கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

   

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

"பால்: பொருட்பால்

அதிகாரம்: பழைமை

குறள் எண்:808

கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாள்இழுக்கம் நட்டார் செயின்.

பொருள்:பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும் கேளாமலிருக்கும்
உரிமை வல்லவர்க்கு, அந் நண்பர் தவறு செய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்."


பழமொழி :
கருணை உள்ளமே கடவுள் வாழும் அமைதி இல்லம்.  

Where mercy lives that mind itself where GOD lives peacefully.


இரண்டொழுக்க பண்புகள் : 

*பிறரைக் குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்.

* தினமும் என்னாலான சிறு சிறு உதவிகளை செய்வேன்.



பொன்மொழி :

நேரம் இலவசமானது, ஆனால் அது விலைமதிப்பற்றது. உங்களால் அதை சொந்தமாக்கிக்கொள்ள முடியாது, ஆனால் உங்களால் அதைப் பயன்படுத்த முடியும். உங்களால் அதை வைத்திருக்க முடியாது, ஆனால் உங்களால் அதை செலவிட முடியும். நீங்கள் ஒருமுறை அதை இழந்தால் அதை உங்களால் திரும்பப் பெற முடியாது. --ஹார்வி மேக்கே


பொது அறிவு :

"1. ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தின் (1985-90) முக்கிய நோக்கம் என்ன?

விடை: வேலைவாய்ப்பை உருவாக்குவது.      

  2.  ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் யார் காலத்தில் கொண்டுவரப்பட்டது?

விடை:  இந்திராகாந்தி"


English words & meanings :

Clove-கிராம்பு,

Coriander-கொத்துமல்லி


வேளாண்மையும் வாழ்வும் :

உயிர்ச்சூழல் மற்றும் சுழற்சிக்கேற்ப இயைந்து செயல்பட்டு சுற்றுச்சூழலின் வாழ்வியல் மேம்பட உதவ வேண்டும் (உயிர்ச்சூழல் பற்றிய கோட்பாடு)


நவம்பர் 08

வீரமாமுனிவர் அவர்களின் பிறந்தநாள்

வீரமாமுனிவர் (ஆங்கிலம்: Constanzo Beschi, நவம்பர் 8, 1680 – பெப்ரவரி 4, 1747)[1] என்று அழைக்கப்படும் கான்சுடான்சோ பெசுக்கி என்பவர் இத்தாலிய நாட்டு கிறித்தவ மத போதகர் ஆவார். இவர் இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களை 370 நூற்பாக்களில் எடுத்துரைத்தார்
திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர்.
காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தம்|விருத்தப் பாக்களால் ஆனது இந்தக் காவியம்.


நீதிக்கதை

இரண்டு மரங்கள்!

ஒரு ஆற்றங்கரையில் இரண்டு பெரிய மரம் இருந்தது. அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி, மரத்திடம் கேட்டது."மழை காலம் தொடங்க இருப்பதால், நானும் என் குஞ்சிகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா?"

என்றது.

முதலில் இருந்த மரம் முடியாது என்றது. அடுத்த மரத்திடம் கேட்டது அது அனுமதித்தது.

குருவி கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம்.

அன்று பலத்த மழை ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்து சென்றது. தண்ணீரில் இழுத்து செல்லும் பொழுது குருவி சிரித்து கொண்டே சொன்னது, "எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லப்படுகிறாய்" என்றது.

அதற்கு மரம் கூறிய பதில் 'எனக்கு தெரியும் நான் வழுவடைந்து விட்டேன். எப்படியும் இந்த மழைக்கு நான் தாங்க மாட்டேன். தண்ணீரில் அடித்து செல்லபடுவேன். நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் உனக்கு இடம் இல்லை என்றேன். மன்னித்து விடு'என்றது.

நீதி :உங்களை யாரும் நிராகரித்தால் அவர்களை தவறாக நினைக்காதீர்கள். அவர்கள் தரப்பு நியாயத்தை கேளுங்கள்.


இன்றைய செய்திகள்

08.11.2024

* மலைப் பகுதி மக்களுக்காக ரூ.1.60 கோடியில் 25 பைக் ஆம்புலன்ஸ் வாங்க தமிழக அரசு உத்தரவு.

* அரசுப் பள்ளிகளில் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: கண்காணிப்பை தீவிரப்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டம்.

* கார் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போர் வணிக போக்குவரத்து வாகனம் இயக்கலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

* ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பார்க்க தடை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என அந்நாட்டு பிரதமர் தகவல்.

* பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இன்றைய ஆட்டத்தில் ஜாஸ்மின் பயோலினியை வீழ்த்தி சீன வீராங்கனை கின்வென் ஜெங் வெற்றி.

* முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: வங்காளதேச அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி.


Today's Headlines

* Tamil Nadu government orders to buy 25 bike ambulances for hilly people at Rs 1.60 crore.

* Action on absentee teachers in government schools: School Education Department plans to intensify monitoring.

* Car driving license holders can drive commercial vehicles: Supreme Court judgement.

* Australia's prime minister has announced that a new law will be introduced to ban accessing social media of children under the age of 16  .

* China's Qinwen Zheng wins today's Women's Tennis Championship by beating Jasmine Piolini.

* First ODI: Afghanistan beat Bangladesh

Prepared by

Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...