அமைச்சர்களுடன் ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர்களின் இன்றைய பேச்சுவார்த்தை விவரங்கள்
Details of today's talks of JACTTO GEO officials with ministers
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில மாவட்ட வட்டார நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம்
இன்றைய தினம் காலை 11 மணி அளவில் தலைமைச் செயலகம் பத்தாவது மாடியில் மாண்புமிகு நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு எ வ வேலு அவர்கள் தலைமையில் மாண்புமிகு நிதியமைச்சர் மற்றும் மாநில பள்ளி கல்வி அமைச்சர் மற்றும் மாண்புமிகு மனிதவளமேம்பாட்டு துறை அமைச்சர் ஆகியோர் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் உடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது
பேச்சுவார்த்தைக்கு சுழல்முறை தலைமையாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் திரு கே பி ரக் ஷித், அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் திரு சீனிவாசன் , தமிழக தமிழ் ஆசிரியர் கழக கௌரவத் தலைவர் புலவர் திரு ஆ ஆறுமுகம் ஆகியோர் தலைமை ஏற்றனர்
பேச்சுவார்த்தையில் 32 ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டு தமது கருத்துகளை எடுத்துரைத்தனர்
ஜாக்டோ ஜியோவின் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு மற்றும் ஈட்டிய விடுப்பு சரண் ஒப்படைப்பு, அரசாணை 243 ரத்து உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளும் முழுமையாக அமைச்சர் குழுவிடம் மிக விளக்கமாக தெரிவிக்கப்பட்டது
இறுதியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அவர்கள் நமது கருத்துகள் அனைத்தையும் உள்வாங்கி இன்றைய தினம் மாலை 7 மணி அளவில் முதல்வரை சந்தித்து 8 மணி அளவில் மீண்டும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை தலைமைச் செயலகத்திலேயே சந்தித்து விவரங்களை தெரிவிப்பதாக தெரிவித்து கூட்டம் முடிவடைந்தது
உறுதியான எந்த முடிவும் எட்டப்படாத காரணத்தினால் போராட்ட நடவடிக்கைகள் எந்தவித தடையும் இன்றி தொடர்கின்றன
இரவு 8 மணிக்கு நடைபெறும் அமைச்சர் குழு உடனான பேச்சுவார்த்தைக்கு பின் முடிவுகள் தெரிவிக்கப்படும்
கே பி ரக் ஷித் மாநிலத் தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி