கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.08.2024...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.08.2024  - School Morning Prayer Activities...


திருக்குறள்:

பால் :பொருட்பால்

அதிகாரம்: காலம் அறிதல்

குறள் எண்:487

பொள்ளென ஆங்கே புறம் வேரார், காலம் பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

பொருள்: அறிவுடையவர், (பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ள மாட்டார்,(வெல்வதற்கு ஏற்ற )காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வர்.


பழமொழி :
பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே

A man without money is a bow without an arrow


இரண்டொழுக்க பண்புகள் : 

*எனக்கு வழங்கப்பட்ட வேலைகளை உரிய நேரத்தில் முடிப்பேன் .    

*எனது கடமைகளை சரிவர செய்து, உரிமைகளைப் பெறுவேன்.


பொன்மொழி :

கற்றலைப் பற்றிய அழகான விடயம் என்னவென்றால், அதை உங்களிடமிருந்து யாராலும் பறிக்க முடியாது. –பி.பி. கிங்


பொது அறிவு :

1. இந்திய கடற்கரையின் நீளம்..

விடை :6100 கிலோ மீட்டர்

2. தமிழ்நாட்டின் கடற்கரை நீளம்.

விடை :1076 கிலோ மீட்டர்


English words & meanings :

bit-துண்டு,

smidgen-சிறிதளவு

வேளாண்மையும் வாழ்வும் :

வேளாண்மை செழிக்க நல்ல மழை, நீர் வளம், நல்ல மண், நல்ல விதைகள் தேவை.
நம் முன்னோர்களின் மழை மானி குறித்து பார்ப்போம்


ஆகஸ்ட் 21

உசைன் போல்ட் அவர்களின் பிறந்தநாள்

உசைன் போல்ட் என்கிற உசேன் செயிண்ட் லியோ போல்ட் (Usain St. Leo Bolt, பிறப்பு: ஆகத்து 21, 1986) யமேக்காவில் பிறந்த தடகள ஆட்டக்காரர். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 9.69 நொடி நேரத்தில் 100 மீட்டர் விரைவோட்டத்தை ஓடி உலகச் சாதனை பெற்றார். அத்துடன் 200 மீ ஓட்டம் (19.30 வினாடி) போட்டியிலும் ஒலிம்பிக் மற்றும் உலக சாதனைகளைப் புரிந்தவர்; தன் நாட்டு சக வீரர்களுடன் இணைந்து 4 x 100 மீ தொடரோட்டத்தில் 37.10 வினாடிகளில் ஓடி சாதனை புரிந்தார். இவை அனைத்தையும் போல்ட்டு 2008 பெய்ஜிங் கோடை ஒலிம்பிக்கில் நிகழ்த்தினார்.2003இல் 200 மீட்டர் விரைவோட்டத்திலும் உலக இளையோர் சாதனை படைத்தார். ஒலிம்பிக்கின் மூன்று விரைவோட்டப் பந்தயங்களின் (100 மீ, 200 மீ மற்றும் 4 x 100 மீ) நடப்பு முதன்மை வீரன் (சாம்பியன்), ஒன்பது முறை உலக முதன்மை வீரன், ஒலிம்பிக் விரைவோட்டப் பந்தையங்களில் ஆறு தங்கப் பதக்கங்களை வென்ற முதல் வீரர், இம்மூன்று விரைவோட்டப் பந்தயங்களின் நடப்பு உலக சாதனைகளின் சொந்தக்காரர் எனப் பல சிறப்புகள் போல்ட்டைச் சாரும்.


நீதிக்கதை

குரு கற்பித்த வித்தை

சிறுவன் ஒருவன் ஜூடோ பழக விரும்பினான்.  ஏற்கனவே ஏற்பட்ட விபத்தில் அவன் இடது கையை இழந்து விட்டான். எனினும் இந்த குறையை பொருட்படுத்தாமல்  குரு ஒருவர் அவனுக்கு ஜூடோ கற்றுக் கொடுக்க  ஒப்புக்கொண்டார்.

தினமும் பயிற்சி அளித்தார் ஆனால் ஒரே ஒரு குத்து வித்தையை மட்டுமே  கற்றுக்கொடுத்தார்.

நான்கைந்து மாதங்கள் சென்றன.  அப்போதும் அதே பயிற்சிதான் தொடர்ந்தது. சிறுவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் தொடர்ந்து பயிற்சியை மேற்கொண்டான்.

ஒருநாள் சிறுவன் குருவிடம் கேட்டு விட்டான். ஆனால் அதற்கு குரு "இந்த ஒரே ஒரு குத்து  மட்டும் போதும்" என்று கூறினார். நாட்கள் கடந்தன. குரு சிறுவனை போட்டிக்கு அனுப்பி வைத்தார்.

ஒரு கை இல்லாமல்  போட்டிக்கு வந்த அவனை  அனைவரும் அற்பமாய் பார்த்தனர். ஆனால் இறுதியில் சிறுவனே வென்றான். தன்னை எதிர்த்த பலசாலிகள் பலரையும் வீழ்த்தி விட்டான். எல்லோருக்கும் ஆச்சரியம் சிறுவனுக்கும் தான்.

அப்போது சிறுவன் குருவை பார்த்து, " எப்படி குருவே என்னால் ஒரு கையை மட்டும் வைத்துக் கொண்டு ஒரே ஒரு குத்துப் பயிற்சியை மட்டுமே பெற்ற என்னால் எப்படி வெற்றி பெற முடிந்தது?" என்று கேட்டான்.

அதற்கு குரு  " இரண்டு காரணங்கள், ஒன்று நீ பயிற்சி பெற்றது ஜூடோவிலேயே மிகவும் கடினமான குத்து பயிற்சி. இரண்டாவது இந்த குத்தை தடுக்க வேண்டும் என்றால் குத்துபவனின் இடது கையை மடக்க வேண்டும். அது உன்னிடம் இல்லை அல்லவா?அதனால் தான் நீ வெற்றி பெற்றாய்" என்று கூறினார்.

குருவுக்கு ஆத்மார்த்தமாக நன்றி சொன்னான் சிறுவன்.

நீதி: தன்னம்பிக்கையும், முறையான பயிற்சியும் இருந்தால்  எவரும் வெற்றி பெறலாம்.


இன்றைய செய்திகள்

21.08.2024

* பர்கூர் வன்கொடுமை எதிரொலி: தனியார் பள்ளிகளில் என்சிசி, என்எஸ்எஸ் முகாம்களுக்கு அரசு புதிய கட்டுப்பாடுகள்.

* ஓர் இடத்துக்கு 4 மாணவர்கள் போட்டி: எம்பிபிஎஸ், பிடிஎஸ்  கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்குகிறது.

* மத்திய பொதுத் துறை நிறுவனத்தின் உதவியுடன் சென்னை ஐஐடி-யில் ரூ.16.5 கோடியில் நவீன உடற்கூறியல் ஆய்வகம்.

* UPSC லேட்ரல் என்ட்ரி: நேரடி நியமன அறிவிப்பு விளம்பரத்தை ரத்து செய்து மத்திய அரசு நடவடிக்கை.

* குரங்கு அம்மை பாதிப்பை கண்டறிய தயார் நிலையில் இருக்க வேண்டும்: வைரஸ் ஆராய்ச்சி ஆய்வகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.

* சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜன்னிக் சின்னெரும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் சபலென்காவும் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

* சர்வதேச டி20 கிரிக்கெட்; ஒரு ஓவரில் அதிக ரன்கள்- யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த சமோவா வீரர்.


Today's Headlines

* Barkur atrocities reverberate: Govt new restrictions on NCC, NSS camps in private schools

*  4 students compete for one seat: MBBS, BDS counseling starts online today.

* 16.5 Crore State-of-the-Art Anatomy Laboratory at IIT Chennai with the help of a Central Public Sector Undertaking.

* UPSC Lateral Entry: Central Govt Moves to Cancel Direct Recruitment Notification Advertisement

* Be prepared to detect monkey measles outbreaks: Central government instructed  to virus research laboratories.

* Cincinnati Open Tennis: Jannik Sinner won men's singles title, Sabalenka won women's singles title.

* International T20 Cricket; Highest runs in an over -  Samoan player broke the record of Yuvraj Singh.

Prepared by

Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...