கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.07.2024...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.07.2024 - School Morning Prayer Activities...



திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்:கேள்வி

குறள் எண்:417

பிழைத்து உணர்த்தும் பேதமை சொல்லார் இழைத்துணர்ந்து
ஈண்டிய கேள்வி யவர்.

பொருள்: நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வி யறிவை உடையவர். (ஒருகால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும்,
பேதமையானவற்றைச் சொல்லார்.


பழமொழி :
Spare the rod and spoil the child.

அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவுவார்களா?


இரண்டொழுக்க பண்புகள் :

*எல்லோரிடமும் மரியாதையாகவும் இனிமையாகவும் பேசுவேன்.

*யாரிடமும் கெட்ட வார்த்தைகளை பேச மாட்டேன்.



பொன்மொழி :

படித்தால் வாழ்க்கையை மாற்ற முடிகிறதோ இல்லையோ, உங்களின் வாழ்க்கை பற்றிய பார்வையை மாற்றலாம்.

-------- இறையன்பு .ஐ .ஏ .எஸ்



பொது அறிவு :

1. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமையகம் அமைந்திருக்கும் இடம்?

விடை: பெங்களூரு

2. தமிழ்நாட்டின் உள்ள கடற்கரை நீளம்?

விடை: சுமார் 1000 கிலோமீட்டர்



English words & meanings :

Deeds- செயல்கள்,

Deportment-ஒழுக்கம்



வேளாண்மையும் வாழ்வும் :

நோயில்லா உலகை படைக்க!

இயற்கை வேளாண்மையை பின்பற்றுவோமாக



ஜூலை 12

மலாலா தினம் 

மலாலா யோசப்சையி (மாற்று: மலாலா யூசுஃப்சாய், ஆங்கிலம்: Malala Yousafzai பாசுதூ: ملاله یوسفزۍ‎, பிறப்பு 1997) என்பவர் பாகிசுத்தான் நாட்டின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மிங்கோரா எனும் சிற்றூரில் வசிக்கும் ஒரு மாணவி ஆவார். இவர் பெண்கள் உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளுக்காக அறியப்படுகிறார். இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பாடசாலை செல்வதற்கான தாலிபானின் தடையை மீறி இவர் பள்ளி சென்றுவந்தார். 2009ஆம் ஆண்டிலேயே இவரது பி.பி.சியின் உருது வலைப்பதிவு ஊடாக தானும் தனது ஊரும் பாக்கித்தானிய தாலிபானால் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட முயற்சி செய்யப்படுகிறது என்று விவரித்து வந்தார்.இருப்பினும் புனைபெயரில் எழுதிவந்தமையால் இவரது அடையாளம் தெரியாதிருந்தது. தொலைக்காட்சி நேர்முகமொன்றில் நேரடியாக தோன்றியதிலிருந்து பரவலாக அறியப்பட்டதுடன் பழைமைவாத தாலிபான்களின் இலக்கிற்கும் ஆளானார். பல விருதுகளைப் பெற்ற மலாலாவிற்கு பாக்கித்தானின் முதல் அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது. மலாலாவை அக்டோபர் 9, 2012 அன்று தாலிபான் சுட்டுக் கொல்ல முயன்றது.இவர் படுகாயம் அடைந்ததைத் தொடர்ந்து இதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. மிகவும் சிறுவயதில் அமைதி நோபல் பரிசுப் பெற்றவர் இவரேயாவார். 2013ஆம் ஆண்டு ஜூலை 12-ல் மலாலா தனது 16ஆவது பிறந்தநாள் அன்று ஐக்கிய நாடுகள் சபையை தொடர்புகொண்டு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இந்த நிகழ்வை ஐக்கிய நாடுகள் "மலாலா தினம்" என்று குறிப்பிட்டனர்.



நீதிக்கதை

எண்ணப்படி வாழ்வு

ஓர் ஊரில் ஒரு விறகு வெட்டி இருந்தான். அவன் நாள்தோறும் ஊர் எல்லையில் இருந்து காட்டுக்கு சென்று விறகுகளை வெட்டி அவற்றை ஊர் மக்களிடம் விற்று பிழைப்பு நடத்தி வந்தான்.

ஒரு நாள் அவன் வழக்கமாக விறகு வெட்டிக் கொண்டிருந்தான். அப்பொழுது அவனுக்கு களைப்பு ஏற்பட்டது. அங்கிருந்த ஒரு மரத்தின் நிழலில் படுத்தான். அந்த மரமானது நினைப்பதையெல்லாம் கொடுக்கும் மந்திர மரம் ஆகும்.

இந்த விஷயம் அவனுக்கு தெரியாது, அப்பொழுது தென்றல் காற்று சில்லென்று வீசியது. அது அவனுக்கு சுகமாக இருந்தது.  இம்மாதிரியான நேரத்தில் ஒரு பஞ்சுமெத்தை இருந்தால் எவ்வளவு நலமாக இருக்கும்  என்று அவன் மனதில் நினைத்தான்.

என்ன ஆச்சரியம்!

அடுத்த கணம் அவன் அருகில் ஒரு கட்டிலும் அதில் பஞ்சு மெத்தையும் வந்து சேர்ந்தது. விறகு வெட்டிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. உடனே அவன் அதில் ஏறிப் படுத்தான்.  விறகு வெட்டிக்கு ஒன்றுமே புரியவில்லை.  இவ்வளவு சுகங்கள் இருந்தும் வயிற்றுக்கு உணவில்லாமல் பட்டினியாக இருக்கிறோமே!  இப்பொழுது அறுசுவை உணவு இருந்தால் எவ்வளவு நலமாக இருக்கும் என்று எண்ணினான்.

மறுகணமே தங்கத்தட்டில் அறுசுவை உணவு வந்தது. பல வகை உணவுகள் வந்தன, விறகுவெட்டி அனைத்தையும் வயிறார உண்டான். “உண்ட மயக்கம் தொண்டனுக்கு உண்டு” என்ற பழமொழிக்கு ஏற்ப விறகு வெட்டிக்கு உறக்கம் வந்தது, படுத்தான். அவன் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தான்.நினைப்பதெல்லாம்  நடக்கின்றதே!

அவன் மனதில் திடீரென்று ஒரு பயம் தோன்றியது. “நாம் காட்டில் தனியாக அல்லவா  இருக்கிறோம்?. இப்பொழுது ஒரு சிங்கம் ஒன்று நம் முன் வந்தால் என்னவாகும்?” என்று நினைத்தான்.

மறுகணம் அவன் முன்னால் ஒரு சிங்கம் தோன்றியது.

நீதி : நம் எண்ணத்தின்படிதான் நம் வாழ்க்கை அமையும். நாம் உயர்ந்தவற்றை, நல்லதை எண்ணினால் நம் வாழ்க்கை நல்லதாகவே அமையும். தவறான எண்ணங்களை எண்ணினால் நம் வாழ்க்கை துன்பம் நிறைந்ததாக இருக்கும். எனவே நாம் உயர்ந்தவற்றையே நினைக்க வேண்டும்.



இன்றைய செய்திகள்

12.07.2024

🌸சி.ஏ. படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு: இதுவரை இல்லாத அளவில் தேர்ச்சி.

🌸அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட 200 புதிய பஸ்கள் விரைவில் இயக்கப்பட உள்ளன.

🌸நீட் விவகாரம்: முக்கிய குற்றவாளி பாட்னாவில் கைது.

🌸ஸ்டார்லைனர் விண்கலம் எங்களை பத்திரமாக பூமிக்கு கொண்டு வரும்.. விண்வெளி வீரர்கள் நம்பிக்கையுடன் விண்வெளியிலிருந்து பேட்டி.

🌸கோபா அமெரிக்க கால்பந்து: உருகுவே அணியை வீழ்த்தி கொலம்பியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.

🌸விம்பிள்டன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி.


Today's Headlines

🌸CA Exam results released: The number of passed people surpassed the so far results.

🌸200 new buses with sleeper and seater facility will soon be on road  by the Government Express Transport Corporation.

🌸NEET Case: Main accused arrested in Patna.

🌸The Starliner spacecraft will bring us safely to Earth.. Astronauts confidently gave interview from space.

🌸Copa America: Colombia beat Uruguay to advance to final.

🌸Wimbledon tennis: Italian player Lorenzo Musetti advanced to the semi-finals.

Prepared by

Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns