கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09-09-2024

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09-09-2024  - School Morning Prayer Activities...


திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: இடுக்கண் அழியாமை

குறள் எண்:630

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையும் சிறப்பு.

பொருள் :ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாக் கருதி்க் கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.


பழமொழி :
அரைகுறை படிப்பு ஆபத்தானது.

A little learning is a dangerous thing.


இரண்டொழுக்க பண்புகள் : 

1. வார்த்தையால் பேசுவதை விட வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன்

2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.


பொன்மொழி :

முயற்சி செய்யத் துணிபவர்களுக்கு மட்டுமே வெற்றி கிடைக்கும்." – மல்லிகா திரிபாதி


பொது அறிவு :

1.“ரேபிஸ்” நோய் உண்டாவதற்குக் காரணம்?

விடை: நாய்க்கடி

2. கடற்கரை கோவிலும், குகை கோவிலும் காணப்படும் இடம் எது?

விடை: மாமல்லபுரம்


English words & meanings :

gluttony-பெருந்தீனி,

  slander-அவதூறு


வேளாண்மையும் வாழ்வும் :

மழையைப் பற்றித் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே "மாறாநீர்" என குறிப்பிட்டிருக்கிறார்.


செப்டம்பர் 09

மா சே துங்  அவர்களின் நினைவுநாள்

மா சே துங் (About this soundMao Zedong (உதவி·தகவல்), Mao Zedong, டிசம்பர் 26, 1893 – செப்டம்பர் 9, 1976) சீன மார்க்சியக் கொள்கையாளர், போர் வீரர், கவிஞர் மற்றும் ராஜதந்திரி ஆவார். இவர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இளமையில் ஆறு மாத காலம் ராணுவ அனுபவம் பெற்றார். இவர், பல நூற்றாண்டு கால அன்னிய ஆக்கிரமிப்புக்கு பின், இருபதாம் நூற்றாண்டில் சீனாவில் நிகழ்ந்த கம்யூனிசப் புரட்சியையும் அதனைத் தொடர்ந்த உள்நாட்டுப் போரையும் முன்னின்று நடத்தினார். சீன உள்நாட்டுப் போரில், குவோமின்டாங்கை எதிர்த்து சீனப் பொதுவுடமைக் கட்சி வெற்றி கண்டது. இதன் பின், அக்டோபர் 1, 1949 அன்று பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த பெய்ஜிங் தியனெமன் சதுக்கத்தில் இருந்து, சீன மக்கள் குடியரசு நிறுவப்படுவதை மாவ் அறிவித்தார்.



நீதிக்கதை

எருமை மற்றும் குறும்புக்கார குரங்கு

ஒரு காட்டிற்குள் நிறைய விலங்குகள் ஒன்றாக வசித்து வந்தன. அதில் எருமை ஒன்றும் இருந்தது, அது பார்க்க மிகவும் பெரிதாக இருக்கும். எனவே, அந்த எருமையை பார்த்து மற்ற எல்லா விலங்குகளும் பயப்படும். ஆனால் இந்த எருமை மிகவும் சாதுவானது யாரையும் அது கஷ்டப்படுத்தியதில்லை.

அந்தக் காட்டில் ஒரு குரங்கு மரத்தில் வசித்து வந்தது. அந்தக் குரங்கு இந்த எருமையை எப்போதும் கேலி செய்து கொண்டும், தொந்தரவு செய்து கொண்டும் இருக்கும். இதை ஒரு சிட்டுக்குருவி பார்த்துக்கொண்டு எருமையிடம் கேட்டது,” அது உன்னை இவ்வளவு தொந்தரவு செய்கிறதே நீ அதை பதிலுக்கு எதுவும் செய்யாமல் இப்படி அமைதியாக இருந்தால் மீண்டும் மீண்டும் குரங்கு தன் வேலையை காட்டிக் கொண்டுதான் இருக்கும், எனவே ஏதாவது செய்” என்றது.

