கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

28-02-2025 - School Morning Prayer Activities

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-02-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: பெருமை

குறள் எண்:979

பெருமை பெருமிதம் இன்மை; சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.

பொருள்:
தற்பெருமையற்றது பெருமையின் குணம், தற்பெருமையுடையது சிறுமையின் குணம்


பழமொழி :
அதிகம் கேள், குறைவாகப் பேசு.

Hear more, but talk less


இரண்டொழுக்க பண்புகள் :  

* வெயில் காலத்தில் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்ப்பேன். 

  *மோர், இளநீர், கம்பு, கேழ்வரகு கூழ் போன்ற இயற்கை குளிர்பானங்கள் குடித்து வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பேன்.


பொன்மொழி :

நீ நினைத்ததை அடைய , நீ நினைத்துப் பார்த்ததை விட அதிகம் "உழைக்க" வேண்டும்.


பொது அறிவு :

1. பழ மரங்களிலேயே சுமார் 400 ஆண்டுகள் விளைச்சல் தரும் மரம் எது?

விடை : ஆரஞ்சு மரம்.

2. இந்தியாவில் நறுமணப் பொருட்களை உற்பத்தி செய்யும் மாநிலம் எது?

விடை : கேரளா


English words & meanings :

Police station     -     காவல் நிலையம்

Post office     -      தபால் நிலையம்


பிப்ரவரி 28

தேசிய அறிவியல் நாள்

தேசிய அறிவியல் நாள் (National Science Day) இந்தியாவில் பெப்ரவரி 28 ஆம் நாளில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 1987 - ஆம் ஆண்டு இந்தத் தேசிய அறிவியல் நாள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது.இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அரிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்டவரும் சிறந்த இயற்பியல் மேதையுமான சர். சி. வி ராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது.

சர். சி. வி. இராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது.


நீதிக்கதை

அக்பர்-பீர்பால்  மனவேறுபாடு

அக்பருக்கும் பீர்பாலுக்கும்

அடிக்கடி ஏற்படும் மனவேறுபாடு அன்றைக்கும் ஏற்பட்டது.

அக்பர் ஏதோ சொல்ல,

அதற்கு பதிலாக பீர்பால் எதையோ சொல்ல… பேச்சு வளர்ந்து பெரிய சச்சரவில் கொண்டு போய் விட்டு

விட்டது. மன்னர் கோபம் கொண்டார்.

“இனிமேல் என்னுடைய மண்ணில் நீ வாழக்கூடாது.

எனது ஆளுகைக்கு உட்பட்ட  மண்ணை விட்டு நீ வெளியேறி விடவேண்டும்!” என்று

ஆணை பிறப்பித்தார்.

“சரி. உம்முடைய அதிகாரத்துக்கு உட்பட்ட மண்ணில் நான் வாழமாட்டேன்!” என்று வீராப்பாகச் சொன்ன பீர்பால் அங்கிருந்து வெளியாகி

சீன நாட்டுக்கு சென்றார்.



சில ஆண்டுகள் கழித்து ஏராளமான மூட்டைகளுடன் தில்லி வந்து சேர்ந்தார்!

பீர்பால் ஏதோ ஒரு வெளிநாட்டுக்கு சென்று சிலகாலம் இருந்து விட்டு இப்போது மீண்டும்

தில்லிக்கே வந்துவிட்டதை

அக்பர் அறிந்தார். உடனே அவருக்கு சினம் வந்தது.

தனது தலைமை அமைச்சரை அனுப்பி பீர்பாலை உடனே அரசவைக்கு அழைத்து

வரச் சொன்னார்.

பீர்பாலின் இல்லம் சென்ற அமைச்சரை அன்போடு வரவேற்று வீடு முழுவதையும் சுற்றிக் காட்டினார் பீர்பால்.

“இது என்ன வீட்டுக்குள்ளும் வெளியிலும் மண்ணைக்

கொட்டி வைத்திருக்கிறீர்களே?” என்று கேட்டார் அந்த

அமைச்சர்.“இந்த மண் சீன நாட்டில் இருந்து கொண்டு வந்தேன். ஒரு காரணத்திற்காகத்தான்

பரப்பி வைத்திருக்கிறேன்!”

என்று கூறினார்.

பின்னர் அந்த அமைச்சரின் வண்டியைப் பின்தொடர்ந்து

தன் வண்டியிலேயே அரசவை நோக்கி புறப்பட்டார்.

