கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சுவர் இடிந்து இறந்த குழந்தைக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட வழக்கு - மேல்முறையீடு செய்த அரசு அலுவலருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் - சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு உத்தரவு...

 


மதுரை அருகே இலங்கை அகதிகள் முகாமில் சுவர் இடிந்து இறந்த குழந்தைக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட வழக்கு...


மேல்முறையீடு செய்த அரசு அலுவலருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு உத்தரவு...


சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் குடித்து இறந்து போனவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுப்பதற்கு அரசிடம் நிதி உள்ளது


சுவர் இடிந்து உயிரிழந்த குழந்தை குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் கொடுக்க முடியாதா?


வெட்கமாக இல்லையா? எவ்வாறு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்தீர்கள்?


மேல்முறையீடு தாக்கல் செய்த அதிகாரிக்கு ரூ.50,000 அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு.


மதுரை திருவாதவூர் அகதிகள் முகாமைச் சேர்ந்த அதிபதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் செய்த மனுவில், “என் 11 வயது மகள் சரண்யா 6ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சரண்யா உயிரிழந்தார். அதற்காக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்” என 2014ஆம் ஆண்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். முன்னதாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சிறுமி உயிரிழப்புக்கு காரணம் அரசு தான். இந்த சுவரை கட்டிக் கொடுத்தது அரசு தான். இதற்கு அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும். இதனால் மனுதாரருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு அரசு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும், அங்குள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் கண்ணியமான முறையில் நடத்த வேண்டும் எனவும் உத்தரவில் சுட்டிக் காட்டி இருந்தார். இதனைத் தொடர்ந்து, சரண்யாவின் தந்தை ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், சிறுமிக்கு 5 லட்சம் பணம் வழங்க பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி அரசுத் தரப்பில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


இந்த மனு  நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போது நீதிபதிகள், கள்ளக்குறிச்சியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் அருந்தி இறந்து போனவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் பணம் கொடுப்பதற்கு அரசிடம் நிதி உள்ளது. ஆனால், ஒரு குழந்தை சுவர் இடிந்து விழுந்து இறந்துள்ளது. அதற்கு உரிய நிதி கொடுக்க முடியாமல் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது  வெட்கமாக இல்லையா? எவ்வாறு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்தீர்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அரசின் மனுவை தள்ளுபடி செய்து, மேல் முறையீடு தாக்கல் செய்த அதிகாரிக்கு ரூபாய் 50,000 அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Live Webinar Link for Head Masters and English Teachers

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான Live Webinar Link  (THOOTHUKKUDI, VILLUPURAM, SALEM, DHARMAPURI, ERODE, TANJAVUR Dt only) ...