கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கோயில் அர்ச்சகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது...

கோயில் அர்ச்சகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது...



தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடகரை பகுதியில் சிறார்களை கோயிலுக்குள் அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கோயில் அர்ச்சகர் திலகர் (வயது 70) போக்சோ சட்டத்தின் கீழ் கைது...


குழந்தைகள் தங்களின் பெற்றோரிடம் இது குறித்து தெரிவிக்க, அப்பகுதி மக்கள் கோயிலை நோக்கி திரண்டு வர, அர்ச்சகர் திலகர் உள்ளே இருந்துகொண்டு கோயிலைப் பூட்டியுள்ளார்.


போலீசாருக்கு தகவல் தெரிந்து அவர்கள் வந்து அர்ச்சகர் திலகரை அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்...


தேனி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான பகவதி அம்மன் கோயிலில் 70 வயது நபர் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை கோயில் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகளுக்கு இனிப்பு வழங்கி கோயிலுக்குள் அழைத்துச் சென்ற பூசாரி, அவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.


இதனையடுத்து, பதட்டத்துடன் வெளியே வந்த சிறுமி, இந்த சம்பவம் பற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர், சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோயில் முன்பாக கூடினர். இதனைத் தொடர்ந்து, உறவினர்கள் தாக்க வந்து விடுவார்கள் என நினைத்த பூசாரி, கோயிலை பூட்டிக் கொண்டு கோயிலுக்குள் ஒளிந்து கொண்டார்.


இதனை அடுத்து, வடகரை காவல்துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் கோயிலை அடைத்துக் கொண்டு உள்ளே ஒளிந்திருந்த பூசாரியை அழைத்து, கோயிலைத் திறந்து கோவிலுக்குள்ளேயே விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, சிறுவர் சிறுமியரின் உறவினர்கள் பெருமளவு திரண்டு பூசாரியைத் தாக்கும் முயற்சியில் ஈடுபட முற்பட்டதால், காவல்துறையினர் கோயில் பூசாரியை வடகரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.


மேலும், இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் பூசாரி திலகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns