இடுகைகள்

ஊதிய உயர்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கணினி உதவியாளர்களுக்கு ஊதிய உயர்வு...

படம்
 கணினி உதவியாளர்களுக்கு சம்பளம் ரூ.20 ஆயிரம் ஆக உயர்வு... மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கணினி உதவியாளர்கள் 1843 பேருக்கு மாத ஊதியம் ரூ.16,000 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் ஆக உயர்வு செய்து ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் உத்தரவு... மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் கணினி உதவியாளர்களுக்கான சம்பளம், 16,000த்தில் இருந்து 20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளில், மத்திய அரசின் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், மாநிலம் முழுதும் 1,843 கணினி உதவியாளர், மாதம் 16,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் சம்பளத்தை, 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்கும்படி, ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர், அரசுக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்ற அரசு, கணினி உதவியாளர்களுக்கு, நேற்றுமுன்தினம் முதல் மாத சம்பளம் 16,000 ரூபாயை, 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்க அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணையை, ஊரக வளர்ச்சித்துறை செயலர்  வெளியிட்டுள்ளார்.

LIC ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு அறிவிப்பு...

படம்
  LIC ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு அறிவிப்பு... எல்ஐசி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு, 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயன்பெறும் வகையில் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் விளைவாக, ஊதிய மசோதாவின் ஒட்டுமொத்த உயர்வு 17% ஆக இருக்கும் மற்றும் 110,000க்கும் மேற்பட்ட எல்ஐசி ஊழியர்கள் பயனடைவார்கள். லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி), ஆகஸ்ட் 2022 முதல் அதன் ஊழியர்களுக்கு 17% ஊதிய திருத்தம் செய்ய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன் விளைவாக, ஊதிய மசோதாவின் ஒட்டுமொத்த உயர்வு 17% ஆக இருக்கும் மற்றும் 110,000 க்கும் மேற்பட்ட எல்ஐசி ஊழியர்கள் பயனடைவார்கள். ஒரு அறிக்கையில், இந்த திருத்தம் தற்போதைய மற்றும் முன்னாள் எல்ஐசி ஊழியர்களுக்கு சாதகமாக இருக்கும் என்றும், அதே நேரத்தில் எதிர்கால சந்ததியினருக்கு எல்ஐசியின் முறையீட்டை மேம்படுத்தும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து எல்ஐசி ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பயனளிக்கும் இந்த ஊதியத் திருத்தத்திற்கு எல்ஐசி இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்தது. திருத்தம் என்ன உள்ளடக்கியது? எல்ஐசி

ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தில் பணிபுரியும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள், பிஸியோதெரபிஸ்ட்கள் மற்றும் பள்ளி ஆயத்த பயிற்சி மைய பராமரிப்பாளர், உதவியாளர் ஆகியோருக்கு நவம்பர் 2022 முதல் ஊதிய உயர்வு வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் (Pay Increase to special educators and therapists at elementary level and Helper/ Ayah and Care-giver / Attendant in IE centres with effect from 01.11.2022 - Proceedings of the State Project Director - Rc.No.4600/B8/SS/2022,dated 15.12.2022)...

படம்
  >>>  ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தில் பணிபுரியும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள், பிஸியோதெரபிஸ்ட்கள் மற்றும் பள்ளி ஆயத்த பயிற்சி மைய பராமரிப்பாளர், உதவியாளர் ஆகியோருக்கு நவம்பர் 2022 முதல் ஊதிய உயர்வு வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் (Pay Increase to special educators  and therapists at elementary level  and Helper/ Ayah and Care-giver / Attendant in IE centres with effect from  01.11.2022 -  Proceedings of the State Project Director -  Rc.No.4600/B8/SS/2022,dated 15.12.2022 )... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய... Proceedings of the State Project Director,  Samagra Shiksha, Chennai- 600006.  Present: Thiru.R.Sudhan, I.A.S.,  Rc.No.4600/B8/SS/2022,dated 15.12.2022.  Sub: Samagra Shiksha - Pay Increase to special educators  and therapists at elementary level  and Helper/ Ayah and Care-giver / Attendant in IE ce

01-11-2022 முதல் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 15% சதவீதம் ஊதிய உயர்வு அனுமதித்து மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் (15% increase in Salary from 01-11-2022 to employees working on Consolidated basis in Samagra Shiksha Scheme - State Project Director Proceedings) Rc.No: 4630/ F1/ SS/ 2022, Dated: 10-11-2022...

படம்
  >>> 01-11-2022 முதல் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் தொகுப்பூதிய  அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 15% சதவீதம் ஊதிய உயர்வு அனுமதித்து மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் (15% increase in Salary from 01-11-2022 to employees working on Consolidated basis in Samagra Shiksha Scheme - State Project Director Proceedings) Rc.No: 4630/ F1/ SS/ 2022, Dated: 10-11-2022... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தெலுங்கானா அரசு ஊழியர்களுக்கு 30 % ஊதிய உயர்வு & ஓய்வு வயது 61 ஆக உயர்வு...

படம்
 தெலுங்கானாவில், அரசு ஊழியர்களின் சம்பளத்தை, 30 சதவீதம் உயர்த்தி, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது.  இம்மாநிலத்தின், 11வது ஊதிய கமிஷன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, சி.ஆர்.பிஸ்வால் தலைமையில், 2018ல் உருவாக்கப்பட்டது. கமிஷனின் பரிந்துரையின்படி, மாநில அரசு ஊழியர்களின் சம்பளத்தை, 30 சதவீதம் உயர்த்தி, முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று உத்தரவிட்டார். மேலும், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது, 58ல் இருந்து, 61 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசாணை எண்: 88, நாள்: 26-02-2021 - கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் பெற்றுவரும் மதிப்பூதியம் 01-01-2020 முதல் ரூ.15,000 லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு...

