கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.07.2024...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.07.2024 - School Morning Prayer Activities...



திருக்குறள்:

பால் : பொருட்பால்

அதிகாரம்:கேள்வி

குறள் எண்:413

செவி உணவிற் கேள்வி யுடையார் அவிஉணவின்
ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து.

பொருள்: செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும்,
அவி உணவைக்கொள்ளும் தேவரோடு ஒப்பாவர்.



பழமொழி :
Necessity knows no low.

ஆபத்துக்கு பாவம் இல்லை



இரண்டொழுக்க பண்புகள் :

*எல்லோரிடமும் மரியாதையாகவும் இனிமையாகவும் பேசுவேன்.

*யாரிடமும் கெட்ட வார்த்தைகளை பேச மாட்டேன்.



பொன்மொழி :

கல்வி என்பது ஆற்றில் எதிர்நீச்சல் போடுவது
போன்றது. முன்னேறிக்கொண்டே போக வேண்டும் நிறுத்தினால் பின்னுக்கு அடித்துத் தள்ளும்.

- - சீனப்பழமொழி



பொது அறிவு :

1. ”செந்தமிழ் நாடெனும் போதினிலே”-பாடலின் ஆசிரியர்?

விடை: பாரதியார்

2. கட்டிடங்களுக்கு வெள்ளையடிப்பதற்குப் பயன்படுவது

விடை: கால்சியம் ஹைட்ராக்சைடு



English words & meanings :

deviation-வேறுபாடு,

  engage-ஈடுபாடு



வேளாண்மையும் வாழ்வும் :

இயற்கை வேளாண்மையில் தரமான விதை, மண்புழு உரம், பசுந்தாள் உரம், சாணம், உதிர்ந்த இலைகள், மக்கும் குப்பைகள்உபயோகப்படுத்தப்பட்ட காபீ தூள் போன்ற இயற்கை உரங்கள் பயன்படுத்தப்படுவதால் நல்ல மகசூல் கிடைப்பதோடு, சத்துள்ள காய், கனிகளும் கிடைக்கின்றன. நிலங்களின் தன்மையை மீட்டு எடுப்பதற்கும் இயற்கை வேளாண்மை பெரிதும் உதவுகிறது.



நீதிக்கதை

நம் வார்த்தை நம் கையில்

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் அவருக்கு இரவில் தூங்கும் பொழுது  வந்த கனவில் ராஜாவிற்கு பற்களெல்லாம் விழுந்து  பொக்கை வாயுடன் இருப்பதைப் போல் கண்டார்.

காலை எழுந்தவுடன் ராஜாவுக்கு கனவின் பலன் என்ன? என்று அறிந்து கொள்ள  ஆர்வமாக இருந்தது. எனவே தன் நாட்டில் உள்ள ஜோதிடர் ஒருவரை அழைத்தார். தன் கனவின் பலனை கேட்டார்.

அவரும் சாஸ்திரங்களை எல்லாம் ஆராய்ந்து  கனவின் பலனாக அரசே தங்களுக்கு முன்னரே தங்கள் உறவினர்கள் ராணி இளவரசர், இளவரசி அனைவரும் இறந்து விடுவார்கள் என்று கூறினார்.

இதனைக் கேட்ட அரசர் கோபமடைந்து அவருக்கு தண்டனை விதித்தார். ஆனாலும் அரசருக்கு கனவின் பலனை சரியாக அறிந்து கொள்ள விருப்பம் ஏற்பட்டது.

எனவே, மற்றொரு ஜோதிடரை அழைத்து  கனவின் பலனை கூறுமாறு கேட்டார்.

அவரும் சாஸ்திரங்கள் எல்லாம் ஆராய்ந்து அரசே! தங்கள்  உறவினர்கள் ராணி,இளவரசர், இளவரசி ஆகியோரை விட தாங்கள் நீண்ட வருடங்கள் நிறைவாக வாழ்வீர்கள் என்று கூறினார்.

அரசர் மிகவும் சந்தோசம் அடைந்து அவருக்கு பொன்னும் பொருளையும் பரிசாக கொடுத்தார்.

இரண்டு ஜோதிடர்களும் கூறியது ஒரே  கருத்தைத்தான். ஆனால்  பயன்படுத்திய வார்த்தைகள் தான் வேறு.



இன்றைய செய்திகள்

09.07.2024

√ மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஒருநபர் குழு அமைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

√ தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேலை: எச்சரிக்கையுடன் இருக்க தமிழக காவல்துறை அறிவுறுத்தல்.

√ வணிக பிரிவு கட்டிட மின் இணைப்புக்கு பணி நிறைவு சான்று பெறுவதில் விலக்கு: தமிழக மின்வாரியம் அறிவிப்பு.

√ உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு அளவை பெரிய எழுத்தில் அச்சிட இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் ஒப்புதல்.

√ மலைப்பகுதியில் சீனாவுக்கு பதிலடி கொடுக்க ‘ஜோராவர்’ இலகுரக பீரங்கி தயார்: 2027-ல் ராணுவத்தில் சேர்க்கப்படும்.

√ இந்தியா, அமெரிக்கா எச்சரித்த பிறகும் வெளிநாட்டு ஆய்வு கப்பலுக்கு தடை விதிக்க இலங்கை மறுப்பு.

√ இந்தோனேசியாவின் சட்டவிரோத தங்க சுரங்கத்தில் மண் சரிந்து 11 பேர் உயிரிழப்பு.

√ கோபா அமெரிக்க கால்பந்து: பனாமாவை பந்தாடி அரையிறுதிக்கு முன்னேறிய கொலம்பியா.

√ விம்பிள்டன் டென்னிஸ்; காலிறுதிக்கு முன்னேறினார் லோரென்சோ முசெட்டி மற்றும் ஜானிக் சின்னர்.


Today's Headlines

√ Tamil Nadu Chief Minister M.K.Stalin has ordered to set up a one-man committee to amend the Central Government's new criminal laws at the state level.

√ Working in Southeast Asian countries: Tamil Nadu police advises to be cautious.

√ Exemption in obtaining completion certificate for commercial section building electrical connection: Notification of Tamil Nadu Power Board.

√ Food Safety and Quality Commission of India approves to print sugar, salt and fat content in big letters on food packets.

√ 'Zoravar' light artillery ready to retaliate against China in the hills: to be inducted in 2027

√ Sri Lanka refuses to ban foreign survey ship despite warnings from India, US

√ Landslide kills 11 at illegal gold mine in Indonesia

√ Copa America: Colombia beats Panama and reached the semi-finals

√ Wimbledon Tennis;  Lorenzo Musetti and Janic Sinner advanced to the quarter-finals.

Prepared by

Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...