கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TETOJAC சார்பில் அரசாணை எண் 243 இரத்து உள்ளிட்ட 31 அம்சக் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெறும் போராட்ட வடிவங்கள் மாற்றம் - 09.07.2024 அன்று நடைபெற்ற டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு கூட்ட முடிவுகள்...

 


 தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் ( டிட்டோஜாக் - TETOJAC ) சார்பில் அரசாணை எண் 243 இரத்து உள்ளிட்ட 31 அம்சக் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெறும் போராட்ட வடிவங்கள் மாற்றம் - 09.07.2024 அன்று நடைபெற்ற டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு  கூட்ட முடிவுகள்...


டிட்டோஜாக் பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழு கூட்டம்  09.07.2024 அன்று மாலை 7 மணி முதல் 9.45 மணி வரை காணொளி வாயிலாக நடைபெற்றது. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் திரு. கே.பி.ரக்ஷித் அவர்கள் தலைமையேற்றார் .  டிட்டோஜாக் பேரமைப்பில் இணைந்துள்ள  அனைத்து இயக்கங்களின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை அழுத்தமாகப் பதிவிட்டனர்.


அனைவரின்  கருத்துக்களின் அடிப்படையில் கீழ்க்கண்ட முடிவுகள் ஒருமித்து எடுக்கப்பட்டன.


1. ஏற்கனவே டிட்டோஜாக் அறிவித்த ஜூலை 31ஆம் தேதி வரையிலான கருப்புப்பட்டை அணிந்து பள்ளிக்குச் செல்லும் போராட்டம் முழு வீச்சோடு அமல்படுத்துவது..


2. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஜூலை 10 முதல் 31 வரையிலான மாலை நேர ஆர்ப்பாட்ட போராட்டங்கள் ரத்து செய்யப்படுகின்றன.


3. ஜூலை 29, 30,31 ஆகிய மூன்று நாட்கள் சென்னையில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாபெரும் டிபிஐ தொடர் முற்றுகைப் போராட்டம்.


4. அரசாணை 243 இரத்து உள்ளிட்ட 31 அம்சக் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெறும் டி.பி.ஐ. வளாக முற்றுகைப் போராட்டத்தை எழுச்சியுடன் நடத்துவது தொடர்பாக ஜூலை 14 ஆம் தேதி திருச்சியில்  டிட்டோஜாக் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட டிட்டோஜாக்  ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம்


5. ஜூலை 21ஆம் தேதி மாவட்டத் தலைநகரில் மாநில டிபிஐ முற்றுகை போராட்ட ஆயத்த கூட்டங்களை நடத்துவது


மேற்கண்ட தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன.


இப்படிக்கு
கே பி ரக் ஷித்
(சுழல் தலைமை)
மாநில டிட்டோஜாக் உயர்மட்ட குழு உறுப்பினர்
மற்றும் மாநிலத் தலைவர், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Selected Candidates in Thirukkural Quiz held yesterday 21-12-2024 - Karur District

    நேற்று 21-12-2024 நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் - கரூர் மாவட்டம்  List of Selected Candidates ...