கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

22-01-2025 - School Morning Prayer Activities

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-01-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: குடிமை

குறள் எண்:952

ஒழுக்கமும் வாய்மையும் காணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.

பொருள்:
உயர்குடி பிறந்தார், ஒழுக்கம், உண்மை, மானத்திற்கு அஞ்சுதல் ஆகியவற்றில் நிலை தவற மாட்டார்கள்.

பழமொழி :
சிங்கத்துக்கு பங்கம் இல்லை.  

A lion knows no danger.


இரண்டொழுக்க பண்புகள் :  

*உலகில் தோன்றிய மூத்த மொழிகளில் ஒன்று தமிழ் மொழி என்பதை அறிவேன். எனவே , எனது தாய் மொழியை சிறப்பாக கற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்.   

*விளையாட்டு உடலுக்கு வலிமை சேர்க்கும் .எனவே, செல்பேசியில் மூழ்காமல் ஏதாவது ஒரு  விளையாட்டிலாவது எனது திறமையை வெளிப்படுத்துவேன்.


பொன்மொழி :

எவ்வளவு அலட்சியப்படுத்தப்பட்டாலும், அவமானங்களுக்கு ஆளாக்கப்பட்டாலும் ,எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்ற திடமான கொள்கையும் விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி கிடைத்தே தீரும் - அறிஞர் அண்ணா


பொது அறிவு :

1. சர்க்கரை உற்பத்தியில் முதலாவதாக உள்ள மாநிலம்

விடை:உத்திரப்பிரதேசம்.  

2 நைட்ரஜனை எளிதில் வழங்கும் ஒரு சிறந்த உரம் எது?

விடை: அம்மோனியம் நைட்ரேட்


English words & meanings :

Play.    -    நாடகம்

Poem.      -    கவிதை


வேளாண்மையும் வாழ்வும் :

ஆசியாவில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் தொழில்மயமாதல் காரண மாக நகர்களின் எல்லை விரிவடைவதால் விளைநிலங்கள் இழக்கப்படுகின்றன, நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.


நீதிக்கதை

கை மேல் பலன் கிடைத்தது !

அரசன் ஒருவர்  சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர். அரண்மணை சோதிடர் இந்த நம்பிக்கையை வைத்து தினமும் ஏதாவது ஒரு சகுனம் நல்லது என்று கூறி தனது புகழை நிலைநாட்டுவார்.

ஒரு நாள் இப்படித்தான்'அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும்' என்று நம்பிக்கை ஊட்டினார்.

மன்னன் சேவகனை அழைத்தான்காலையில் எங்காவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் உடனே தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்.

அதன் பின் தினமும் பொழுது விடியும் முன்பே சேவகன் தெருவில் அலையத் தொடங்கி விடுவான்.

ஒரு நாள் அரண்மனக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். "அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சி மிகுதியுடன் மூச்சிரைக்க ஓடி வந்து மன்னரிடம் விபரம் சொன்னான்.

இதைக் கேட்டு துள்ளி எழுந்த மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு சென்றார்.

அதற்குள் ஒரு காக்காய் 'வாக்கிங்' போய் விட்டது.மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து'இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு' என்று உத்தரவிட்டான்.

சேவகன் சிரிக்க ஆரம்பித்து விட்டான்.'இடுக்கண் வருங்கால் நகுக' என்று படித்துப் புரிந்து வைத்திருந்தவன் போலும்.

மன்னனுக்கு ஆத்திரம் இன்னமும் அதிகமானது.'நீ சிரித்ததற்கு சரியான காரணம் சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி' என்று உறுமினார்.

சேவகன் சொன்னான். 'மகா மன்னரே. இன்று நான்மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன்கிடைத்து விட்டது அல்லவா?'என்றான்.

மன்னருக்கு சுருக்கென்று ஏதோ உரைத்தது. தனது தவற்றை புரிந்து கொண்டார். சேவகனை பாராட்டி அனுப்பினார்.


இன்றைய செய்திகள்

22.01.2025

* சிறு தொழில்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட தாழ்வழுத்த மின்இணைப்புகளில் உச்சநேர மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்க டிஓடி மீட்டர் பொருத்தும்படி, பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

* சங்க இலக்கியங்கள் உள்பட 1 லட்சம் புத்தகங்கள் அடங்கிய தமிழ் டிஜிட்டல் மின்னூலகத்தை 12 கோடி பேர் பார்வையிட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

* விருதுநகர் அருகே வெம்பக்கோட்டை 3ம் கட்ட அகழாய்வில் சுடுமண் குடுவை, சுடுமண் முத்திரை, சங்கு வளையல் போன்றவை கண்டெடுப்பு. இதுவரை 3,210 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுப்பு.

* இந்த நிதியாண்டில் ராணுவத்துக்கு ரூ.10,200 கோடிக்கு பினாகா வகை ராக்கெட்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக ராணுவ தளபதி தகவல்.

* உலக சுகாதார நிறுவனம் மற்றும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது உள்ளிட்ட பல அதிரடி உத்தரவுகளை அந்நாட்டு அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்துள்ளார்.

* இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி 2வது சுற்றுக்கு முன்னேற்றம்.

* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா.


Today's Headlines

* The Electricity Board has ordered engineers to install DoD meters to measure peak-time electricity consumption in low-voltage power connections, including small businesses and educational institutions.

* Information Technology Minister Palanivel Thiagarajan has said that 12 crore people have visited the Tamil digital library, which contains 1 lakh books, including Sangam literature.

* A clay jar, a clay seal, a conch bracelet, etc. were found in the 3rd phase of excavation at Vembakottai near Virudhunagar. 3,210 items have been found so far.

* The Army Commander informed that Pinaka-type rockets will be purchased for the army for Rs. 10,200 crore this financial year.

* Donald Trump, who took office as the country's president, has issued several drastic orders, including the US's withdrawal from the World Health Organization and the Paris Climate Agreement.

* Indonesia Masters badminton tournament: India's Satwik-Chirag pair advance to 2nd round.

* Belarusian Aryna Sabalenka advances to semifinals at Australian Open.


Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...