கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13-09-2024...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13-09-2024  - School Morning Prayer Activities...


திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம் :நட்பு

குறள் எண்:784

நகுதல் பொருட்டன்று நட்டல்; மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு.

பொருள் : நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று; நண்பர் நெறி கடந்து செல்லும் போது முற்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.


பழமொழி :
அகம்பாவம் அழிவைத் தரும்.

Pride goes before a fall


இரண்டொழுக்க பண்புகள் : 

1. வார்த்தையால் பேசுவதை விட வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன்

2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.


பொன்மொழி :

கடமையை செய்பவனுக்கு
கடமை இருந்து கொண்டே இருக்கும்;
கவலைப்படிகிறவனுக்கு
கவலை இருந்து கொண்டே இருக்கும்.

- கண்ணதாசன்


பொது அறிவு :

1. உறுப்பு மயக்க மூட்டியாக பயன்படுவது?

விடை: பென்சைல் ஆல்கஹால்.
2. நமது மூளையானது எத்தனை லட்சம் செல்களால் ஆனது?

விடை: ஏறக்குறைய 60 லட்சம்


English words & meanings :

renewel-புதுப்பித்தல்,

progress-முன்னேற்றம்


வேளாண்மையும் வாழ்வும் :

பூமியில் ஒரு அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருந்தால், அது ஒரு உழவு மழை. ஓரிரு முறை நல்ல மழை பெய்தாலே இலகுவான மண்ணில் ஓர் அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருக்கும்.’


செப்டம்பர் 13

பெஞ்சமின் சாமுவேல் புளூம் அவர்களின் நினைவுநாள்

பெஞ்சமின் சாமுவேல் புளூம் (Benjamin Samuel Bloom, பெப்ரவரி 21, 1913 – செப்டம்பர் 13, 1999) என்பவர் அமெரிக்கக் கல்வி உளவியலாளர் ஆவார். கற்றலில் புலமை பெறுவது தொடர்பான கருத்தியல் கோட்பாட்டில் கல்வி நோக்கங்களை வகைப்படுத்தியதில் பெரும் பங்களிப்பைச் செய்தவர் ஆவார். 1950 களின் மத்தியில் கல்வியின் விளைவுகளைக் குறித்து குறிப்பிடுவது மற்றும் மதிப்பிடுவது தொடர்பான முழுமையான மாதிரியை உருவாக்கிய கல்வியியல் உளவியலாளர்களில் முன்னோடியானவர் ஆவார். [1] இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், உலகெங்கிலும் உள்ள கல்வியாளர்களின் தத்துவங்கள் மற்றும் நடைமுறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஆவார்.



நீதிக்கதை

முரட்டு மல்லனைச் சொல்லால் வென்றது!

ஒரு சமயம் கிருஷ்ண தேவராயரின் அரசவைக்கு டில்லியில் இருந்து அதிசூரன் என்னும் மல்லன் ஒருவன் வந்து, “என்னை வெல்லக்கூடிய மல்லன் உம் நாட்டில் இருந்தால் அனுப்பவும்!” என்று சவால் கூறினான்.

அந்த முரடனைக் கண்ட ஆஸ்தான மல்லர்கள் நடுநடுங்கி மௌனமாய் இருந்தார்கள். உடனே தென்னகத்தின் தன்மானத்தைக் காக்கத் தெனாலிராமன் எழுந்து நின்று அந்தச் சவாலை  ஏற்றுக்கொண்டான்.

மறுநாள் மல்யுத்த மேடைக்குத் தெனாலிராமன் வந்ததும் அதிசூரன், “என்னோடு இந்த நோஞ்சானா மல்யுத்தம் செய்து வெல்லப் போகிறான்?” என்று ஏளனம் செய்தான். அதற்கு ராமன், “மல்லனே! நீ மல்யுத்தம் செய்வது வெறும் முரட்டுத் தனமாகவா? அல்லது மல்யுத்த சாஸ்திரப்படியா? மல்யுத்த சாஸ்திரம் படித்திருந்தால் நோஞ்சான்கூட வெகு சுலபமாக எந்த முரடனையும் ஜெயித்து விட முடியும்!” என்றான்.

மல்யுத்த சாஸ்திரம் என்று ஒன்று இல்லவே இல்லை, என்று தெரிந்து இருந்தும் அதைத் தானும் படித்திருப்பதாக மல்லன் கூறவேதெனாலிராமன்,

“அப்படியானால் சரி நான் மல்யுத்த முறையில் சில கைவரிசைகளைக் காண்பிக்கிறேன்! அவற்றிற்குச் சாஸ்திரப்படி என்னென்ன பொருளென்று முதலில் கூறு! பிறகு நீ யுத்தம் செய்யலாம்!” என்றான்.

