கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.07.2024...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.07.2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

பால் :பொருட்பால்

அதிகாரம்: அறிவு உடைமை

குறள் எண்:422
சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.

பொருள்: மனத்தைச் சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கி்க் காத்து நன்மையானதில் செலவிடுவதே அறிவாகும்.


பழமொழி :
A contended mind is a continual feet.

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து


இரண்டொழுக்க பண்புகள் :

1.என்னை விட வயதில் மூத்தோரை மரியாதையுடன் நடத்துவேன். என்னால் இயன்ற உதவிகளை அவர்களுக்கு செய்வேன்.

2.என்னை விட இளையோரிடம் அன்பாக நடந்து கொள்வேன்.
அவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பேன்.


பொன்மொழி :

தொட்டுத் தொட்டு பார்த்தால் அது வெறும் காகிதம், தொடர்ந்து படித்தால் அதுவே வெற்றியின் ஆயுதம்--- புத்தகம்.


பொது அறிவு :

1.இராஜ திராவகத்தின் கரைப்பானாகப் பயன்படுத்தபடும் உலோகம்?

விடை: தங்கம்

2. “ CALCULATOR ” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்?

விடை: எண்சுவடி


English words & meanings :

Fabricate- உருவாக்கு

Materialize-செயல்படுத்து



வேளாண்மையும் வாழ்வும் :

கருப்பு கவுனி அரிசி
பண்டைய சீன மற்றும் ஆசிய மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது, இந்த வகை அரிசியை “அரச உணவு” என்றும் “பேரரசர் உணவு” என்றும் கூறுவதுண்டு.



நீதிக்கதை

ஒற்றுமையே வலிமை

பசி தாங்க முடியாத இரண்டு எலிகள் தாங்கள் தங்கி இருந்த வீட்டின் சமையலறைக்குள் நுழைந்தன. அங்கே பெரிய  பானை நிறைய பால் இருந்தது. அது மிகவும் உயரமான பானை. அதனால் எலிகளால் பாலை குடிக்க முடியாமல் திண்டாடின.

இதை அடுத்து இரு எலிகளும்  ஒரு முடிவுக்கு வந்தன.ஓர் எலியின் மீது மற்றொரு எலி ஏறி பாலை குடிப்பது  என முடிவு செய்துவிட்டு பாலை குடிக்க சென்றன.

அதன்படி  ஓர் எலி கீழே நின்று கொண்டது. அதன் மேல் ஏறி இன்னொரு எலி பாலை குடித்துக்கொண்டிருந்தது. அப்போது கீழே உள்ள எலி திடீரென "சீக்கிரம் இறங்கு, நான் பாலை குடிக்க வேண்டும்" என்று  சத்தம் போட்டது.

கீழே உள்ளே எலி சத்தம் போட்டதை கேட்டு மேலே உள்ள எலி பயந்து  பால் பானைக்குள் விழுந்து விட்டது. இதைக் கண்ட கீழே இருந்த எலி 'இனி  மீதமுள்ள பால் முழுவதும் நமக்குத்தான்'  என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டே பாத்திரத்தை சுற்றி சுற்றி வந்தது ஆனால் மேல் ஏறி குடிக்க இயலவில்லை.

நீதி: ஒற்றுமையுடன் இருந்தால் எதையும் அடையலாம். ஒற்றுமை நீங்கினால் நமக்கு தீமையை ஏற்படும்.



இன்றைய செய்திகள்

19.07.2024

* புதிய மாநகராட்சிகள் உருவாக்க வருவாய் மற்றும் மக்கள் தொகை வரம்புகளை குறைத்தல், சென்னையில் கழிவுநீர் இணைப்பை கட்டாயமாக்குதல், சென்னை காவல் சட்டத்தை மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்தல் உள்ளிட்ட 4 சட்டத்திருத்த மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

* ஒகேனக்கல்லில் நீர்வரத்து நாளை அதிகாலை 50,000 கன அடியாக உயர வாய்ப்பு. கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் ஆர்ப்பரிக்கும் காவிரி.

* உத்தரப் பிரதேசம் கோண்டா பகுதியில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியுள்ளது.

* ஈ, கொசு மூலமாக பரவும் உயிர்க்கொல்லி நோய்! சாதாரண காய்ச்சல்னு நினைக்க வேண்டாம்! சண்டிபுரா வைரஸ் பற்றி நிபுணர்கள் எச்சரிக்கை பதிவு.

* பூமிக்கு மிக நெருக்கமாக 28,000 கி.மீ வேகத்தில் 290 அடி அளவுள்ள விண்கல் ஒன்று செல்ல உள்ளதாக நாசா கூறியுள்ளது. இது பூமியின் மீது மோதினால் பேரழிவு ஏற்படும் என்றும் நாசா எச்சரித்துள்ளது.

* பூபதி குமார் அரைசதம் விளாச திண்டுக்கல் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் 2வது வெற்றி பெற்றது.தமிழகத்தில் டி.என்.பி.எல்., எட்டாவது சீசன் நடக்கிறது.

* இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


Today's Headlines

* Tamil Nadu Governor RN Ravi has approved 4 amendment bills including reducing revenue and population limits for creation of new Municipal Corporations, making sewage connection mandatory in Chennai, and extending the Chennai Police Act to other cities.

* The water flow in Okanakkal is likely to rise to 50,000 cubic feet by tomorrow morning.  Cauvery flowing with roar as the water released from Karnataka dams.

* Passenger train derailed in Konda area of ​​Uttar Pradesh.

* A deadly disease spread by mosquitoes!  Don't think it's just a flu!  Experts warn about Chandipura virus.

* A 290-foot-sized meteorite is about to pass very close to Earth at 28,000  km  speed NASA says.  NASA has also warned that it will be catastrophic if it hits the Earth.

* Bhupathi Kumar's half-century Dindigul team bagged  the 2nd winning by 8 wickets. The eighth season of TNPL is going on in Tamil Nadu.

* India will tour Sri Lanka in a series consisting of three T20Is and three ODIs.  The Indian team for this has been announced.

Prepared by

Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...