படம்
  >>> கல்லூரிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 31246/ டி2/ 2019, நாள்: 26-02-2021 & அரசாணை எண்: 88, நாள்: 26-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு...

படம்
  தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. காலமுறை ஊதியம் பெற்று வரும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் குறைந்தபட்சமாக 2556 ரூபாயும், அதிகபட்சமாக 4 ஆயிரம் ரூபாயும் சம்பள விகிதங்களில் கூடுதலாக பெறுவார்கள். அதே போன்று கட்டுனர்கள் குறைந்தபட்சமாக 2337 ரூபாயும், அதிகபட்சமாக 3500 ரூபாயும் கூடுதலாக பெறுவார்கள். ரேஷன் கடைகளில் புதிதாக நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு தொகுப்பு ஊதியத்தையும் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. ஊதிய உயர்வின் மூலம் 23 ஆயிரத்து 793 பேர் பயன்பெறுவார்கள் என்றும், 19 முதல் 24 சதவீதம் வரை கூடுதல் நிதிப்பயன் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. >>>  ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு - அரசாணை எண்: 24, நாள்: 22-02-2021...

அரசாணை எண்: 24, நாள்: 22-02-2021 - ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தமிழக அரசு அறிவிப்பு...

படம்
  G.O.No: 24, Dated: 22-02-2021 - Pay Fixation to Ration Shop Employees... >>> அரசாணை எண்: 24, நாள்: 22-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

அரசுக் கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர் வரை பதவி உயர்வு பெற வாய்ப்பு...

படம்
 யுஜிசி நெறிமுறை 2018-ஐ அமல்படுத்தும் அரசாணையால், அதிகபட்சமாக இணைப் பேராசிரியர்  பதவியுடன் ஓய்வு பெற்று வந்த அரசுக் கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர்களாகப் பதவி உயர்வு  பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதுகுறித்துத் தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் த.வீரமணி, 'இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறியதாவது: ’’தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம், தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் சுமார் 5 ஆயிரம் ஆசிரியர்களை உறுப்பினர்களாகக் கொண்டது. பல்கலைக்கழக மானியக்குழு நெறிமுறைகள் 2018-ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இக்கழகம் வலியுறுத்தி வந்தது. இந்நெறிமுறைகளை அமல்படுத்தும் வகையில், உயர் கல்வித்துறை ஓர் அரசாணையை (எண். 5) அண்மையில் வெளியிட்டுள்ளது. இதன்மூலம், கல்லூரி ஆசிரியர்களுக்கான தர ஊதிய உயர்வு ஊதிய அட்டவணை 10-11-க்கு ரூ.6,000 - ரூ.7,000, ஊதிய அட்டவணை 11-12-க்கு ரூ.7,000 - ரூ.8,000 இணைப் பேராசிரியர்களுக்கான ஊதிய அட்டவணை 12-13ஏ-க்கு ரூ.8,000 - ரூ.9,000, ஊதிய அட்டவணை 13ஏ-14-க்கு ரூ. 9,000 - ரூ.10,000 ஆகிய பணி மேம்பாடுகள் கிடைக்கும்.

பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக் கோருதல் சார்ந்து - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - இணை இயக்குநர் -1 அவர்களின் பதில் கடிதம்...

படம்
 பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக் கோருதல் சார்ந்து - சமக்ரா சிக்க்ஷா இணை இயக்குநர் -1 அவர்களின் பதில் கடிதம் ந.க.எண்: 2917/ ஆ7/ ஆப/ ஒபக/2021, நாள்: 18-01-2021... >>> ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - இணை இயக்குநர் -1 அவர்களின் பதில் கடிதம் ந.க.எண்: 2917/ ஆ7/ ஆப/ ஒபக/2021, நாள்: 18-01-2021 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

தெலுங்கானா மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, ஓய்வூதிய வயது அதிகரிப்பு – அரசு அறிவிப்பு...

படம்
  அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, ஓய்வூதிய வயது அதிகரிப்பு – மாநில அரசு அறிவிப்பு!! தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மாநில அரசு பணியாளர்களுக்கு புத்தாண்டு பரிசாக ஊதியம் உயர்வு மற்றும் ஓய்வூதிய வயது அதிகரிப்பு போன்ற சலுகைகளை அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் அறிவித்து உள்ளார். இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தெலுங்கானா மாநிலம்: தெலுங்கானா மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய வயது அதிகரிப்பதாக அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். மேலும் அம்மாநிலத்தில் காலியான அரசு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும் அனைத்து அரசுத் துறைகளுக்கும் மேலதிக வயது மற்றும் கூடுதல் பணியாளர்களை நியமிப்பதற்கான வயதை அதிகரிப்பதற்கான முடிவை அவர் அறிவித்தார். இதன் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் பயனடைவார்கள். இதுகுறித்து அம்மாநில முதல்வர் கூறியதாவது, “இந்த திட்டத்தின் மூலம் சுமார் 9,36,976 அரசு ஊழியர்கள் பயனடைவார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக தலைமைச் செயலாளர் சோமேஷ்குமார் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...