கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

How will preferential votes be counted in Sri Lanka's President election? A simple explanation...




 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் விருப்ப வாக்குகள் எவ்வாறு கணக்கிடப்படும்? எளிய விளக்கம்...


இலங்கையின் 9வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு செப்டெம்பர் 21ஆம் தேதி நடைபெற்றது. நாட்டின் 2.2 கோடி மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 1.7 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான மூன்று வேட்பாளர்களை தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.


50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.


இலங்கை அரசியல் வரலாற்றில் முதன் முறையாக இந்த ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கவில்லை. அடுத்து என்ன நடக்கும்? புதிய ஜனாதிபதி எவ்வாறு தேர்வு செய்யப்படுவார்?


இலங்கையில் 1982-ஆம் ஆண்டு முதல் 8 ஜனாதிபதி தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.


ஜே.ஆர்.ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாச, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளாக ஆட்சி செய்துள்ளனர்.


கோட்டாபய ராஜபக்ஷவுக்குப் பின் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.


1982-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் எவரும் 50% க்கும் குறைவான வாக்குகளைப் பெறவில்லை என்பது இலங்கை தேர்தல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வு.


வரலாற்றை உற்று நோக்கும் போது, ​​இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார். 1994 தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் 62.28%.


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் யார்?

தற்போது இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக உள்ள ரணில் விக்ரமசிங்கே இந்த ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.


அவர் 1977-ஆம் ஆண்டு முதல் முறையாக நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


தற்போது இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள சஜித் பிரேமதாச, சமகி ஜன பலவேகய கட்சி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகன்.


சஜித் பிரேமதாச 2000 -ஆம் ஆண்டு முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.


அதே வருடத்தில் நாடாளுமன்றத்திற்கு தேர்வான அநுர குமார திஸாநாயக்க, தேசிய மக்கள் சக்தி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார்.


இலங்கையின் புதிய அதிபர் தேர்தல் ; யார் இந்த அனுர குமார திசநாயக்க? 


அனுராதபுரத்தில் 1968-ல் எளிய குடும்பத்தில் பிறந்தவர்.


இலங்கையில் மாற்றம் தேவை, ஊழல் ஒழிப்பு கொள்கைகளை முன்னெடுத்தவர் ஏகேடி எனப்படும் அனுர குமார திசநாயக்க.


1987ஆம் ஆண்டு முதல் ஜனதா விமுக்தி பெருமுனாவில் இணைந்து தற்போது அதன் தலைவராக உள்ளார்.


2019 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் 3.16% வாக்குகளை பெற்றார்.


கடந்த 2022-ல் இலங்கையில் பெரிய பொருளாதார சிக்கல் ஏற்பட்டபோது, மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தார்.


16 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட சிக்கல்களால் மக்கள் தவிப்பு.


சாதாரண மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என முழக்கத்தை அழுத்தமாக சொன்னார்.


இலங்கை பொதுஜென பெருமுனாவின் மீதான அதிருப்தியை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றபோது ஏகேடிக்கு பெரியளவிலான ஆதரவு.


தேசிய மக்கள் சக்தி கூட்டமைப்பின் தலைவராக உள்ளார்.


இலங்கையின் தென்பகுதியில் மட்டுமில்லாமல், தமிழர்கள் வசிக்கும் பகுதியிலும் அனுர குமாரவுக்கு அமோக ஆதரவு.


மாற்றத்தை முன்னிறுத்தி தேர்தலை கண்ட ஏகேடிக்கு அமோக வரவேற்பு.


இளைஞர்கள், சிங்களர்கள், தமிழர்கள் என அனைத்து தரப்பினருக்கும் மாற்றத்துக்கு வாக்களிப்பு.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு 38 வயதாகிறது. இவர் நாட்டில் இரண்டு முறை ஜனாதிபதியாக வெற்றி பெற்ற மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகன் ஆவார்.


2010-ஆம் ஆண்டு முதல் முறையாக நாடாளுமன்றத்துக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


எப்படி வாக்களிப்பது?

தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் நிலவினாலும், அது தொடர்பான விதிகளை இலங்கை தேர்தல் ஆணைக்குழு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.


அதன்படி, ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளருக்கு மட்டுமே வாக்களித்தால், அவரது பெயருக்கு முன்னால் `ஒன்று’ என்ற எண்ணை எழுத வேண்டும்.


இல்லையெனில், மிகவும் விருப்பமான வேட்பாளருக்கு ஒன்று(1) என்ற எண்ணை குறிப்பதன் மூலம், மற்ற வேட்பாளருக்கு `2’ ஐக் குறிப்பதன் மூலம் அவர்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்த வாய்ப்பு உள்ளது.


இதே வழியில், அவர்கள் விரும்பும் மூன்றாவது நபருக்கும் விருப்பத்தை குறிக்கலாம்.


வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான மூன்று வேட்பாளர்களை விருப்பப்படி தேர்வு செய்ய வாக்குச்சீட்டு அனுமதிக்கிறது. ஒருவேளை எந்த வேட்பாளரும் 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெறத் தவறினால், வெற்றி பெற்ற வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க இரண்டாவது வாக்கு எண்ணிக்கை பயன்படுத்தப்படுகிறது.


விருப்ப வாக்குகள் எவ்வாறு கணக்கிடப்படும்?

இலங்கை அரசியல் வரலாற்றில் முதன் முறையாக இந்த ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கவில்லை. அநுர குமார திஸநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவரும் அதிக வாக்குகளைப் பெற்று, முதலிரு இடங்களில் பிடித்துள்ளனர்.


இனி, அனுர குமார திஸநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவரும் பெற்ற விருப்ப வாக்குகள் எண்ணப்படும்.


அதாவது, இவர்கள் இருவர்கள் தவிர ஏனைய வேட்பாளர்கள் போட்டியிலிருந்து நீக்கப்படுவார்கள்.


நீக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு விழுந்த வாக்குகளில் அதாவது அந்த வாக்குச் சீட்டுகளில் அநுர குமார திஸநாயக்க அல்லது சஜித் பிரேமதாச இரண்டாவது முன்னுரிமை பெற்றுள்ளனரா என்பது சரிபார்க்கப்படும்.


அநுர குமார திஸநாயக்கவுக்கு இரண்டாவது முன்னுரிமை அளிக்கப்பட்டால், அநுர குமார திஸநாயக்க பெற்ற வாக்குகளுடன் அந்த எண்ணிக்கை சேர்க்கப்படும். சஜித் பிரேமதாசவுக்கு இரண்டாவது முன்னுரிமை என்றால், சஜித் பிரேமதாச பெற்ற வாக்கு எண்ணிக்கையில் அந்த எண்ணிக்கை சேர்க்கப்படும்.


மற்ற வேட்பாளர்களுக்கு விழுந்த வாக்குச் சீட்டில் அநுர குமார திஸநாயக்க அல்லது சஜித் பிரேமதாச இரண்டாவது முன்னுரிமையைப் பெறவில்லை என்றால், அந்த வாக்குச் சீட்டுகளில் இருக்கும் மூன்றாவது முன்னுரிமை பரிசீலிக்கப்படும். அதேபோல, அநுர குமார திஸநாயக்க அல்லது சஜித் பிரேமதாச மூன்றாம் முன்னுரிமையைப் பெற்றிருந்தால், அவை அந்தந்த வேட்பாளரின் வாக்கு எண்ணிக்கையோடு சேர்க்கப்படும்.


அநுர குமார திஸநாயக்க அல்லது சஜித் பிரேமதாசவுக்கு கூடுதல் விருப்பத் தேர்வுகள் இல்லை என்றால், அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார்.


சமநிலை ஏற்பட்டால், வெற்றியாளரைத் தேர்வு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திடம் இருக்கும்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Teachers are important for the development of the country - nuclear scientist pride

 ஆசிரியர்கள்தான் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானவர்கள் - அணு விஞ்ஞானி பெருமிதம் Teachers are important for the development of the country -...