கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

₹200, ₹500 ஆகிய ரூபாய் நோட்டுகளை ஒழிக்க வேண்டும் - சந்திரபாபு நாயுடு...

₹200, ₹500 ஆகிய ரூபாய் நோட்டுகளை ஒழித்து டிஜிட்டல் கரன்சியை ஊக்குவிக்க வேண்டும் - சந்திரபாபு நாயுடு...


கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் செய்து சம்பாதித்த பணத்தில் அரசு நிர்வாக சிஸ்டத்தை வாங்க பார்க்கின்றனர். ரூ.500, ரூ.200 நோட்டுகளை ரத்து செய்து டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த வேண்டும் என்று ரூ.5,40,000 கோடி கடன் திட்டம் வெளியிட்டு முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார். ஆந்திர மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு கூட்டம், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமராவதி தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. 227வது எஸ்.எல்.பி.சி கூட்டத்தில் 2024-2025 நிதியாண்டுக்கான ரூ.5,40,000 கோடி கடன் திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டார்.


பின்னர் அவர் பேசியதாவது: டிஜிட்டல் பரிவர்த்தனையில் முதல் மூன்று மாநிலங்களில் ஆந்திர அரசு உள்ளது. அதனை முதல் இடத்திற்கு கொண்டு வர வேண்டும். வங்கிகளும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் ஊழலை குறைத்து உற்பத்தி பெருக்கலாம். நாட்டில் உள்ள கருப்புப் பணத்தை அகற்ற பிரதமர் மோடி அரசு 2016ல் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை திரும்பப் பெற்றது. பணத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க ரூ.2000 நோட்டுகள் கொண்டு வரப்பட்டு, அதன் பிறகு அவற்றையும் ரத்து செய்தது. கடந்த ஐந்தாண்டுகளில் ஊழல் செய்து சம்பாதித்த பணத்தில் அரசு நிர்வாக சிஸ்டத்தை வாங்க பார்க்கின்றனர். அவர்களின் ஊழலை தடுக்க ரூ.500, ரூ.200 நோட்டுகளை ரத்து செய்து டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தி ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


* ரூ.1,29,503 கோடி இழப்பு


ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு மின்சாரத் துறை குறித்த வெள்ளை அறிக்கையை நேற்று வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த ஐந்தாண்டுகளில் மின்துறை முற்றிலும் சீரழிந்தது. திறமையற்ற ஆட்சியில் என்ன நடக்கும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் ரூ.32,166 கோடி கட்டண உயர்வால் மக்கள் மீது சுமையை ஏற்றப்பட்டது. மின் துறையில் ரூ.49,596 கோடி கடன் ஏற்பட்டுள்ளது. கட்டண உயர்வால் 1 கோடியே 53 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்துறையில் மக்களுக்கும், அரசுக்கும் ரூ.1,29,503 கோடி இழப்பு ஏற்பட்டது. மின் வினியோகத்தில் ஏற்படும் இழப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns