கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கணினி உதவியாளர்களுக்கு ஊதிய உயர்வு...



 கணினி உதவியாளர்களுக்கு சம்பளம் ரூ.20 ஆயிரம் ஆக உயர்வு...


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கணினி உதவியாளர்கள் 1843 பேருக்கு மாத ஊதியம் ரூ.16,000 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் ஆக உயர்வு செய்து ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் உத்தரவு...


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் கணினி உதவியாளர்களுக்கான சம்பளம், 16,000த்தில் இருந்து 20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.


தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளில், மத்திய அரசின் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், மாநிலம் முழுதும் 1,843 கணினி உதவியாளர், மாதம் 16,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.


அவர்களின் சம்பளத்தை, 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்கும்படி, ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர், அரசுக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்ற அரசு, கணினி உதவியாளர்களுக்கு, நேற்றுமுன்தினம் முதல் மாத சம்பளம் 16,000 ரூபாயை, 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்க அனுமதி அளித்துள்ளது.


இதற்கான அரசாணையை, ஊரக வளர்ச்சித்துறை செயலர்  வெளியிட்டுள்ளார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கல்லூரிக் கனவு கையேடு - மே 2025

கல்லூரிக் கனவு கையேடு - மே 2025 Kalloori Kanavu Guide - May 2025 - College Dream Guide கல்லூரிக் கனவு கையேடு - மே 2025 - தமிழ்நாடு அரசு வெளி...