கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Liquor bottles lying in schools - HeadMasters suspended...

 

 பள்ளிகளில் கிடந்த மதுபாட்டில்கள் - தலைமை ஆசிரியர்கள் சஸ்பென்ட்...


2 Schools Head Masters suspended after Selvaperunthagai inspection 



திருவாரூரில் ஆய்வு மேற்கொண்டபோது 2 பள்ளிகளில் மதுபாட்டில்கள் கிடந்ததால் தலைமை ஆசிரியர்களையும் சஸ்பெண்ட் செய்யுமாறு காங்கிரஸ் எம்.எல்.ஏவும் பொதுக் கணக்குக் குழு தலைவருமான செல்வப்பெருந்தகை பரிந்துரைக்க, மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.



திருவாரூர் மாவட்டத்தில் இன்று சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ தலைமையில் 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் அடங்கிய பொதுக்கணக்கு குழுவினர் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.


திருவாரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தனர். மேலும், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகளை ஆய்வு செய்தனர். ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு கல்லூரிகள், பள்ளிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதி, வேளாண்மை அலுவலகங்கள் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அரங்கில் பொதுக்கணக்குக்குழு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.


திருவாரூர் மாவட்டம் கமலப்புரம் அருகே உள்ள வேளுக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அரசு தொடக்கப்பள்ளிகளில் செல்வப்பெருந்தகை தலைமையில், பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது அந்த பள்ளிக்கூடத்தில் காலி மதுபாட்டில்கள் கிடந்துள்ளன. 



உடனடியாக இதுகுறித்து பொதுக் கணக்குக்குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் ஆசிரியர்களை கண்டித்துள்ளனர். அதன் பிறகு பொதுக் கணக்குக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை இதுகுறித்து உடனடியாக இரண்டு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி அவர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

21-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்: குடிமை கு...