கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இழப்பீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இழப்பீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

₹ 1.1 lakh compensation for insect bite while traveling in bus - Court orders



 பேருந்தில் பயணித்தபோது பூச்சி கடித்ததால் ₹ 1.1 லட்சம் இழப்பீடு - நீதிமன்றம் உத்தரவு


₹ 1.1 lakh compensation for insect bite while traveling in bus - Court orders


 கர்நாடகா  தனியார் பேருந்தில் பயணித்தபோது பூச்சி கடித்ததால் வருமானம் இழந்ததாக வழக்கு தொடர்ந்த தீபிகா என்பவருக்கு, ₹1.1 லட்சம் இழப்பீடாக வழங்குமாறு பேருந்து நிறுவனத்திற்கு தக்ஷினா கன்னடா மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு


2022 ஆகஸ்டில் பூச்சி கடித்ததால் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனதுடன், மருத்துவமனை செலவு, மன உளைச்சல் ஆகியவற்றை எதிர்கொண்டதாக தீபிகா மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


தனியார் பேருந்தில் மூட்டை பூச்சி தொல்லை… பயணி தொடர்ந்த வழக்கில் மொத்தம் ரூ. 1.29 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு


இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த தீபிகா நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினார். விசாரணையில் பஸ் நடத்துனர், பேருந்தை பட்டியலில் சேர்த்த ஆப் ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.


தனியார் பேருந்தில் பயணம் செய்தபோது மூட்டை பூச்சிகள் கடித்ததாக கூறி,பயணி தொடர்ந்த வழக்கில் அவருக்கு ரூ. 1.11 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கர்நாடகாவில் 2022 ஆகஸ்ட் 16 ஆம் தேதியன்று தீபிகா என்பவர் ஸ்லீப்பர் வகுப்பில் தனியார் பேருந்தில் மங்களூருவிலிருந்து பெங்களூருவுக்கு சென்றுள்ளார் சென்றுள்ளார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்  ராஜா – ராணி என்ற தொடரில் கலந்து கொள்வதற்காக  தீபிகாவும் அவரது கணவர் சோபராஜ் என்பவரும் தனியார் மொபைல் ஆப்-ல் டிக்கெட் புக் செய்து பயணம் மேற்கொண்டனர்.


அப்போது இருக்கையில் இருந்த மூட்டை பூச்சிகள் தீபிகாவை கடித்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், ராஜா ராணி நிகழ்ச்சியில் அவரால் பங்கேற்க முடியவில்லை.


இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த தீபிகா நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினார். விசாரணையில் பஸ் நடத்துனர், பேருந்தை பட்டியலில் சேர்த்த ஆப் ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.


அபராதமாக ரூ. 18,650, டிக்கெட் கட்டணம் ரூ. 850, வழக்கு தொடர்ந்ததற்கான செலவு உள்பட மொத்தம் ரூ. 1.29 லட்சத்தை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



பேருந்தில் படியில் பயணித்த மாணவன் விபத்தில் இறப்பு - ரூ.49 லட்சம் இழப்பீடு கேட்ட குடும்பம் - எதிர்பாரா தீர்ப்பு கொடுத்த நீதிபதி...



பேருந்தில் படியில் பயணித்த மாணவன் விபத்தில் இறப்பு - ரூ.49 லட்சம் இழப்பீடு கேட்ட குடும்பம் - எதிர்பாரா தீர்ப்பு கொடுத்த நீதிபதி...

