கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எளிமையாய் இரு... உதாரணமாய் இரு... இன்று ஒரு சிறு கதை...



எளிமையாய் இரு... உதாரணமாய் இரு... இன்று ஒரு சிறு கதை...


Be Simple... Be Sample...


எளிமை

எளிமை

எளிமை...


என்னுடைய பழைய பள்ளி தோழனை

30 வருடங்களுக்கு பின் சந்தித்தேன்.


ஒரு Hotel lobbyல் சந்தித்தேன். மிக எளிமையான உடைகள் அணிந்து இருந்தார். நான் அவருக்காக மனதில் இரக்கப்பட்டேன்.


என்னை பார்த்ததும், என் அருகே மகிழ்ச்சியோடு வந்து நலம் விசாரித்தார்.


என்னுடைய Status தரத்தோடு ஒப்பிடும் போது, அவர் மிகவும் தாழ்ந்திருப்பதாக நினைத்தேன்.


இருவருமே எங்களை பற்றிய தகவல்களை பரிமாறி கொண்டோம். அவர் என்னை சந்தித்தது குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்.


நான் அவரை என் புது ஆடம்பர கார் 

Range Roverல் வீட்டில் drop செய்கிறேன் என்று கூறினேன்.


அவர் மென்மையாக மறுத்துவிட்டு, தன் கார் 2001 Honda Accordல் வந்ததாக கூறினார்.


அவரை என் வீட்டிற்கு மதிய உணவிற்கு அழைப்பு கொடுத்தேன்.


என்னுடைய வெற்றியையும் 

அந்தஸ்தையும் அவர் உணர 

வேண்டும் என்று நினைத்தேன்.


அவருக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று வீட்டில் discuss செய்யலாம் என்று நினைத்து இருந்தேன்.


அவர் என் அழைப்பை ஏற்று கொண்டு, மறுநாள் Parkviewல் இருந்த என் ஆடம்பர பங்களாவிற்கு வந்தார். என் பங்களா அவரை மிகவும் கவர்ந்தது.


உணவருந்தும் போது, என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டேன்.


அவர் என் வியாபாரம் மிக எளிமையானது என்று மட்டும் கூறினார்.


நான் அவரிடம் உங்களுக்கு ஏதாவது Loan தேவையாக இருந்தாலும் சொல்லுங்கள். Bankல் என்னால் arrange செய்து தர முடியும் என்று கூறினேன். புன்னகையோடு நன்றி சொல்லி, தற்போது தேவை இல்லை என்று கூறினார்.


என்னை அவர் வீட்டிற்கு மதிய உணவு உண்ண அழைத்தார்.


இரண்டு வாரம் கழித்து அவர் வீட்டிற்கு நானும் என் மனைவியும் சென்றோம்.


என் மனைவிக்கு வர விருப்பமில்லை. Status இல்லாதவர்கள் வீட்டிற்கு வர அவளுக்கு விருப்பமில்லை.


நாங்கள் இருவரும் கல்லூரியில் close friends என்று கூறி வற்புறுத்தி அழைத்து சென்றேன்.


All fingers are not equal என்று நினைத்துக் கொண்டேன்.


ஒரு பெரிய Estate. அங்கே சென்று விசாரித்த போது, மிக மரியாதையாக 

அவர் இருப்பிடத்திற்கு வழி கூறினார்கள்.

ஆச்சரியமாக இருந்தது.


பெரிய Estate நடுவில் எளிமையான, ஆனால் இயற்கை சூழலோடு, அழகான பங்களா.


அவர் வீட்டில் நுழைந்ததும், அந்த எளிமையான அமைப்பு என்னை மிகவும் கவர்ந்தது.


அவர் மனைவியும் அவரும் எங்களை நன்கு வரவேற்று, உணவு உண்ண எல்லோரும் அமர்ந்தோம்.


அருமையான ஆரோக்கியமான உணவு.


உணவருந்தும் போது, என் கம்பெனி MD பற்றி விசாரித்தார். நாங்கள் இருவரும் நண்பர்கள் என்று கூறினார்.


அப்போதுதான் கவனித்தேன். 

ஒரு பிரபல கம்பெனியின் Gift ஒன்று பக்கத்து டேபிளில் வைக்கப்பட்டு இருந்தது.


அந்த கம்பெனி, எங்கள் கம்பெனியின் Major share holder. அந்த கம்பெனிக்கு எங்கள் கம்பெனியில் மிகப் பெரிய மரியாதை உண்டு. சொல்லப்போனால், அந்த கம்பெனிதான் எங்கள் Backbone.


அந்த கம்பெனி குறித்து விசாரித்த போது, அந்த கம்பெனி என்னுடையதுதான் என்று எளிமையாக தன்னடக்கத்தோடு கூறினார்.


நானும் என் மனைவியும் வாயடைத்து போய் விட்டோம்.


சொல்லப்போனால், நான் எங்கள்  கம்பெனியில் வாங்கும் சம்பளம், 

இவர் எங்கள் கம்பெனியில் செய்த மிகப் பெரிய முதலீட்டால்தான்.


இந்த எஸ்டேட்டும் என்னுடையதுதான் என்று அடக்கமாக கூறினார்.


நான் அவரை தடுமாறியபடி, Sir என்று சொன்னபோது, எழுந்து வந்து, என் தோளைத் தட்டி, 


We are friends. No formalities என்று அன்போடு கூறினார்.


கார் வரை வந்து, அவரும் அவர் மனைவியும் எங்களை சந்தோஷமாக வழியனுப்பி வைத்தார்கள்.


வீட்டிற்கு திரும்பும்போது, நான் மனதளவில் உறைந்து விட்டேன்.


என் மனைவி,  இவ்வளவு செல்வ செழிப்போடு இருப்பவர்கள், எவ்வளவு எளிமையாக மற்றவர்களை மதிக்கும் மனப்பான்மையோடும் இருக்கிறார்கள் என்று வியந்தாள். அவள் மனதிலும் பெரும் மாற்றம்.


நான் என்னையே ஆராய்ந்தேன்.


நான் வாங்கும் சம்பளத்திற்கு இவ்வளவு ஆடம்பரம் தேவை இல்லை. எல்லாமே Loan.


Living on loans, heavy loans, and showing off, while someone who pays my salary is quite modest and living a simple life.


ஆங்கிலத்தில் சொல்வார்கள்...


Indeed Deeper River Flow  

In Majestic silence.


ஆழமான நதி அமைதியாக 

பயணிக்கும். உண்மைதான்.


மற்றவர்களை அவர்கள் தோற்றம் கொண்டு, செல்வத்தையும், பகட்டையும் கொண்டு மதிப்பிடுவதை  இனி தவிர்க்கலாம்.


Rather concentrate more on how to better your life than how to impress people.


மற்றவர்களை ஆராய்வதை விட, ஆடம்பரமாக கடனில் வாழாமல், நம் வாழ்வை சிறப்பாக்க என்ன செய்யலாம் என்று யோசித்தல் எல்லோருக்குமே சிறப்பு.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...