ஆனால் அந்த எருமை சொன்னது,”என்னால் யாரையும் கஷ்டப்படுத்த முடியாது அது செய்யும் தவறுக்கு அதுவே ஒரு நாள் வருத்தப்படும்” என்றது. சில நாட்களுக்குப் பிறகு இந்த எருமை மாடு ஒரு இடத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது. அப்போது அதனுடைய சகோதரன் வருவதை கண்டு மிகவும் சந்தோஷமடைந்தது. அந்த இரண்டு சகோதரர்களும் பார்க்க ஒரே மாதிரி தான் இருப்பார்கள்.

அப்போது இந்த எருமை மாடு சொன்னது,” அண்ணா நீ இங்கேயே ஓய்வெடு நான் உனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வருகிறேன்” என்று சொல்லிக் கொண்டு சென்றது. அப்போது இந்த குரங்கு அங்கே வந்து  ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த அண்ணன் எருமை மாடை தொந்தரவு செய்ய ஆரம்பித்தது.அண்ணன் எருமைகாரனோ ரொம்பவே கோவக்காரன் தம்பியை போல் சாது ஆனவன் இல்லை.

அந்த குரங்கிற்கோ இது வேற எருமை மாடு என்று தெரியாது. அதன் மேலே ஏறி குதித்து அதன் வாலை பிடித்து இழுத்துக்கொண்டு "நீ ஒரு முட்டாள் உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது" என்று சொல்லி சிரித்துக் கொண்டே இருந்தது. அப்போது அந்த எருமைக்கு மிகவும் கோபம் வந்தது.

எனவே கோவத்தில் அந்த குரங்கிடம் "உனக்கு என்ன தைரியம் இருந்தால் என்னை முட்டாள் என்று கூறுவாய்", என்று கூறிக்கொண்டு தன் வாலை வைத்து அந்த குரங்கை அடித்து, தன் கொம்பால் முட்டியது. அந்தக் குரங்கும் வலியில் துடித்துக் கொண்டே ஓடியது. அப்போதுதான் அது தன் தவறை புரிந்து கொண்டது.

அதன் பிறகு அந்தக் குரங்கு மற்ற விலங்குகளிடம் குறும்பு செய்வதை நிறுத்தியது. அனைவரிடம் அன்பாக பழக ஆரம்பித்தது.


இன்றைய செய்திகள்

09.09.2024

* டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பம் விநியோகம் - அரசு அறிவிப்பு.

* தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தலை நடத்தும் வகையில், வாக்குப்பெட்டிகளை பழுது நீக்கி தயார் நிலையில் வைக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

* வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.

* குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ள நாட்டிலிருந்து சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த ஒருவருக்கு அந்த நோய்க்கான அறிகுறி இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

* அமெரிக்காவில் 21-ம் தேதி குவாட் அமைப்பு மாநாடு: பிரதமர் மோடி  பங்கேற்பு.

* பாராஒலிம்பிக்ஸ்போட்டி : 29 பதக்கங்களுடன் தொடரை நிறைவு செய்தது இந்தியா.

* ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி: சீனாவை வீழ்த்தி வெற்றியுடன் போட்டியைத் தொடங்கிய இந்தியா.

* அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பெலாரசின் அரினா சபலென்கா சாம்பியன் பட்டத்தை வென்றார்.


Today's Headlines

* Application Distribution for Free Coaching Courses for TNPSC, SSC Competitive Exams - Government Notification.

* The State Election Commission has ordered the repair and preparation of the ballot boxes for holding local body elections in Tamil Nadu.

* Depression over the Bay of Bengal - Chance of moderate rain in Tamil Nadu for 2 days.

From a country where monkey measles is endemic A person who recently arrived in India is suspected of having disease symptoms, the central health department said.

* 21st Quad Conference in the USA: PM Modi will attend.

* Paralympics: India finished the series with 29 medals.

* Asian Champions Cup Hockey Tournament: India starts the tournament with a win against China.

* US OpenTennis: Arina Sabalenka of Belarus won the title.


Prepared by

Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...