 

பேருந்து படிக்கட்டில் பயணித்து தவறி விழுந்து உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க முடியாது என சென்னை மோட்டார் வாகன தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை கொளத்துரை சேர்ந்த ஒரு  மாணவர் டந்த 2019 ம் ஆண்டு பள்ளிக்கு செல்ல பேருந்து படிக்கட்டில் தொங்கியப்படி பயணம் செய்த போது, தவறி விழுந்து உயிரிழந்தார். இதற்கு அரசு பேருந்து ஓட்டுனரின் அலட்சியமை காரணம் என்றும் 49 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரியும் மாணவனின் குடும்பத்தினர்  சென்னை மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். பேருந்து ஓட்டுனரும், நடத்துனரும் அறிவுறுத்தியும்  கேட்காமல்,  ஜன்னல் கம்பியை பிடித்தவாறு பேருந்து படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணித்ததே மாணவன் உயிரிழப்பிற்கு காரணம் என்று  சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, மாணவரின் கவனக் குறைவு தான் அவரின் உயிரிழப்பு காரணம் எனக் குறிப்பிட்டு, இதற்காக மாநகர போக்குவரத்து கழகத்திடம் இழப்பீடு கோர முடியாது என்றும்  உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.



சுவர் இடிந்து இறந்த குழந்தைக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட வழக்கு - மேல்முறையீடு செய்த அரசு அலுவலருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் - சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு உத்தரவு...

 


மதுரை அருகே இலங்கை அகதிகள் முகாமில் சுவர் இடிந்து இறந்த குழந்தைக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட வழக்கு...


மேல்முறையீடு செய்த அரசு அலுவலருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு உத்தரவு...


சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் குடித்து இறந்து போனவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுப்பதற்கு அரசிடம் நிதி உள்ளது


சுவர் இடிந்து உயிரிழந்த குழந்தை குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் கொடுக்க முடியாதா?


வெட்கமாக இல்லையா? எவ்வாறு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்தீர்கள்?


மேல்முறையீடு தாக்கல் செய்த அதிகாரிக்கு ரூ.50,000 அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு.


மதுரை திருவாதவூர் அகதிகள் முகாமைச் சேர்ந்த அதிபதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் செய்த மனுவில், “என் 11 வயது மகள் சரண்யா 6ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சரண்யா உயிரிழந்தார். அதற்காக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்” என 2014ஆம் ஆண்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். முன்னதாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சிறுமி உயிரிழப்புக்கு காரணம் அரசு தான். இந்த சுவரை கட்டிக் கொடுத்தது அரசு தான். இதற்கு அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும். இதனால் மனுதாரருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு அரசு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும், அங்குள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் கண்ணியமான முறையில் நடத்த வேண்டும் எனவும் உத்தரவில் சுட்டிக் காட்டி இருந்தார். இதனைத் தொடர்ந்து, சரண்யாவின் தந்தை ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், சிறுமிக்கு 5 லட்சம் பணம் வழங்க பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி அரசுத் தரப்பில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


இந்த மனு  நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போது நீதிபதிகள், கள்ளக்குறிச்சியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் அருந்தி இறந்து போனவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் பணம் கொடுப்பதற்கு அரசிடம் நிதி உள்ளது. ஆனால், ஒரு குழந்தை சுவர் இடிந்து விழுந்து இறந்துள்ளது. அதற்கு உரிய நிதி கொடுக்க முடியாமல் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது  வெட்கமாக இல்லையா? எவ்வாறு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்தீர்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அரசின் மனுவை தள்ளுபடி செய்து, மேல் முறையீடு தாக்கல் செய்த அதிகாரிக்கு ரூபாய் 50,000 அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.




உள்ளாட்சித் தேர்தல் பணியின் போது இறப்பு / காயம் ஏற்படும் தேர்தல் பணியாளர்களின் (Polling Personnel) வாரிசுகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி அரசாணை G.O.Ms.No.103, Dated: 18-06-2024 வெளியீடு...

 

உள்ளாட்சித் தேர்தல் பணியின் போது இறப்பு / காயம் ஏற்படும் தேர்தல் பணியாளர்களின் (Polling Personnel) வாரிசுகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி அரசாணை G.O.Ms.No.103, Dated: 18-06-2024 வெளியீடு...








Government Ordinance G.O.Ms.No.103, Dated: 18-06-2024 Issued to increase the amount of compensation to be paid to the heirs of polling personnel who are died / injured during local body election work...


