கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

லெபனான் நாட்டில் ஒரே நேரத்தில் வெடித்த ஆயிரக்கணக்கான Pager கருவிகள் - 8 பேர் உயிரிழப்பு. 2750 பேர் காயம் - இஸ்ரேல் காரணமா..?

 


லெபனான் நாட்டில் ஒரே நேரத்தில் வெடித்த ஆயிரக்கணக்கான பேஜர் கருவிகள் - 8 பேர் உயிரிழப்பு. 2750 பேர் காயம் - இஸ்ரேல் காரணமா..?


லெபனான் நாட்டில் ஒரே நேரத்தில் வெடித்த கருப்பு பேஜர் கருவிகள்...


ஹெஸ்புல்லா இயக்கத்தினரை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல் என தகவல்.


லெபனான் நாடு முழுவதும் நேற்று நடந்த பேஜர் வெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழப்பு. 2750 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்.


தகவல் தொடர்பு சாதனமான பேஜர்-ன் ரேடியோ சிக்னல்களை மறித்து, இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியதாக அறியப்படுகிறது.


தெரியாத மனிதர்களால் லெபனான் முழுவதும் 1000 பேஜர்கள் வெடித்தன. 


ஒரே தடவையில் சுமார் 5 ஆயிரம் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் படுகாயமடைந்தனர். 


முழு அதிர்ச்சியில் அல் ஜசீரா, ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா!!. 


ஹமாஸ் & ஹிஸ்புல்லா இயக்கத்தினருக்கு இதை யார் செய்தது என்பது பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை.



தெரியாத மனிதர்களால் லெபனான் முழுவதும் 1000 பேஜர்கள் வெடித்தன.


ஒரே தடவையில் சுமார் 5 ஆயிரம் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் படுகாயமடைந்தனர்.


முழு அதிர்ச்சியில் அல் ஜசீரா, ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா!!


இஸ்ரேலுக்கு மகத்தான வெற்றி. ஹமாஸ் & ஹிஸ்புல்லா இன்று அதை செய்தது யார் என்பது பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை.


எச்சரிக்கை:

பின்வரும் காணொளிகள் மனதுக்கு சங்கடம் ஏற்படுத்தலாம். மென்மனம் கொண்டவர்கள் காணொளிகளை தவிர்த்து விடுங்கள்...



பேஜர் வெடிக்கும் காணொளி 1...



பேஜர் வெடிக்கும் காணொளி 2...

ஷாப்பிங் செய்யும் போது அவரது பேஜர் வெடித்ததால் காயமடைந்த ஹிஸ்புல்லாவின் மற்றொரு வீடியோ





 காயமடைந்தவர்களுக்கு  மருத்துவமனையில்  சிகிச்சை...

லெபனானில் நூற்றுக்கணக்கான ஹிஸ்புல்லா செயற்பாட்டாளர்களின் பேஜர்கள் ஒரே நேரத்தில் தகர்க்கப்பட்டதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.



பெய்ரூட்: லெபனானில் நடைபெற்ற பேஜர் தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என ஹிஸ்புல்லா அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. லெபனான் சூழலையடுத்து இஸ்ரேலில் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. லெபனானில் நடைபெற்ற பேஜர் வெடி விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்த நிலையில் 2,750 பேர் காயமடைந்துள்ளனர். தங்கள் பெயரை பயன்படுத்தி ஐரோப்பிய நிறுவனம் பேஜர் தயாரித்ததாக தைவானை சேர்ந்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது.



லெபனானில் அடுத்தடுத்து வெடித்து சிதறிய தகவல் தொடர்பு சாதனங்கள்.. ஆயிரம் பேர் காயம்...சைபர் தாக்குதலின் பின்னணி என்ன?

லெபனானில் பேஜர் உள்ளிட்ட தொலைத்தொடர்பு கருவிகள் வெடித்து சிதறியதில் ஹில்புல்லா அமைப்பை சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 1000 பேர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


டெல்அவிவ் (இஸ்ரேல்): லெபனானில் பேஜர் உள்ளிட்ட தொலைத்தொடர்பு கருவிகள் அடுத்தடுத்து வெடித்து சிதறியதில் ஹில்புல்லா அமைப்பை சேர்ந்தவர்கள் சுமார் 1000 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது இஸ்ரேலின் சைபர் தாக்குதல் என்று அரேபியா செய்திகளை மேற்கோள்காட்டி லெபனான் குற்றம் சாட்டியுள்ளது.லெபனான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஹிஸ்புல்லா அமைப்பு தங்களுக்கு எதிராக ஆயுதத் தாக்குதலில் ஈடுபட்டதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில்  ஹில்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய பேஜர் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறின.

இதில் ஹில்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 1.000 பேர் காயம் அடைந்துள்ளதாக அரேபிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிரியாவிலும் இதேபோன்று தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், லெபனானுக்கான ஈரானிய தூதர் முஸ்தபா அமானி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் இத்தாக்குதலில் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது இஸ்ரேலின் சைபர் தாக்குதல் என்று லெபனான் குற்றச்சாட்டியுள்ளது. லெபனானின் இக்குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் இதுவரை பதிலளிக்கவில்லை.லெபனானின் வடக்கு எல்லைப் பகுதியில் வசிக்கும் 60 ஆயிரம் இஸ்ரேலியர்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நோக்கில், அக்குடியிருப்பு மீது ஹில்புல்லா அமைப்பு தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு நாளைக்கு சராசரியாக 40 ராக்கெட்டுகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது என்றும், இதுவரை 6,700 ராக்கெட் மற்றும் ட்ரோன்களை கொண்டு அங்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் இஸ்ரேல் பகிரங்கமாக குற்றம் சாட்டியது. இந்த நிலையில், லெபனானில் இன்று நூதன தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...