செல்லும் வழியில்… “இதென்ன வண்டிக்குள்ளும் இவ்வளவு மண்??” என்று கேட்டார் அந்த அமைச்சர்.“எல்லாம் காரணமாகத்தான்!” என்று

பதில் அளித்தார் பீர்பால்.

அரண்மனைக்குச் சென்றதும் அரசர் முன் நின்று

வணங்கினார் பீர்பால்.

“என் உத்தரவையும் மீறி இன்னும் தில்லி நகரத்தில் உலவுகிறீர்? 

என்னை மதிக்காமல் இந்த மண்ணில் உம்மால் வாழ்ந்து

விட முடியுமா?” என்று கோபத்துடன் கேட்டார்

அக்பர்.“மன்னர் பெருமானே! தங்கள் உத்தரவுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர வேறு எனக்கு ஒன்றும் தெரியாது. தங்களின் உத்தரவை

அப்படியே பின்பற்றி

வருகிறேன்!” என்று சொன்னார் பீர்பால் பவ்யமாக.

“எங்கே நிறைவேற்றுகிறீர்? இப்போது தில்லியில் அல்லவா நீர் தங்கி இருக்கிறீர்?” என்றார் அக்பர் சினத்துடன்.“தில்லியில் நான் தங்கி இருப்பது உண்மைதான். ஆனால்

தங்களின் மண்ணில்

நான் நடமாடவில்லை. அமைச்சரைக் கேட்டுப்

பாருங்கள். அவரே என்

வீட்டுக்கு வந்து பார்த்தாரே!” என்றார் பீர்பால்.

அக்பர் அமைச்சரை நோக்கினார்… உடனே அமைச்சர் பதில் அளித்தார்..

“மன்னர் அவர்களே! பீர்பால்

தம் வீட்டுக்குள்ளும் வீட்டுக்கு வெளியிலும் மண்ணைக்

கொட்டி பரப்பி இருக்கிறார். பயணம் செய்த வண்டியிலும்

கூட மண்ணைக் கொட்டி இருந்தார். எதற்காக இப்படி எல்லாம் செய்திருக்கிறார்

என்று எனக்கு விளங்கவில்லை. அவரைக் கேட்டேன்.. காரணமாகத்தான் என்று சொல்கிறார்!”

அப்போது பீர்பால், “மன்னர் அவர்களே,”என் வீட்டின் உள்ளும் வெளியிலும் நான் பயணம் செய்யும் வண்டியிலும் நான் உலவும் என் வீட்டுத் தோட்டங்களிலும் நான்

கொட்டி பரவி இருப்பது

சீன தேசத்தில் இருந்து

கொண்டு வரப்பட்ட மண்.

அது தில்லியின் மண் அல்ல. தங்களுக்கு சொந்தமான மண்ணில் நடமாடக் கூடாது என்றீர்கள். அதனால்தான் சீன மண்ணில் நடமாடிக் கொண்டிருக்கிறேன். இது எவ்வாறு தங்கள் உத்தரவை மீறிய செயலாகும்?” என்று அப்பாவி போல் பதில் சொன்னார்.

பீர்பால் விளக்கம் கொடுத்ததும் அக்பர் உட்பட அவையினர் சிரித்தனர். மன்னருக்கு சினம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிற்று.  தன் உத்தரவினை வாபஸ் வாங்கிக் கொண்டார் அக்பர்.


இன்றைய செய்திகள்

28.02.2025

* அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

* 25 மருத்துவமனைகளில் போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

* கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* கடந்த 10 ஆண்டுகளில் நீதிமன்ற வழக்குகளுக்காக மத்திய அரசு ரூ.400 கோடிக்கும் அதிகமாக செலவு செய்துள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

* போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு தயார்; ஹமாஸ் அமைப்பு அறிவிப்பு.

* பிங்க் பெண்கள் கோப்பை கால்பந்து போட்டி: தென் கொரியா வெற்றி.


Today's Headlines

* The Medical Services Recruitment Board has announced that applications are invited for 425 vacant pharmacist positions in government hospitals.

* Chief Minister Stalin has inaugurated de-addiction treatment and rehabilitation centers in 25 hospitals.

* The Chennai Meteorological Centre has predicted heavy rain in 10 districts, including Kanyakumari and Tirunelveli, today.

* The Central government has spent over ₹400 crore on court cases over the past 10 years, according to government data.

* Hamas has announced its readiness for the next round of ceasefire talks.

* South Korea wins the Pink Women's Cup football tournament.


Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

28-02-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-02-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: பெருமை கு...