ABSTRACT
Elections - Ordinary Elections to Local Bodies / Casual Elections to Local Bodies.Payment of ex-gratia compensation to the polling personnel / legal heirs of polling personnel who die or sustain injuries while on election duty - Revised slabs.Sanctioned - Orders - Issued.

Rural Development and Panchayat Raj (PR-1(1)) Department
G.O.(Ms) No.103, Dated: 18.06.2024

Read:
1. G.O. (Ms) No.69, Rural Development and Panchayat Raj (PR-1) Department, dated 08.07.2013.
2. G.O.Ms.No.303, Public (Elections-II) Department, dated 09.05.2019
3. From the Secretary, Tamil Nadu State Election Commission, letter Rc. No.AC2/6111/2023, dated 26.12.2023

ORDER.
In the Government Order first read above, orders have been issued providing for the payment of ex-gratia compensation amount to the polling personnel/legal heirs of polling personnel who die or sustain injuries while on election duty the Ordinary Elections to Local Bodies, 2011 and future Ordinary / Casual Elections to Local Bodies be made as detailed below:-

1. Rs.5,00,000/-(Rupees five lakhs only) in case of death.

2. Rs.10,00,000/-(Rupees ten lakhs only) in case of death caused due to any violent acts of extremist or unsocial elements like road mines,bomb blasts, armed attacks etc.

3. Rs.2,50,000/- (Rupees two lakhs and fifty thousand only) in case of permanent disability like loss of limb, eye sight etc.

4. The above amount shall be paid in double, i.e. Rs.5,00,000/-(Rupees five lakhs only) in case of such mishaps being caused by extremists or unsocial elements.

5. Rs.10,000/-(Rupees ten thousand only) in case of minor injury.



(ii)
. The Secretary, Tamil Nadu State Election Commission has further requested that the following clause may also be incorporated while issuing the orders in this regard.
"The payment will cover any mishap occurred during the entire period of election duty connected with polling. A person is to be treated on election duty as soon as he leaves his residence / office to report for any election related duty including training and until he reaches back his residence / office after performance of his election related duty. If any mishap takes place during this period, it should be treated as having occurred on election duty subject to condition that there should be a casual connection between occurrence of death / injury and the election duty"

6. After careful examination the Government have decided to accept the proposal of the Secretary, Tamil Nadu State Election Commission and accordingly the Government order that the payment of ex-gratia compensation to the polling personnel/legal heirs of polling personnel who die or sustain injuries while on election duty during the Ordinary Elections to Local Bodies, 2024 and future Ordinary Elections to Local Bodies / Casual Elections to Local Bodies as details below:-


(i) An amount of Rs.15 Lakhs as the minimum amount to be paid to the next of kin of the official in the unfortunate event of death of the official while on election duty.
(ii) If the death is unfortunately caused due to any violent acts of extremist or unsocial elements like road mines, bomb blasts, armed attacks, etc., the amount of compensation would be Rs.30 Lakhs.
(iii) In case of permanent disability, like loss of limb, eye sight, etc., a minimum ex-gratia payment of Rs.7.5 Lakhs would be given to the official(which would be doubled in the case of such mishaps being caused by extremist or unsocial elements as aforesaid).
(iv) Rs.40,000/- in case of minor injury.

7. The Government also order that the payment will cover any mishap occurred during the entire period of election duty connected with polling. A person is to be treated on election duty as soon as he leaves his residence I office to report for any election related duty including training and until he reaches back his residence / office after performance of his election related duty. If any mishap takes place during this period, it should be treated as having occurred on election duty subject to condition that there should be a casual connection between occurrence of death / injury and the election duty.


8. The expenditure shall be debitable to the following head of account to which the expenditure on Local Body Elections is booked:-

2015-00 ELECTIONS - 109 Charges for conduct of election to Panchayats /Local Bodies - State's Expenditure -AA. Elections to Panchayats -351. Compensation -02. Other Compensation.
(DPC 2015-00-109-AA-35102).


