கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

11.71 lakh railway employees will be given 78 days salary as bonus - Central Government announced...



 ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸ் ஆக வழங்க மத்திய ரயில்வே அமைச்சகம் அரசு ஒப்புதல்...


11.71 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ் ஆக வழங்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு...


11.71 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் தீபாவளி போனசாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.


தீபாவளி பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, 11.71 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ் தொகையாக வழங்கப்பட உள்ளதாக மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். 78 நாட்கள் ஊதியம் போனசாக வழங்குவதன் மூலம் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.2,029 கோடி செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரெயில் பாதை பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்டுகள், ரெயில் மேலாளர்கள் (பாதுகாவலர்கள்), ஸ்டேஷன் மாஸ்டர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், பாயிண்ட்மேன், மினிஸ்டரியல் ஊழியர்கள் மற்றும் பிற குரூப் எக்ஸ்சி ஊழியர்கள் போன்ற பல்வேறு வகை ரெயில்வே ஊழியர்களுக்கு இந்தத் தொகை வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரெயில்வே ஊழியர்களின் சிறப்பான செயல்திறனை பாராட்டி மத்திய அமைச்சரவை இந்த தொகையை (PLB) வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தகுதியுடைய ஒவ்வொரு பணியாளரும் 78 நாட்களுக்கு அதிகபட்சமாக ரூ.17,951 பெறுவார்கள் என்றார்.


ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கான போனஸ் தசரா மற்றும் தீபாவளி விடுமுறைக்கு முன்னதாக வழங்கப்படும். அமைச்சரவையின் இந்த முடிவுக்குப் பிறகு, சுமார் 12 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பலன்களைப் பெறுவார்கள்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...