கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Hindi was not imposed in the trilingual policy. But we are committed to the new education policy - Union Education Minister Dharmendra Pradhan



 மும்மொழிக் கொள்கையில் இந்தியை திணிக்கவில்லை. ஆனால், புதிய கல்விக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் - மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்


Hindi was not imposed in the trilingual policy. But we are committed to the new education policy - Union Education Minister Dharmendra Pradhan


மும்மொழிக் கொள்கையில் இந்தியை திணிக்கவில்லை, ஆனால் புதிய கல்விக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்மேந்திர பிரதான் நிருபர்கள் சந்திப்பில், ‘புதிய கல்விக்கொள்கையை அனைத்து மாநிலங்களும் ஏற்க வேண்டும் என்பது விதி. அனைத்து மாநிலங்களும் அதை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஏன் தமிழக அரசு மட்டும் ஏற்க மறுக்கிறது?. இந்தியையோ, பிற மொழியையோ தமிழ்நாட்டின் மீது திணிக்கவில்லை; ஆனால் புதிய கல்வி கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்.மும்மொழிக் கொள்கை அமல்படுத்துவதில் சில நண்பர்கள் அரசியல் செய்கின்றனர்.


தமிழ், ஆங்கிலம் தவிர 3வதாக இந்திய மொழி ஒன்றை கற்க கூறுகிறோமே தவிர, இந்தியை அல்ல. தமிழ் மொழி பழமையான மொழிகளில் ஒன்றாகும். அனைத்து மொழிகளையும் நான் மதிக்கிறேன். தேசிய கல்வி கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் தருகிறது. தமிழ்நாட்டில் ஒரு மாணவர் கல்வியில் பன்மொழி அம்சத்தைக் கற்றுக்கொண்டால் என்ன தவறு. மாணவர்கள் மத்தியில் போட்டியை உருவாக்க தேசிய அளவில் பொதுவான தளத்திற்கு வர வேண்டும். மும்மொழி கொள்கையில் இந்தி கட்டாயமில்லை. பிற இந்திய மொழிகளாக இருக்கலாம். புதிய கல்வி கொள்கை, பிரதமரின் கனவுத் திட்டம். இதை செயல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The secret of life: Be happy and helpful to others until the last moment

வாழ்வின் ரகசியம் : கடைசி நொடி வரையில் மகிழ்ச்சியாகவும், இயன்றவரை பிறருக்கு உதவிகரமாகவும் இருங்கள் The secret of life: Be happy and helpful t...