2020 - கருணை அடிப்படையில் பணிநியமனம் செய்வதற்கான தமிழ்நாடு அரசின் புதிய வழிகாட்டி நெறிமுறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள்  - தமிழ்...