குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடைபெறாமல் தடுக்க தனியார் / அரசுப் பள்ளிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு
Actions to be taken by Private / Government Schools and Higher Education Institutions to prevent sexual abuse against children - Tamil Nadu Government Press Release
The Chief Secretary to Government chaired a meeting on prevention of sexual abuse of school children
Press Release No:358, Dated : 17-02-2025
செய்தி வெளியீடு எண்: 358, நாள்: 17.02.2025
தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இப்பொருள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தனியார் / அரசுப் பள்ளிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.