This order is issued with the concurrence of Finance Department vide its U.O. No.118/Fin(RD)/2024, Dated 12.06.2024.
(By Order of the Governor)
P. SENTHILKUMAR,
Principal Secretary to Government.


கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.(Ms) No.831, Dated: 03-12-2021) வெளியீடு (G.O Ms. No. 831 Dt: December 03, 2021 -Disaster Management - Natural Calamities- Ex-gratia payment to next of kin of the deceased due to COVID-19 from State Disaster Response Fund (SDRF)- Amendment in revised list of Items and Norms of assistance from State Disaster Response Fund (SDRF) - Amendment-Orders - issued.)...





கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.(Ms) No.831, Dated: 03-12-2021) வெளியீடு...


(G.O Ms. No. 831 Dt: December 03, 2021   -Disaster Management - Natural Calamities- Ex-gratia payment to next of kin of the deceased due to COVID-19 from State Disaster Response Fund (SDRF)- Amendment in revised list of Items and Norms of assistance from State Disaster Response Fund (SDRF) - Amendment-Orders - issued.)







கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் குறைந்து வரும் நிலையில், தென்னாப்பிரிக்காவில் உருவான ஒமைக்ரான் தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


மாநில பேரிடர் நிதியில் இருந்து நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு ஏற்கனவே நிவாரணம் பெற்றவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. கொரோனாவால் பெற்றோர்களை இழந்து ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம் நிவாரணம் பெற்றவர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தாது எனவும் தெரிவித்துள்ளது.


ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆம்புலன்ஸ் வசதி இருக்க வேண்டும்: உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு...



 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆம்புலன்ஸ் வசதி இருக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு...


கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்காமங்கலத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: 

என் மனைவியை பிரசவத்திற்காக கடந்த 25.6.2012ல் ராஜாக்காமங்கலம் ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தேன். மறுநாள் காலை பெண் குழந்தை பிறந்தது. ஆனால், பிரசவத்திற்கு பின் அதிகளவில் ரத்தம் வெளியேறியது. சிகிச்சையளித்த மருத்துவர்கள், உடனடியாக என் மனைவியை ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் எனக் கூறினர். ஆனால் அங்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லாததாலும், தாமதமாக அழைத்துச் செல்லப்பட்டதாலும் அங்கு என் மனைவி இறந்தார். எனவே, என் மனைவி இறப்புக்காக ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.



இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு: 

மனுதாரரின் மனைவிக்கு உடனடியாக மருத்துவர்களும் தேவையான மருந்து மற்றும் முதலுதவியை கொடுத்துள்ளனர். ஆனாலும், ரத்தக்கசிவு நிற்கவில்லை. இதனால் ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு மாற்றக் கூறியுள்ளனர். ஆம்புலன்ஸ் இல்லாததால்தான் பிரச்னை துவங்கியுள்ளது. ஆம்புலன்ஸ் வருவதற்காக அரைமணி நேரம் வீணாகியுள்ளது. சுமார் 1.15 மணி நேரத்திற்கு பிறகே இறந்துள்ளார். தாமதமின்றி அவரை மாற்றியிருந்தால் உயிரை காப்பாற்றி இருக்கலாம். இதுபோன்ற நேரத்தில் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வசதி இருக்க வேண்டும். ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் இருக்கக் கூடாது. காத்திருந்த நேரத்தில் அதிகளவு ரத்தம் வெளியேறியதே இறப்புக்கு காரணமாகியுள்ளது. எனவே, பொது சுகாதாரத்துறை முதன்மை செயலர் தரப்பில் மனுதாரருக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டை மூலதன நிதியில் இருந்து 8 வாரத்திற்குள் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


தேர்தல் பணியின் போது விபத்தில் இறந்த ஆசிரியர் குடும்பத்திற்கு ரூபாய் 15 லட்சம் நிதி உதவி - கனிமொழி எம்.பி. வழங்கினார்...

