கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

 


அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம் 


Suspension of a teacher who slept in a government school asking students to press his feet


சேலம்: ஆத்தூர் அருகே கிழக்கு ராஜபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களை கால்பிடித்துவிட கூறிய ஆசிரியர் ஜெயபிரகாஷ் சஸ்பெண்ட்...




சேலம் மாவட்டம், கிழக்கு ராஜபாளையம் அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொன்ன ஆசிரியர் சஸ்பெண்ட் கணித ஆசிரியர் ஜெயபிரகாஷை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் அதிரடி உத்தரவு


அரசு பள்ளியில் மாணவர்களை கால் பிடித்துவிட வைத்த ஆசிரியர் சஸ்பெண்ட்...


ஆசிரியர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தல்.


ஆசிரியர் ஜெயபிரகாஷை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.


சேலம் மாவட்டம் கிழக்கு ராஜபாளையம் வீரகனூர் அருகே உள்ள அரசு பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.


இந்நிலையில், பள்ளியில் கணித ஆசிரியராக ஜெயபிரகாஷ் என்பவர் பணிபுரிந்து வந்தார். அவர், மாணவர்களை கால் அழுத்திவிட சொல்லி ஓய்வெடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி கடும் கண்டனத்திற்கு உள்ளானது.


இதனால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோரும், கல்வி ஆர்வலர்களும் வலியுறுத்தினர்.


இந்நிலையில், மாணவர்களை கால் அழுத்த சொல்லி தூங்கிய ஆசிரியர் ஜெயபிரகாஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


அதன்படி, சம்பந்தப்பட்ட கணித ஆசிரியர் ஜெயபிரகாஷை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உத்தரவை பிறப்பித்துள்ளார்.


மாணவர்களை கால் அழுத்த சொல்லி, ஆசிரியர் தூங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Even words or actions that cause discomfort to women in the workplace are sexual harassment – ​​Madras High Court explains

   பெண்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் சொல் அல்லது செயல் கூட பாலியல் துன்புறுத்தல்தான் - சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் Even words or acti...