கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.06.2024...

  

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.06.2024 - School Morning Prayer Activities...

  


திருக்குறள்:

பால் :பொருட்பால்

அதிகாரம் :கல்வி

குறள் எண்:394

உவப்பத் தலை கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

பொருள் : மகிழும் படியாகக் கூடிப் பழகி ('இனி இவரை எப்போது காண்போம்'என்று) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.


பழமொழி :
Strike the iron while it is hot.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.


இரண்டொழுக்க பண்புகள் :

*புதிய வகுப்பில் புதிய நண்பர்களோடு நன்கு பழகுவேன்.

*கல்வி ஒன்றே என்னை  உயர்த்தும். எனவே நன்கு படிப்பேன்.


பொன்மொழி :

வெற்றி என்பது குறிக்கோள் அன்று;
அது ஒரு பயணமேயாகும்.
பயணம் தொடர்ந்து கொண்டே
இருக்க வேண்டும்.

- இங்கர்சால்


பொது அறிவு :

1.வடகிழக்கு சபையின் 71வது முழு அமர்வு எங்கு நடைபெற்றது?

விடை: ஷில்லாங்

2. சமீபத்தில் செய்திகளில் பார்த்த பிரதான் மந்திரி சூர்யோதயா யோஜனா, எதனுடன் தொடர்புடையது?

விடை: கூரை சோலார் பேனல்கள்


English words & meanings :

Complacency - மனநிறைவடைகிற

Gratification-மனநிறைவு அளி

வேளாண்மையும் வாழ்வும்:

தொடக்க கால விவசாயம் 11,500 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துள்ளது. விவசாயிகள் அப்போதே பயிரிடத் தொடங்கி உள்ளனர்.



நீதிக்கதை

துறவி ஒருவர் ஒரு ஊருக்கு சென்றார்..

பலர் வந்து அவரை தரிசித்து ஆசி பெற்று சென்றனர்..

இளைஞன் ஒருவன் வந்தான் _சாமி எனக்கு ஒரு சந்தேகம்.._ உங்களைப் போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர்..
ஆனால் இன்றும் மனிதன் தீயவழியில் தான் செல்கிறான்.. உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன பயன்..?? என்று கேட்டான்..

துறவி  அவனிடம் சொன்னார்..
தம்பி நான் இன்னும் சில நாட்கள் இங்கே தான் தங்கி இருப்பேன், நான் இந்த ஊரை விட்டு செல்லும் பொழுது நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன், அதற்கு முன் ஒரு வேலை செய்..

ஒரு குதிரையை கொண்டு வந்து இந்த கோயில் மண்டபத்தில் கட்டி வை..

நான் ஊரைவிட்டு செல்லும் வரை குதிரை அங்கேயே கட்டி இருக்கட்டும்..

தினமும் இரவு அதற்கு உணவு வைத்து விடு என்று சொல்லி விட்டு அருகில் உள்ள சத்திரத்துக்கு சென்றார்..

_மறுநாள் காலை துறவி அந்த கோயில் மண்டபத்திற்கு வந்தார்.._

_அப்பொழுது அந்த இளைஞன் அந்த குதிரையை சுத்தி இருந்த சாணத்தையும், அது மிச்சம் வைத்த உணவு குப்பைகளையும் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தான்..

இவ்வாறு நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்தன..

அடுத்த நாள் காலை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த இளைஞரிடம் வந்தார் துறவி..

தினமும் நீ சுத்தப் படுத்தினாலும்.. இந்த இடத்தை குதிரை மீண்டும் மீண்டும் அசுத்தம் செய்து விடுகின்றதே.. பிறகு ஏன் தேவை இல்லாமல் சுத்தம் செய்கிறாய்..?? என்று கேட்டார்..

_அதற்கு அவன்,_
என்ன சாமி எல்லாம் தெரிஞ்ச நீங்க இப்படி கேட்க ரீங்க..?

திரும்ப திரும்ப அசுத்தம் ஆவுதுனு சுத்தப்படுத்தாம இருக்க முடியுமா..?_

இதை கேட்ட துறவி  அப்போது சொன்னார்_ *தம்பி அன்று நீ என்னிடம் கேட்ட கேள்விக்கு, இதுதான் பதில்..

நீ இப்போது செய்யும் வேலையைத் தான் நானும் செய்கிறேன், அசுத்தமான இடத்தை நீ மீண்டும் மீண்டும் சுத்தம் செய்வது போல், மனிதர்களை நல்வழி படுத்தும்  செயலை பெரியோர்கள் இடைவிடாமல் செய்வார்கள்..

இளைஞன் கேட்டான்.. சாமி இதற்கு நிரந்தர தீர்வு என்ன..?

அவர் உடனே அங்கு கட்டி இருந்த குதிரையை அவிழ்த்து விட்டு விரட்டினார்,

பின்பு அந்த இளைஞனைப் பார்த்துக் கேட்டார்..
இனி இந்த இடம் அசுத்தம் ஆகுமா..?

ஆகாது சாமி..என்றான்..

துறவி  கூறினார்.. உன் கேள்விக்கு இதான் பதில்..

நீ செய்த வேலையைப் போல் நாங்கள் மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்..

இப்பொழுது, நான் செய்த வேலையைப் போல்..என்று மனிதன் தன்னிடம்  இருக்கும் தீய எண்ணம் என்ற குதிரையை வாழ்வில் இருந்து விரட்டி விடுகிறானோ, அப்பொழுதே எங்களின் சுத்தப் படுத்தும் கடமை முடிந்து விடும்,

அன்று வரை மனிதனை நன்னெறி படுத்த வேண்டும் என்றார்.



இன்றைய செய்திகள்

13.06.2024

* உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என உலக வங்கி கணிப்பு!

* தமிழக, கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பாலருவியில் வெள்ள பெருக்கின் காரணமாக குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

* குவைத் தீ விபத்து தமிழர்கள் உட்பட 49 இந்தியர்கள் உயிரிழப்பு.

* விசேஷமான அடாப்டர் ஒன்றை ஐஐடி-ஜோத்பூர் உருவாக்கியுள்ளது. இந்த அடாப்டர் மூலம் யூசர்கள் தங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை சோலார் பவர் மூலம் சார்ஜ் ஏற்றி கொள்ள முடியும் எனக் கூறப்படுகிறது.

*  டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின்  25-வது போட்டியில் அமெரிக்காவுக்கு எதிராக இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Today's Headlines

* World Bank predicts that India will remain the world's fastest growing economy for the next 3 years!.

* Tourists have been banned from bathing in Palaruvi, located on the Tamil Nadu-Kerala border, due to floods.

* 40 Indians including Tamil people were ​​killed in Kuwait fire accident.

* A  special adapter has been developed by IIT-Jodhpur.  With this adapter, users are said to be able to charge their electric vehicles with solar power.

* In the  25th match of the ongoing T20 World Cup cricket, India won by 7 wickets against USA.


Prepared by

Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Anna University has withdrawn the notification of 'Professors appointment in Consolidated Pay'

 'தொகுப்பூதிய முறையில் பேராசிரியர்கள் நியமனம்' என்ற அறிவிப்பை திரும்ப பெற்றது அண்ணா பல்கலைக்கழகம் Anna University has withdrawn the ...