 தேர்தல் பணியின் போது விபத்தில் இறந்த ஆசிரியர் குடும்பத்திற்கு ரூபாய் 15 லட்சம் நிதி உதவி - கனிமொழி எம்.பி. வழங்கினார்...



G.O.No.53 - கொரோனாவால் உயிரிழக்கும் செய்தியாளர்களுக்கான இழப்பீடு 5 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு...

 அரசாணை (நிலை) எண்: 53, நாள்: 31-05-2021 - கொரோனா வைரஸ் நோய் தொற்றால் உயிரிழக்கும் செய்தியாளர்கள் - வாரிசுகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகை 5 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு...



கொரோனாவால் இறந்த அரசு ஊழியருக்கு ரூ.25 லட்சம் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் இணைக்க வேண்டியவை - ஊரக வளர்ச்சி ஆணையரின் கடிதம்...

 கொரோனாவால் இறந்த அரசு ஊழியருக்கு ரூ.25 லட்சம் பெறுவதற்கான  விண்ணப்பப் படிவம் மற்றும் இணைக்க வேண்டியவை குறித்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையரின் கடிதம்...


>>> விண்ணப்பப் படிவம் மற்றும் இணைக்க வேண்டியவை குறித்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையரின் கடிதம்...


கொரோனா தொற்றால் மறைந்த செய்தியாளர்களின் வாரிசுகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இழப்பீட்டு தொகை விண்ணப்பம்...


 கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மறைந்த செய்தியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இழப்பீட்டு தொகை பெறுவதற்கான விண்ணப்பம்...


>>> விண்ணப்பப் படிவம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கொரோனா தொற்றால் உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க தமிழக அரசு உத்தரவு...

 கொரோனா தொற்றால் உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க தமிழக அரசு உத்தரவு...


செய்தி வெளியீடு எண்: 117, நாள்: 20-05-2021...




அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள் எதிர்பாராத விபத்துக்களினால் இறந்தாலோ அல்லது பலத்த காயங்கள் ஏற்பட்டாலோ பாதிப்பு அடையும் மாணவ / மாணவியர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்குதல் – அரசாணை வெளியீடு...

 அரசாணை (நிலை) எண்.17, பள்ளிக் கல்வித் [பக5(2)] துறை, நாள்: 07-02-2018...

கல்வி – அரசு/ அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவியர்கள் எதிர்பாராத விபத்துக்களினால் இறந்தாலோ அல்லது பலத்த காயங்கள் ஏற்பட்டாலோ பாதிப்பு அடையும் மாணவ / மாணவியர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

G.O.Ms.No: 17 Dated: February 07, 2018...

>>> அரசாணை (நிலை) எண். 17. பள்ளிக் கல்வித் [பக5(2)] துறை, நாள்: 07-02-2018...



எதிர்பாராத விபத்துகளால் இறப்பு / பலத்த காயம் ஏற்படும் மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்குதல் - கூடுதல் அறிவுரை வழங்குதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

DSE - Students Accident Claim - School Education Director's New Instructions & Proceedings ...

 எதிர்பாராத விபத்துகளால் இறப்பு / பலத்த காயம் ஏற்படும் மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்குதல் - கூடுதல் அறிவுரை வழங்குதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க எண்: 019344/ எம் / இ1/ 2019, நாள்: 27-08-2019...



விபத்துக்களில் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வழங்கப்படும் இழப்பீட்டு தொகை – பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - திருப்பூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...


அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள் எதிர்பாராத விபத்துக்களினால் இறந்தாலோ அல்லது பலத்த காயங்கள் ஏற்பட்டாலோ பாதிப்பு அடையும் மாணவ / மாணவியர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்குதல் – பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - திருப்பூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க எண்: 0140/ இ2/ 2021, நாள்: 17-03-2021...

>>> திருப்பூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க எண்: 0140/ இ2/ 2021, நாள்: 17-03-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

21-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்: குடிமை கு...