கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...



10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...


IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

DATED : 10.07.2024

CORAM :

THE HONOURABLE MR.R.MAHADEVAN, ACTING CHIEF JUSTICE

and

THE HONOURABLE MR. JUSTICE MOHAMMED SHAFFIQ

Writ Petition Nos. 26084, 26133, 27571, 27807, 28291, 32081, 32218, 32698 and 35350 of 2023

and

Writ Miscellaneous Petition Nos. 35331 and 7354 of 2023



>>> உயர்நீதிமன்றத் தீர்ப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 சென்னை உயர்நீதிமன்றத்தில் TET  தேர்ச்சி பெற்று மீண்டும் பணியில் சேர TRB EXAM எழுத வேண்டும் என்ற தமிழக அரசு நிலைப்பாட்டை எதிர்த்து 410 பேர் வழக்கு தொடுத்தனர்.


அந்த வழக்கில் நாங்கள் ஏற்கனவே சீனியாரிட்டி லிஸ்டில் உள்ளோம் மேலும் TET தேர்ச்சி பெற்றுள்ளோம் தற்போதைய முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கழக அரசு வந்தால் TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படும் என்று உறுதி கூறினார்


ஆனால் தற்போது TRB EXAM பணி நியமனத்திற்கு வைக்கப்படுகிறது அதிலிருந்து எங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் நேரடியாக TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தனர்.


 அந்த வழக்கின் தீர்ப்பு  வழங்கப்பட்டது. அதில் வழக்கு தொடுத்த 400 பேருக்கு பணி நியமனம் செய்வதில் முன் உரிமை அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது...


410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் - சென்னை ஐகோர்ட் உத்தரவு...


10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு, தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


போட்டித் தேர்வு மூலம் தேர்வு என்ற அரசாணை அடிப்படையில், தகுதி தேர்வு அறிவிப்பை எதிர்த்து 410 ஆசிரியர்கள் மனு தாக்கல் செய்தனர்.


இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது.


இந்நிலையில், 2014 முதல் 2017ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில், 410 ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடைந்து, 10 ஆண்டாக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


மனு மீதான விசாரணையின்போது, முந்தைய காலத்தில் துவங்கிய தேர்வு நடைமுறையை கைவிட முடியாது என்றும், போட்டித்தேர்வு மூலம் தேர்வு என்று 2018ம் ஆண்டு முடிவை எதிர்வரும் காலத்தில் அமல்படுத்தியிருக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.


அதனால் 10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு, தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


188 பக்க தீர்ப்பு நகல் TET தேர்ச்சி பெற்றோர்  Seniority இல் உள்ளோர் நீதிமன்றம் சென்ற நிலையில்  410  பேருக்கும் பணி வழங்க வேண்டும் வெயிட்டேஜ் மற்றும் இட ஒதுக்கீட்டு முறையில் நீதிமன்றம் தீர்ப்பு...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School students staged road blockade in support of suspended teacher

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் School students staged road blockade in support of sus...