“சரி!” என்று வேறு வழியில்லாமல் சம்மதித்தான் அதிசூரன். உடனே தெனாலி ராமன் குதித்தெழுந்து ஆத்திரத்துடன் அதிசூரனின் கைவிரல்களை மடித்து முஷ்டியாக்கி தன் மார்பில் குத்தி, பிறகு இரண்டு கைகளையும் தோள்வரை தூக்கி விரித்துக் காண்பித்து விட்டு பிறகு இடது கையின் ஆள் காட்டி விரலால் கழுத்தைச் சுற்றியவாறு செய்து, வலது கையால் இடுப்பு உயரத்தில் கவிழ்த்துக் காண்பித்து விட்டு அவனுடைய ஒரு கையை ஆட்டியும் காண்பித்து, “இதற்கு என்ன பதில்?” என்று கேட்டான்.

அதற்குத் திருதிருவென விழித்த அதிசூரன் மறுநாள் வந்து சொல்வதாகச் கூறிச் சென்று இரகசியமாக டில்லிக்குத் திரும்பி ஓடிவிட்டான். அதையறிந்து வியந்த கிருஷ்ண தேவராயர் தெனாலிராமனை நோக்கி,  “இராமா! மல்யுத்த சாஸ்திரப்படி நீ செய்து காட்டிய கைவரிசைகளின் பொருள் என்ன?” என்று வினவினார்.

அதற்கு ராமன், “அரசே! அது ஒன்றும் மிகவும் பிரமாதமானதல்ல! நான் உன்னிடம் மல்யுத்தம் செய்தால் நீ என்னைக் குத்திக் கொன்று விடுவாய்! நான் இரு கைகளையும் விரித்துக் கொண்டு கழுத்து முறிபட்டு மல்லாந்து விழுவேன். அப்படி நான் இறந்து விட்டால் என் மனைவி மக்களை யார் காப்பாற்றுவது? என்றுதான் அதற்குப் பொருளாகும்.

அவனோ திகைத்து ஓடிவிட்டான். டில்லியிலிருந்து வந்த மிருக சக்தியை தென்னகத்தின் புத்திசாதுரியம் வென்று விட்டது!” என்று சொல்லிச் சிரித்தான். சபையும் சிரித்து மகிழ்ந்தது.

நீதி : முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.


இன்றைய செய்திகள்

13.09.2024

* கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வில் சிவப்பு நிற பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

* உடல் மற்றும் மனரீதியாக மாணவர்களின் வளர்ச்சியை இணையவழி விளையாட்டுகள் வெகுவாக பாதிக்கின்றன. எனவே மாணவர்களை பெற்றோர்களும்,ஆசிரியர்களும் கண்காணித்து நல்வழிப்படுத்த வேண்டும் என்றுதலைமைச் செயலர் நா.முருகானந்தம் அறிவுறுத்தியுள்ளார்.

* மத்திய அரசு உயர்த்தியதைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

* கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் தமிழக அரசு ரூ.500 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

* 70 வயதை கடந்த அனைவருக்கும் ரூ.5 லட்சம் வரை இலவச காப்பீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

* தென்மேற்கு பசிபிக்கில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.

* ஹாங்காங் ஓபன்  பேட்மிண்டன் தொடர் : சுமித் - சிக்கி ரெட்டி ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.

* ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: தொடர்ந்து 4-வது வெற்றி. அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா.

Today's Headlines

* A red colored pot has been found in the 10th phase of excavation at Geezadi which has caused surprise.

* Online games greatly affect the physical and mental development of students.  Therefore, the secretary of the union, N. Muruganandam, advised that parents and teachers should monitor and guide the students.

* Following the increase by the central government, the gratuity of Tamil Nadu government employees has been increased from Rs.20 lakh to Rs.25 lakh.

* 500 Crore MoU between Tamil Nadu Government and Caterpillar.

*  Free insurance up to Rs 5 lakh for all above 70 years: Union Cabinet approves.

* A powerful earthquake has hit Papua New Guinea in the southwest Pacific: 6.3 on the Richter scale.

* Hong Kong Open Badminton Series: Sumit-Sikki Reddy pair advance to next round.

* Asian Champions Cup Hockey: 4th win in a row.  India advanced to the semi-finals.

Prepared by

Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns