கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தெற்கு ரயில்வே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தெற்கு ரயில்வே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Special trains for the convenience of those returning to Chennai from their hometowns after the Pongal festival


 பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக திங்களன்று (ஜனவரி 20) காட்டாங்குளத்தூர் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.


கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வந்திறங்கும் பயணிகள் இந்த ரயில்களை பயன்படுத்தலாம்


SOUTHERN RAILWAY

CHENNAI DIVISION

Date: 18.01.2025

PRESS RELEASE

SOUTHERN RAILWAY. CHENNAI DIVISION ARRANGES SPECIAL EMU SERVICES TO CLEAR PONGAL RUSH

To facilitate convenient travel for passengers returning from Southern Tamil Nadu after Pongal celebrations, Chennai Division of Southern Railway will operate special EMU services with 12-car rakes on Monday, 20th January 2025, between Tambaram- Kattangulattur - Tambaram.

The detailed timings for the passenger special trains are as follows:

A. Passenger special timings between KATTANGULATTUR - TAMBARAM:


B. Passenger special timings between TAMBARAM - KATTANGULATTUR




Railway management should give up its dual approach of "betraying Tamil Nadu's plans and blaming Tamil Nadu's journalists" - Madurai MP



"தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு துரோகமும், தமிழ்நாட்டின் செய்தியாளர்கள் மீது பழியும்” இரட்டை அணுகுமுறையை இரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் - மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் 


Railway management should give up its dual approach of "betraying Tamil Nadu's plans and blaming Tamil Nadu's journalists" - Madurai MP


மதுரை எம் பி திரு.சு.வெங்கடேசன் அவர்களின் பதிவு


 மதுரை - தூத்துக்குடி திட்டம் பற்றிய செய்தியாளர் கேள்வி, அமைச்சரின் காதில் சரியாக விழவில்லை என இரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.


அமைச்சரின் அபத்தமான பதிலை கண்டித்து எல்லோரும் சொன்ன கருத்துகள் இரயில்வே நிர்வாகத்தின் காதில் விழ ஏன் ஐந்து நாட்கள் ஆனது?


"தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு துரோகமும், தமிழ்நாட்டின் செய்தியாளர்கள் மீது பழியும்” சுமத்தும் இரட்டை வழி அணுகுமுறையை இரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும்.


"தமிழ்நாட்டின் திட்டத்திற்கு துரோகமும், தமிழ்நாட்டின் செய்தியாளர்கள் மீது பழியும்"


இரயில்வே அமைச்சர், மற்றும் இரயில்வே நிர்வாகத்தின் கண்டனத்திற்குரிய செயல்.


சு. வெங்கடேசன் எம் பி


ரயில்வே அமைச்சர் மாண்புமிகு அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பேட்டியில் மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி புதிய பாதை திட்டத்திற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்ததால், அதை கைவிடக் கூறியதால் அது கைவிடப்பட்டது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். கடந்த இடைக்கால பட்ஜெட்டில் 100 கோடியும் வழக்கமான பட்ஜெட்டில் 18 கோடியும் ஒதுக்கி இருப்பதை நான் ஏற்கனவே சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளேன். அதற்கு முழு நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரி யுள்ளேன். இப்போது அந்தத் திட்டமே கைவிடப்பட்டது என்று அவர் அறிவித்தது அதிர்ச்சியை அளித்தது. அதுவும் தமிழக அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க அது கைவிடப்பட்டதாக அவர் அறிவித்தார். இதற்கு தமிழக அரசு பதிலளிக்கட்டும் என்று காத்திருந்தேன். தமிழக அமைச்சரும் இந்த திட்டத்தை கைவிடச் சொல்லி தாங்கள் கூறவில்லை என்றும் ரயில்வே அமைச்சர் கூறுவது பொய் என்றும்  விளக்கியுள்ளார். தாங்கள் கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என்று தான் கோரியிருந்தோம் என்று விளக்கி இருந்தார். 


இப்போது ரயில்வே அமைச்சர்,   “தமிழக அரசு கைவிட கோரியது தனுஷ்கோடி திட்டத்தை தான் என்றும் செய்தியாளர்களுடைய சத்தங்களால் சரியாகப் புரிந்து கொள்ளாமல் தனுஷ்கோடி திட்டம் தான் கேட்கிறார்கள் என்று நினைத்து தமிழக அரசு கைவிடக் கூறியதாக கூறிவிட்டதாகவும் உண்மையில் தூத்துக்குடி திட்டம் கைவிடப்படவில்லை என்றும் அதற்கு நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை இல்லை என்றும் இப்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியது அனைத்து ஊடகங்களிலும் ஒரே மாதிரியாக வந்துள்ள போது, சத்தத்தால் குழப்பம் ஏற்பட்டதாக அமைச்சர் சொல்வது ஏற்கக் கூடியதாக இல்லை. செய்தியாளர் சந்திப்பின் காணொலியும் மிகத்தெளிவாகவே உள்ளது.


அமைச்சர் வேண்டுமென்றே தமிழக அரசின் மீது பழிபோடவே அவ்வாறு கூறினார் என்று எண்ணத் தோன்றுகிறது. உண்மை அப்படி இருக்கும் பட்சத்தில் ஊடகங்களில் வந்த செய்தியை உடனடியாக ஏன் மறுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. எல்லா விமர்சனங்களுக்குப் பிறகு ஐந்து நாட்களுக்குப் பின் இப்போது தான் ரயில்வே நிர்வாகம் பதில் அளித்துள்ளது. 


இப்படித்தான் அவர்கள் நாடாளுமன்றத்தில் எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு  திசை திருப்பும் பதில் அளிக்கிறார்கள்.  மழைக்கால கூட்டத்தொடரில் இரயில்வே அமைச்சர் அவையில் பேசிய ஆவேச பேச்சு மோசமான பதிலுக்கு நல்லதொரு உதாரணம். அதே போன்ற தொனியில் தான் தமிழ்நாடு அரசின் மீது பழி கூறிய அமைச்சரின் பேச்சும்.


புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமானம் 30 சதம் பலமற்று இருக்கிறது என இரயில்வே பாதுகாப்பு அமைப்பு குற்றம் சாட்டிய போது வாய்திறக்காத பாஜக தலைவர் திரு. அண்ணாமலை, அமைச்சரின் பொய்யான தகவலை நம்பி வேகவேகமாக போராட்டத்தை அறிவித்துள்ளார். அவரை தொடர்ந்து அதிமுகவும் போராட்டத்தை அறிவித்தது. உண்மையில் ஒன்றிய அரசு இரயில்வே துறையில் தமிழ்நாட்டை  தொடர்ந்து எப்படி புறக்கணித்து வருகிறது என்பதை பற்றி அடிப்படை புரிதல் இருக்கும் யாரும் அமைச்சரின் பேச்சு எவ்வளவு அபத்தம் என்பதை ஆராயாமலே புரிந்து கொள்ள முடியும். 


ரயில்வே அமைச்சகமும் ரயில்வே அமைச்சரும் மக்கள் மத்தியில் உண்மையைப் பேச இனியாவது முன் வர வேண்டும். அந்த அளவு முயற்சிப்பது கடினம் என்றால் குறைந்த பட்சமாக மதுரை - தூத்துக்குடி திட்டத்திற்கான நிதியையாவது வரும் பட்ஜெட்டில் போதுமான அளவு ஒதுக்கி நியாயம் வழங்க முயற்சிக்க வேண்டும்.






#மதுரை_தூத்துக்குடி_ரயில்சேவை

#MaduraiTuticorin_RailService

#MinistryOfRailways_AshwiniVaishnavi 

#RailwayAdministration

#இரயில்வேநிர்வாகம்

#இரயில்வேஅமைச்சகம்_

#PambamBridge_Construction

#பாம்பன்பாலம்_கட்டுமானம்

#AccusationOnTamilMedia

#தமிழ்செய்தியாளர்கள்_மீதுபழி


Major Trains in Southern Railway's New Schedule


தென்னக இரயில்வேயின் புதிய அட்டவணையில், முக்கிய இரயில்கள்


Major Trains in Southern Railway's New Schedule


சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் நேரம் - 01.01.2025 முதல்...


20627 நாகர்கோவில் வந்தே பாரத் (புதன் தவிர) காலை 5 மணி.


22671 மதுரை தேஜஸ் காலை 6.00 மணி.


16127 குருவாயூர் காலை 10.20 மணி.


12635 மதுரை வைகை மதியம் 1.45 மணி.


20665 நெல்லை வந்தே பாரத் (செவ்வாய் தவிர) மதியம் 2.45 மணி.


12605 பல்லவன் மதியம் 3.40 மணி.


20605 செந்தூர் மாலை 4.00 மணி.


12642 திருக்குறள் - கன்னியாகுமரி (வாராந்திர Sun & Tue) மாலை 4.10 மணி. 


12652 மதுரை - சம்பர்க் கிராந்தி (வாராந்திர Wed & Fri) மாலை 4.10 மணி.


16101 கொல்லம் மாலை 5.00 மணி.


12633 கன்னியாகுமரி மாலை 5.20 மணி.


22661 இராமேஸ்வரம் மாலை 5.45 மணி.


16751 இராமேஸ்வரம் மாலை 7.15 மணி.


12693 முத்து நகர் இரவு 7.30 மணி.


20635 அனந்தபுரி இரவு 7.50 மணி.


12661 பொதிகை இரவு 8.10 மணி.


12631 நெல்லை இரவு 8.40 மணி


12665 கன்னியாகுமரி (வாராந்திர Tue) இரவு 9.05 மணி.


12637 பாண்டியன் இரவு 9.40 மணி.


12653 மலைக் கோட்டை இரவு 11.30 மணி.


Vande Bharat Express doors not open, passengers shocked

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கதவுகள் திறக்கப்படாததால் பயணிகள் அதிர்ச்சி


Vande Bharat Express doors not open, passengers shocked



நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் கதவு திறக்கப்படாததால், திண்டுக்கல்லில் இறங்க முடியாமல் பயணிகள் பெரிதும் தவித்தனர். 


கொடைரோடு ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு, வேறொரு ரயில் மூலம் திண்டுக்கல் அனுப்ப ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.


சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. 08-12-2024 அன்று ரெயில் திண்டுக்கல் வந்தபோது சி4, சி5 பெட்டிகளின் கதவுகள் திறக்கப்படவில்லை. இதனால் அந்தப் பெட்டியில் வந்த திண்டுக்கல் சேர்ந்தவர்கள் 15-க்கும் மேற்பட்டோர் இறங்க முடியாமல் தவித்தனர். அதற்குள் ரயிலும் புறப்பட்டு சென்றது.


இதையடுத்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் அபாயசங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினர். அதற்குள் ரெயில் நீண்ட தூரம் சென்று விட்டது. இதையடுத்து பெட்டிக்கு வந்த ரெயில்வே அதிகாரி அடுத்த ரெயில் நிலையத்தில் இறக்கி விடுவதாக கூறினார்.



வேறு வழியின்றி பயணிகளும் சம்மதித்தனர். இதையடுத்து கொடைரோடு ரெயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு ரயில் கிளம்பி சென்றது. கொடைரோடு ரெயில் நிலைய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பயணிகளை துாத்துக்குடியில் இருந்து மைசூர் சென்ற ரெயிலில் ஏற்றி திண்டுக்கல் அனுப்பி வைத்தனர்.


Reduction of train ticket booking days from 120 to 60

 


ரயில் டிக்கெட் முன்பதிவு நாட்கள் 120ல் இருந்து 60ஆக குறைப்பு.


நவம்பர் 1 முதல் ரயில்களில் முன்பதிவு செய்வதற்கான அவகாசம் 120 நாட்களில் இருந்து 60ஆக குறைப்பு - இந்திய ரயில்வே.


120 நாட்கள் அவகாசத்தின் கீழ் அக்.31 வரை முன்பதிவு செய்தவர்களுக்கான டிக்கெட்டுகள் செல்லுபடியாகும்.


வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 365 நாட்கள் என்ற வரம்பிலும் எந்த மாற்றமும் இருக்காது.


ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால வரம்பு 120 நாளில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட உள்ளது. இது வரும் நவ.1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.


விரைவு, அதிவிரைவு ரயில் உள்பட பல்வேறு ரயில்களில் டிக்கெட் முன்பதிவுகளைப் பொறுத்தவரை, 120 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் முறை தற்போது உள்ளது. இந்த டிக்கெட்டை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) இணையதளம் மூலமாகவும், ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள் மூலமாகவும் முன்பதிவு செய்து, பயணம் செய்து வருகின்றனர். பண்டிகை காலங்களில் முன்பதிவு செய்ய இந்த காலவரம்பு பயணிகளுக்கு வசதியாக இருக்கிறது. இந்நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவதற்கான கால வரம்பு 120 நாளில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்படவுள்ளது. இது நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.


இது குறித்து இந்திய ரயில்வே துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “ரயில்களில் முன்பதிவு செய்வதற்கான கால வரம்பு 120 நாளில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்படும். இது, நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இருப்பினும், அக்.31-ம் தேதி வரை, 120 நாட்களுக்கு முன்பதிவு செய்யும் காலத்தின் கீழ், அனைத்து முன்பதிவுகளும் அப்படியே இருக்கும். இதுபோல, நவ.1 ம் தேதிக்கு முன்பாக, முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை 60 நாட்களுக்குப் பிறகும் ரத்து செய்ய அனுமதிக்கப்படும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 365 நாட்கள் என்ற வரம்பில் எந்த மாற்றமும் இருக்காது. குறிப்பிட்ட பகல்நேர விரைவு ரயில்களான லைம் தாஜ் விரைவு ரயில், கோம்தி முன்பதிவு செய்வதற்கான வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று (06-10-2024) மதியம் 4.30 மணி வரை சுமார் 3 லட்சம் பேர் மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி பயணம் செய்துள்ளனர்...


 பறக்கும் ரயில் சேவையை தினசரி 55 ஆயிரம் பேர் பயன்படுத்துவார்கள்.


ஆனால், இன்று (06-10-2024) மதியம் 4.30 மணி வரை  சுமார் 3 லட்சம் பேர் மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி பயணம் செய்துள்ளனர்...


IAF Air Show 2024 - இன்று (06-10-2024) மதியம் 4.30 மணி வரை  சுமார் 3 லட்சம் பேர் மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி பயணம் செய்துள்ளனர்...



11.71 lakh railway employees will be given 78 days salary as bonus - Central Government announced...



 ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸ் ஆக வழங்க மத்திய ரயில்வே அமைச்சகம் அரசு ஒப்புதல்...


11.71 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ் ஆக வழங்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு...


11.71 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் தீபாவளி போனசாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.


தீபாவளி பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, 11.71 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ் தொகையாக வழங்கப்பட உள்ளதாக மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். 78 நாட்கள் ஊதியம் போனசாக வழங்குவதன் மூலம் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.2,029 கோடி செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரெயில் பாதை பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்டுகள், ரெயில் மேலாளர்கள் (பாதுகாவலர்கள்), ஸ்டேஷன் மாஸ்டர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், பாயிண்ட்மேன், மினிஸ்டரியல் ஊழியர்கள் மற்றும் பிற குரூப் எக்ஸ்சி ஊழியர்கள் போன்ற பல்வேறு வகை ரெயில்வே ஊழியர்களுக்கு இந்தத் தொகை வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரெயில்வே ஊழியர்களின் சிறப்பான செயல்திறனை பாராட்டி மத்திய அமைச்சரவை இந்த தொகையை (PLB) வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தகுதியுடைய ஒவ்வொரு பணியாளரும் 78 நாட்களுக்கு அதிகபட்சமாக ரூ.17,951 பெறுவார்கள் என்றார்.


ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கான போனஸ் தசரா மற்றும் தீபாவளி விடுமுறைக்கு முன்னதாக வழங்கப்படும். அமைச்சரவையின் இந்த முடிவுக்குப் பிறகு, சுமார் 12 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பலன்களைப் பெறுவார்கள்.


படுக்கை வசதியுடன் அறிமுகப்படுத்தப்படும் வந்தே பாரத் ரயில் - உள்ள வசதிகள் குறித்த தகவல்கள் - காணொளி...



படுக்கை வசதியுடன் அறிமுகப்படுத்தப்படும் வந்தே பாரத் ரயிலில் உள்ள வசதிகள் குறித்த தகவல்கள் - காணொளி...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



வந்தே பாரத் ரயிலில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளின் புகைப்படம் மற்றும் வீடியோவை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார். இந்த ரயிலில் இடம்பெற்றுள்ள வசதிகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.


*வசதிகள் என்னென்ன?*


*800 முதல் 1,200 கி.மீ., தூரம் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக இந்த பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.


*16 பெட்டிகள் இருக்கும். அதில் ஏசி மூன்றடுக்கு படுக்கைகள் கொண்ட 11 பெட்டிகள்,


*இரண்டு அடுக்கு படுக்கை வசதிகொண்ட நான்கு பெட்டிகள், முதல் வகுப்பு பெட்டி 1 உடன் 823 பேர் பயணிக்க முடியும்.


*மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் பயணிக்கும்.


*மொபைல் போன் சார்ஜிங் வசதி, பாதுகாப்புக்காக கேமரா, பொது அறிவிப்பை வெளியிட ஸ்பீக்கர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி ஆகியவை இடம்பெறும்.


*முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பயணிகள் சுடு தண்ணீரில் குளிக்கும் வசதி உள்ளது.


ராமேஸ்வரம் - திருச்சி ரயிலில் இனி திருவாரூர் வரை தொடர்ந்து செல்லலாம்...



ராமேஸ்வரம் - திருச்சி ரயிலில் இனி திருவாரூர் வரை தொடர்ந்து செல்லலாம்...


16850 / ராமேஸ்வரம் - திருச்சி விரைவு ரயில் திருச்சி சென்று, அங்கிருந்து 15 நிமிடங்களில் 06876/ திருச்சி - திருவாரூர் வண்டியாக புறப்படும்... 


அதே போல 06871/ திருச்சி - திருவாரூர் ரயில் திருச்சி வந்து, 5 நிமிடங்களில் திருச்சி - ராமேஸ்வரம் வண்டியாக புறப்படும்...


திருவாரூரில் இருந்து புதுக்கோட்டை பயணிக்க


🚂06871 / திருவாரூர் - திருச்சி ரயில் (தினசரி)

🚇திருவாரூர் - 04:45 am

🚇கொரடச்சேரி - 05:00 am

🚇நீடாமங்கலம் - 05:11 am

🚇தஞ்சாவூர் - 05:45 am

🚇பூதலூர் - 06:04 am

🚇அய்யனாபுரம் - 06:10 am 

🚇திருவெறும்பூர் - 06:29 am

🚇பொன்மலை - 06:42 am

🚇திருச்சி - 07:00 am


🚂16849 / திருச்சி - ராமேஸ்வரம் வண்டி (தினசரி)

🚇திருச்சி - 07:05 am

🚇புதுக்கோட்டை - 07:53 am


✅திருவாரூர் - புதுக்கோட்டை -₹70/-.

✅நீடாமங்கலம் - புதுக்கோட்டை - ₹60/-

✅பூதலூர் - புதுக்கோட்டை -₹50/-

✅திருவெறும்பூர் - புதுக்கோட்டை - ₹40/-

✅பொன்மலை - புதுக்கோட்டை ₹35/-


புதுக்கோட்டையில் இருந்து திருவாரூர் செல்வதற்கு


🚂16850/ராமேஸ்வரம் - திருச்சி விரைவு ரயில் (தினசரி)

🚇புதுக்கோட்டை - 06:33 pm மாலை 

🚇திருச்சி - 08:10 pm இரவு செல்லும்


🚂06876/திருச்சி - திருவாரூர் ரயில்(தினசரி)

🚇திருச்சி - 08:25 pm இரவு

🚇பொன்மலை - 08:33 pm

🚇திருவெறும்பூர் - 08:45 pm

🚇அய்யனாபுரம் - 09:05  pm 

🚇பூதலூர் - 09:11 pm

🚇தஞ்சாவூர் - 09:40 pm

🚇நீடாமங்கலம் - 10:20 pm

🚇கொரடாச்சேரி - 10:31 pm

🚇திருவாரூர் - 11:05 pm இரவு செல்லும்


கட்டணம்:

✅புதுக்கோட்டை -திருவாரூர்  -₹70/-.

✅ புதுக்கோட்டை -நீடாமங்கலம் - ₹60/-

✅புதுக்கோட்டை- பூதலூர் -₹50/-

✅புதுக்கோட்டை- திருவெறும்பூர்  - ₹40/-

✅புதுக்கோட்டை-  பொன்மலை- ₹35/-

✅புதுக்கோட்டை- திருச்சி- ₹35/-


மைசூர் மயிலாடுதுறை விரைவு வண்டி கடலூர் வரை நீட்டிப்பு...


மைசூர் மயிலாடுதுறை விரைவு வண்டி கடலூர் வரை நீட்டிப்பு...


ஓசூர் வழியாக மைசூரில் இருந்து மயிலாடுதுறை வரை இயங்கிய ரயில், இனிமேல் சீர்காழி, சிதம்பரம் வழியாக கடலூர் துறைமுகம் வரை இயக்க முடிவு...


Extension of Mysore Mayiladuthurai Express to Cuddalore port... 


The train which was running from Mysore to Mayiladuthurai via Hosur, will now run to Cuddalore port via Sirkazhi, Chidambaram...



உரிய நேரத்தில் ரயிலை நிறுத்தி 800 பயணிகளின் உயிரை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு ரூ.5000 வழங்கி பாராட்டு...

 உரிய நேரத்தில் ரயிலை நிறுத்தி 800 பயணிகளின் உயிரை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு ரூ.5000 வழங்கி பாராட்டு...


தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உரிய நேரத்தில் திருச்செந்தூர் ரயிலை நிறுத்தி 800 பயணிகள் உயிரை காப்பாற்றிய தண்டவாள பராமரிப்பாளர் செல்வக்குமாருக்கு ரூ.5,000 அறிவித்து ரயில்வே துறை கவுரவம்



ஜூலை 18 முதல் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் கூடுதல் நிறுத்தங்களின் பெய்ர்கள் - தெற்கு ரயில்வே அறிவிப்பு (Names of additional stops at which major express trains will stop from July 18 - Southern Railway Notification)...


ஜூலை 18 முதல் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் கூடுதல் நிறுத்தங்களின் பெய்ர்கள் - தெற்கு ரயில்வே அறிவிப்பு (Names of additional stops at which major express trains will stop from July 18 - Southern Railway Notification)...


முக்கிய ரயில்கள் கூடுதல் நிறுத்தங்களின் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு


பாண்டியன் எக்ஸ்பிரஸ், பாலருவி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், முத்து நகர் எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 9 முக்கிய ரயில்கள் சோதனையின் அடிப்படையில் கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்ல உள்ளன. 


1. நெல்லை - பாலக்காடு - நெல்லை (வ.எண்.16791/16792) பாலருவி எக்ஸ்பிரஸ் குண்டாரா, கீழக்கடையம் ரயில் நிலையங்களில் ஜூலை 18 முதல் நின்று செல்லும். 


2. சென்னை எழும்பூர் - மதுரை (வ.எண்.12637) பாண்டியன் எக்ஸ்பிரஸ் மணப்பாறை ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும்.


3. சென்னை எழும்பூர் - இராமேஸ்வரம் (வ.எண்.22661) இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் மண்டபம் ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும்.


4. நெல்லை - பாலக்காடு (வ.எண்.16791) பாலருவி எக்ஸ்பிரஸ் பாவூர்ச்சத்திரம் ரயில் நிலையத்தில் ஜூலை 19 முதல் நின்று செல்லும்.


5. இராமேஸ்வரம் - பனாரஸ்  (வ.எண்.22535) வாராந்திர ரயில் இராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ஜூலை 19 முதல் நின்று செல்லும்.


6. சென்னை எழும்பூர் - நெல்லை (வ.எண்.12631) நெல்லை எக்ஸ்பிரஸ் சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும்.


7. கோவை - இராமேஸ்வரம் (வ.எண்.16618) வாராந்திர ரயில் சிவகங்கை ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும்.


8. சென்னை எழும்பூர் - தூத்துக்குடி (வ.எண்.12693) முத்துநகர் எக்ஸ்பிரஸ் திருமங்கலம் ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும்.


9. சென்னை எழும்பூர் - கொல்லம் - சென்னை எழும்பூர் (வ.எண்.16101/16102) கொல்லம் எக்ஸ்பிரஸ் ஆரியங்காவு ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும்..






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தென்னக ரயில்வே - திருச்சி, பொன்மலை பணிமனையில் தொழில்பழகுநர் பயிற்சி - மாதம் ரூ.7000 உதவித் தொகையுடன் - 537 பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 31-10-2022 (Southern Railway - Apprentice Training Trichy, Ponmalai Workshop - With stipend of Rs.7000 per month - 537 Vacancies - Last date to apply: 31-10-2022)...



>>> தென்னக ரயில்வே - திருச்சி, பொன்மலை பணிமனையில் தொழில்பழகுநர் பயிற்சி - மாதம் ரூ.7000 உதவித் தொகையுடன் - 537 பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 31-10-2022 (Southern Railway - Apprentice Training Trichy, Ponmalai Workshop - With stipend of Rs.7000 per month - 537 Vacancies - Last date to apply: 31-10-2022)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



No.GPB(A) 128-Act-Engg-31

SOUTHERN RAILWAY - Central Workshops - Personnel Branch, Ponmalai, Trichy-4,

Date: 29.09.2022.

ENGAGEMENT OF APPRENTICES UNDER THE APPRENTICES ACT, 1961

NOTIFICATION

ONLINE applications are invited from eligible candidates for engagement as Apprentices for imparting training under the Apprentices Act 1961 in the designated trades at various Divisions/ Workshops/ Units in the jurisdiction of Southern Railway. Candidates residing in the following locations/areas falling within the Geographical Jurisdiction of Southern Railway alone are eligible to apply.

1. Whole state of Tamil Nadu.

2. Whole union Territory of puducherry.

3. Whole state ofKerala.

4. Whole Union Territories of Andaman & Nicobar and Lakshadweep Islands.

5. ONLY the two districts of Andhra Pradesh, namely, SPSR Nellore and Chittoor.

6. ONLY one district of Karnataka, namely, Dakshina Kannada,

Visit Website www,sr.indianrailways.gov.in -->News & Updates --->Personnel

Branch Information to apply.

There is NO GUARANTEE 0F EMPLOYMENT and their contract of apprenticeship will be terminated on completion training. However, 20% of the vacancies in case of Direct recruitment to post in Level 1 shall be filled giving preference to Course completed act apprentices (CCAAs). 

All communication from the Administration will be sent by SMS or e-mail only and Candidates will be called for Cerdficate Verification Purpose / Selected / Stand-Bye List will be uploaded in Southern Railway Website. Candidates should maintain the same mobile number &  e-mail ID till the selection is completed and the Administration will not be responsible for non- receipt of communication due to change in mobile number or e-mail lD. Frequent monitoring of SMS / Email / Visiting Southern Railway website is the  sole responsibility of candidates.

Candidate's  Name, Date of Birth and Father's Name should be same as in the SSLC Marksheet, ITI Mark Sheet Community Certificate, Bank Pass Book, AADHAAR, PAN. If there  is any mismatch in the above, the same may be rectified.

1. Apprentices will be engaged in the following trades. The slots available in various trades with communal break-up in GOC wodshop, Tricky and Madurai Divisions are tabulated below for the information of candidates.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...






சென்னை - கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து - காணொளிகள் (Chennai - Beach train station electric train derails - videos)...

 சென்னை - கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து - காணொளிகள் (Chennai - Beach train station electric train derails - videos)...



>>> சென்னை - கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து - காணொளி 1...



>>> சென்னை - கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து - காணொளி 2...



>>> சென்னை - கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து - காணொளி 3...

தமிழகத்தில் தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு – 3378 காலிப்பணியிடங்கள்- அறிவிப்பு...

 


தமிழகத்தில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு மொத்தம் 3378 பணியிடங்கள் காலியாக உள்ளன. ரயில்வே வேலைகளைத் தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தெற்கு ரயில்வே தொழில் பழகுநர் வேலைகளில் சேரலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 01.06.2021 முதல் 30.06.2021 வரை விண்ணப்பிக்கலாம்.


>>> முழு விவரங்கள் அறிய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Adjournment of TET case for promotion in Supreme Court to 25.02.2025

பதவி உயர்வுக்கு TET வழக்கு உச்சநீதிமன்றத்தில் 25.02.2025க்கு ஒத்திவைப்பு Adjournment of TET case for promotion in Supreme Court to 25.02.202...