பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-02-2025 - School Morning Prayer Activities
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
*நாள்:-12-02-2025
*கிழமை:-புதன்கிழமை*
*திருக்குறள்:
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : மெய்யுணர்தல்
*குறள்:354
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.
*விளக்கம்:
மனம் அடங்கக் கற்றவர் என்றாலும், உண்மையை உணரும் உணர்வு இல்லாதவர்க்கு ஒரு பயனும் இல்லை.
*பழமொழி :
Necessity has no law
ஆபத்துக்கு பாவமில்லை.
*இரண்டொழுக்க பண்புகள் :
1 . மகிழ்ச்சி உங்கள் மனதில் தோன்ற புன்னகை உங்கள் முகத்தில் எப்போதும் குடியேற வேண்டும்.
2. படுத்தே இருந்தால் படுக்கையும் பகையாகும். எழுந்து முயற்சி செய் உலகே உனது வசமாகும்.
*பொன்மொழி :
தன் குழந்தை மீதான தாயின் அன்புக்கு நிகராக இந்த உலகில் எதுவும் இல்லை. --அகதா கிறிஸ்டி
*பொது அறிவு :
1. உலகின் மிக நீளமான மலைத்தொடர் எது?
விடை: ஆண்டிஸ் மலை
2. உலகின் மிக நீளமான நீர்வீழ்ச்சி எது?
விடை: ஏஞ்சல் நீர்வீழ்ச்சி
*English words & meanings :
Engrossing - interesting, ஆர்வத்தை ஈர்த்தல்,
gracious - kind, generous, கனிவான, இனிய பண்பு
*ஆரோக்ய வாழ்வு :
பசலை கீரை : பசலைக் கீரையில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது பொதுவாக உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப் படுகிறது. சோடியத்தின் அளவை கட்டுப் படுத்துவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
*நீதிக்கதை
_ஓர் ஆற்றின் கரை அருகே ஒரு வேப்பமரம் இருந்தது. அந்த வேப்பமரத்தில் சுஸ்வரூபி என்று ஒரு குருவி. அது அந்த மரத்தில் கூடுகட்டி முட்டைகள் இட்டு குஞ்சுகள் பொறித்து இருந்தது. தன் குஞ்சுகளை பாசமாக பராமரித்து வந்தது.
ஒருநாள் பலத்த காற்றுடன் மழை வேகமாகப் பெய்தது. இதனால் ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடி யது! சுஸ்வரூபியின் கூடு சேதமடையத் தொடங்கியது. குஞ்சுகளுக்கு பயம் கவ்விக்கொண்டது. அம்மா!.... இப்போ என்னம்மா செய்யறது!.... நாங்களெல்லாம் கீழே ஓடும் ஆற்றில் விழுந்துடுவோமா?...எங்களுக்குப் பறக்கக்கூடத் தெரியாதே.....இப்படி மழை பெய்கிறதே..... அம்மா!.... நீ எங்கேயாவது போய்விடும்மா!.... உன்னால் பறக்க முடியும்! எங்களைப் பற்றிக் கவலைப்படாதே.... நீ நினைத்தால் மேலும் முட்டைகள் இட்டுக் குஞ்சு பொறித்துக் கொள்ளலாம்.... இந்த மழையில் எங்களைத் தூக்கிக்கொண்டு உன்னால் பறக்க முடியாது!.... எங்களைக் கடவுள் காப்பாற்றுவார்!" என்றன.
சுஸ்வரூபிக்கு அழுகையே வந்துவிட்டது!.... குழந்தைகளின் பேச்சு அவளது நெஞ்சைக் கரைத்துவிட்டது. எவ்வளவு அறிவாய் பேசுதுங்க என் குஞ்சுகள்! இவைகளையா விட்டுவிட முடியும்?.... கண்ணீர் முட்டியது. கடவுளைப் பிரார்த்தித்தது.
இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, "கண்மணிகளா!.... அப்படிச் சொல்லாதீங்க...... நம்மகிட்டே தன்னம்பிக்கை இருக்கிறது.... எந்தத் தடங்கல் வந்தாலும் சமாளிப்போம்!..... கவலைப்படாதீங்க...." என்றது சுஸ்வரூபி. அதன் பின் மழையும் புயலும் குறைந்தது.சுஸ்வரூபியும் குஞ்சுகளும் மகிழ்ச்சியடைந்தன.ஆபத்தில் பயப்படாமல் தன்னம்பிக்கையுடன் கடவுளை வேண்டி செயல்படவேண்டும்.
*இன்றைய செய்திகள் : 12.02.2025
மாநிலச்செய்தி:
தமிழ்நாடு மின்வாரியத்துக்கு உள்ளாட்சி அமைப்புகள், பிற அரசு துறைகள் ரூ.7,351 கோடி மின்கட்டண பாக்கி
உள்நாட்டு செய்தி:
முதல்வர் பிரேன்சிங் ராஜினாமா - மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி
உலக செய்தி:
மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா’ என பெயர் மாற்றிய டிரம்ப்: விமானத்தில் பறந்து கொண்டே உத்தரவு.
விளையாட்டுச் செய்தி:
ஏபிஎன் ஆம்நரா டென்னிஸ் அல்காரஸ் சாம்பியன்: ஆஸ்திரேலிய வீரரை வென்றார்.
*Todays headlines - 12.02.2025
State News:
TamilNadu Electricity Board owes Rs 7,351 crore to local bodies, other government departments
National News:
Chief Minister Biren singh resigns: President's rule in Manipur
World News:
Trump renames Gulf of Mexico as 'Gulf of America': Orders while flying
Sports News:
ABN Amro Tennis Alcaraz Champion: Beats Australian Player.