பள்ளிக்கல்வி - அகத்தணிக்கை - பிப்ரவரி 2025 மாதத்தில் 14, 21 & 28 ஆகிய தேதிகளில் மாவட்ட வாரியாக தணிக்கைத் தடை நீக்கம் செய்தல் கூட்டமர்வு - பள்ளிக் கல்வித் துறை நிதி ஆலோசகர் மற்றும் முதன்மைக் கணக்கு அலுவலரது செயல்முறைகள், ந.க.எண் : 058863/ அகத - 2/ 2025 நாள். 02.2025 & படிவங்கள்
School Education - Internal Audit - District wise audit debarment meeting on 14th, 21st & 28th February 2025 - Proceedings of School Education Department Financial Adviser and Principal Accounts Officer, Rc. No : 058863/ IA - 2/ 2025, Dated. 02.2025 & Forms
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
இயக்கப் பொறுப்பாளர்களின் கனிவான கவனத்திற்கு...
பள்ளி கல்வித் துறை *நிதி ஆலோசகர் மற்றும் முதன்மைக் கணக்கு அலுவலரது* செயல்முறைகள் *ந.க* . *எண் 058863/அகத/* 2-2025 நாள்.02.2025 இன் படி *மாவட்ட வாரியாக* தணிக்கை தடை நீக்கம் செய்ய *கூட்ட அமர்வுகள்* ஏற்படுத்தப்பட்டுள்ளது...
தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்கள் தங்களுக்கு உள்ள தணிக்கைத் தடையினை நீக்க இது *நல்லதொரு* வாய்ப்பாக பார்க்கப்படுகிறது...
செயல்முறைகளில் *தணிக்கைத் தடை நீக்கம்* என்று *பொதுவாகத்* தான் குறிப்பிடப் பட்டுள்ளது...
ஆனால் கடந்த 14/02/25 *வெள்ளிக்கிழமை* நடைபெற்ற கூட்ட அமர்வில்... (அனைத்து இடங்களிலும்)
SPL Fee/NSD / scholarship account *interest* payment *challan* ...
போன்ற ஆசிரியர்கள் பணப் பலன் சாராத தணிக்கை தடை மட்டுமே நீக்க ஆவணம் செய்யப்படும்...
*ஆசிரியர்களின் பணப் பலன் சார்ந்த* , குறிப்பாக "*M.Phil*" audit போன்ற தணிக்கை தடை *பார்க்கப்பட* *மாட்டாது* ..
அதை சென்னையில் *அந்த ஆசிரியர்கள்* தான் நேரடியாக " *தனிப்பட்ட முறையில்* " நீக்கம் செய்து கொள்ள வேண்டும் என *வாய்மொழியாக* அறிவுறுத்தப்பட்டதாக அறிய முடிகிறது 😞..
இது *தணிக்கைத் தடை நீக்கம்* சார்ந்த பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது...
தணிக்கைத் தடை நீக்க கூட்ட அமர்வின் *உண்மையான* நோக்கத்திற்கு *எதிராக* உள்ளது 🙏...
தாங்கள் சார்ந்துள்ள சங்க உறுப்பினர்கள்/ஆசிரியர்கள் பலன் பெறும் வகையில்
தற்போது மாவட்ட வாரியாக அடுத்து 21 & 28 பிப்ரவரி 2025 இல் நடைபெற உள்ள அடுத்த *அமர்வுகளில்* ...
ஆசிரியர்களின் " *தணிக்கைத் தடை* " நீக்கம் செய்ய உரிய *ஆவணங்கள்* *சமர்ப்பிக்கும்* நிகழ்வுகளில் *அவற்றை நீக்கம் செய்ய ஆவன* செய்யுமாறு....
பள்ளிக் கல்வித் துறை *இயக்குநர்* மற்றும்
பள்ளிக் கல்வித் துறை *நிதி ஆலோசகர்* மற்றும் *முதன்மைக் கணக்கு அலுவலரின் பார்வைக்கு* கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்....
☝️☝️☝️
*`Courtesy:`*
Mr.K.Selvakumar,
Head Master,
GHSS, M.Subbulapuram,
Madurai - Dt