கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Clash among school students - 9th Standard student killed



தனியார் பள்ளி மாணவர்களிடையே மோதல் - சேலத்தில் 9ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு


சீட் பிடிப்பதில் சண்டை: மாணவன் உயிரிழப்பு


Clash among private school students - Class 9 student killed in Salem


தனியார் பள்ளி வாகனத்தில் சீட் பிடிப்பது தொடர்பாக மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் உயிரிழந்தான்.


சேலம் எடப்பாடியில், நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீடு திரும்ப வாகனத்தில் ஏறிய மாணவர்கள், சீட் பிடிக்க சண்டையிட்டுள்ளனர். அப்போது ஒரு மாணவன் எட்டி உதைத்ததில், மார்பில் காயமடைந்த 9-ம் வகுப்பு மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.


இதனால், பாதுகாப்பு கருதி, பள்ளி முன்பு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.


எடப்பாடி அருகே தனியார் பள்ளி மாணவர்களுக்கிடையே பள்ளி வாகனத்தில் இடம் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில், நெஞ்சில் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட தாவாந்தெருவில் செயல்பட்டு வரும் விஸ்டம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்,  வெள்ளாண்டிவலசு பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் கந்தகுரு ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். 


இந்நிலையில் நேற்று மாலை பள்ளி வாகனத்தில் வரும்போது மாணவர்களிடையே அமர்வதற்கு இடம் பிடிப்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவன் கந்தகுருவுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அவரை எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று முதலுதவி சிகிச்சை வழங்கிய நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மாணவன் பரிதாபமாக மரணம்..

சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் கந்தகுரு, இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


இத்தகவலை அறிந்த எடப்பாடி போலீசார் தனியார் பள்ளிக்கு அசம்பாவிதம் நிகழாவண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு, இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். தனியார் பள்ளி மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு அப்பாவி மாணவன் உயிரிழந்த இந்நிகழ்வு பொது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2025 - SAT Question Paper

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள் NMMS 2025 - SAT Question ...