கல்வி உதவித்தொகை வழங்குவதாக மோசடி அழைப்புகள் - பெற்றோர்களே கவனம்...
Fraudulent calls to offer education scholarships - Parents beware...
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் உள்ள பள்ளியில் பயிலும் மாணவியின் தந்தையை ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
அவர் தான், கல்வித்துறையில் இருந்து பேசுவதாகவும், தங்கள் மகளுக்கு மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் நிதியாக 28 ஆயிரத்து 500 ரூபாய் வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதற்காக ஜி-பே, ஃபோன் பே விவரங்களையும் கேட்டுள்ளார். எனினும், அந்த நபரிடம் பிடிகொடுக்காமல் பேசிய மாணவியின் தந்தை, அதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
29.09.2024