கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Audit Objection லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Audit Objection லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

BEO sent audit objection notice to teachers for Rs 3 crore

 


 ரூ.3 கோடிக்கு ஆசிரியர்களுக்கு தணிக்கை தடை நோட்டீஸ் அனுப்பிய வட்டாரக் கல்வி அலுவலர் 


Block Education Officer sent audit objection notice to teachers for Rs 3 crore


சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் 95 பேருக்கு தணிக்கை தடைக்கான விளக்க நோட்டீஸ் அளித்துள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


சிவகங்கை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியத்தின் கீழ், வட்டார கல்வி அலுவலகம் செயல்படுகிறது. காளையார்கோவில் வட்டார கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள 150 க்கும் மேற்பட்ட அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி, தலைமை ஆசிரியர்கள் 450 க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றனர்.


இவர்களுக்கான சம்பளம், பண மற்றும் பணிப்பலன்கள் காளையார்கோவில் வட்டார கல்வி அலுவலர் மூலம் வழங்கப்படுகிறது.


ஆசிரியர்களுக்கான ஊக்க சம்பள உயர்வு, விடுப்பு கணக்கு, சீனியர், ஜூனியர் ஆசிரியர் சம்பள முரண்பாடு, உயர்கல்வி பயில்வதற்கு துறை முன் அனுமதி ஆகியவற்றை வட்டார கல்வி அலுவலர்களே வழங்கி வருகின்றனர்.


இந்நிலையில், இந்த வட்டார கல்வி அலுவலகத்தில் 2017--2018 முதல் 2022-2023 ம் ஆண்டு வரையிலான 6 ஆண்டுக்கான துறை தணிக்கை 2023 ஆக.,28 முதல் செப்., 1ம் தேதி வரை நடந்தது.


இந்த தணிக்கை முடிவின்படி 95 ஆசிரியர்களுக்கு தணிக்கை தடை உள்ளதாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். குறிப்பாக பணிப் பதிவேட்டில் பதிவு செய்யாதது, மாவட்ட கல்வி அலுவலரிடம் அனுமதி பெறாதது உள்ளிட்ட தவறுகள் என குறிப்பிட்டுள்ளனர். இந்த பணிகளை வட்டார கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் தான் செய்ய வேண்டும். ஆனால் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளது, ஆசிரியர்களிடையே கடும் மன உளைச்சலையும், அவர்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.



முதல்வரின் நடவடிக்கை தேவை


பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறியதாவது: ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் பல ஆயிரம் ரூபாய் முதல் ரூ.3 லட்சம் வரை திரும்ப ஒப்படைக்க கோரி தணிக்கை தடை விளக்க நோட்டீஸ் அளித்துள்ளனர்.


அந்த வகையில் 95 ஆசிரியர்கள் ரூ.3 கோடி வரை திரும்ப செலுத்துமாறு நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜன.,6 முதல் நோட்டீஸ் வழங்கி, 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க கூறியுள்ளனர். இது ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கைக்கு இன்று வரும் முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.



தணிக்கை கணக்காளரின் நோட்டீஸ்


காளையார்கோவில் வட்டார கல்வி அலுவலர் சகாய செல்வன் கூறியதாவது, சென்னை ஆடிட்டர் ஜெனரலில் (தணிக்கை கணக்காளர்) இருந்து நோட்டீஸ் வந்துள்ளது. அதை வட்டார கல்வி அலுவலர் என்ற முறையில் 95 ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ளேன். இது குறித்து நடக்கும் கூட்டு அமர்வில், ஆசிரியர்கள் தங்களது தரப்பு நியாயத்தை தெரிவித்து, தீர்வு பெறலாம். இது வழக்கமான விஷயம் தான். ஆசிரியர்கள் அதிர்ச்சியாக ஒன்றும் இல்லை, என்றார்.



சிறப்பு படிகள் பெற தணிக்கை தடை - பெற்ற ரூ.34,90,240 தொகையை 15-04-2024க்குள் திரும்ப செலுத்த உத்தரவு - இணைப்பு : ஆசிரியர்கள் பெயர்ப் பட்டியல்...

 


சிறப்பு படிகள் பெற தணிக்கை தடை - பெற்ற ரூ.34,90,240 தொகையை 15-04-2024க்குள் திரும்ப செலுத்த உத்தரவு - இணைப்பு : ஆசிரியர்கள் பெயர்ப் பட்டியல்...


Audit Objections for obtaining Special Allowances - Order to refund the received amount of Rs.34,90,240 by 15-04-2024 - Attachment : Name list of teachers...


அரசாணை எண்.304, ஊதியக்குழு, நாள்: 13.10.2017 மற்றும் அரசாணை எண்: 306, ஊதியக்குழு, நாள்: 13.10.2017 ஆகிய அரசாணைகள் தணிக்கைத் தடையில் குறிப்பிடப்பட்டுள்ளன.


G.O. No.304, Pay Commission, Dated: 13.10.2017 and G.O. No: 306, Pay Commission, Dated: 13.10.2017 are mentioned in the Audit Objection.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தணிக்கை தடைகள் மீது மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


 

தணிக்கை தடைகள் மீது மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Proceedings of the Director of School Education regarding the follow-up action to be taken on audit objections...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



ஓய்வு / விருப்பு ஓய்வு பெறுதல், ஊதிய நிர்ணயம் / ஊக்க ஊதியம், அரசு / பள்ளி நிதிகள் தொடர்பாக பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் அகத்தணிக்கை மற்றும் தணிக்கை தடைகள் நிவர்த்தி செய்தல் தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ஓ.மு.எண்: 48853/ அகத்தணக்கை (நி.ஆ.(ம) மு.க.அ.)/ 2023-1, நாள்: 28-09-2023 (Proceedings of the Director of School Education regarding procedures to be followed in relation to retirement / voluntary retirement, Pay fixation / incentive pay, internal audit of schools and offices in relation to government / school funds and removal of audit objections O.M.No: 48853/ Internal Audit (N.E. (M) C.E.O.)/ 2023-1, Dated: 28-09-2023)...


 ஓய்வு / விருப்பு ஓய்வு பெறுதல், ஊதிய நிர்ணயம் / ஊக்க ஊதியம், அரசு / பள்ளி நிதிகள் தொடர்பாக பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் அகத்தணிக்கை மற்றும் தணிக்கை தடைகள் நிவர்த்தி செய்தல் தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ஓ.மு.எண்: 48853/ அகத்தணக்கை (நி.ஆ.(ம) மு.க.அ.)/ 2023-1, நாள்: 28-09-2023 (Proceedings of the Director of School Education regarding procedures to be followed in relation to retirement / voluntary retirement, Pay fixation / incentive pay, internal audit of schools and offices in relation to government / school funds and removal of audit objections O.M.No: 48853/ Internal Audit (N.E. (M) C.E.O.)/ 2023-1, Dated: 28-09-2023)...


>>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ஓ.மு.எண்: 48853/ அகத்தணக்கை (நி.ஆ.(ம) மு.க.அ.)/ 2023-1, நாள்: 28-09-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எம்.பில்., (M.Phil.,) தணிக்கைத் தடை செய்யப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை திரும்ப வழங்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு - வழக்கு எண்: W.A.No.2328/ 2018, தீர்ப்பு நாள் 04-08-2023 (M.Phil., Incentive pay increase which was disallowed by audit objection should be given back - Madras High Court Judgment - Case No: W.A.No.2328/ 2018, Judgment Date 04-08-2023)...

 

 M.Phil., தணிக்கை தடை....


முன்பு கோவை மண்டல தணிக்கை துறை...

கிட்டத்தட்ட M.Phil என்றாலே (அதுவும் 2007க்குப் பிறகு எனில் கட்டாயம்) தணிக்கைத் தடை என்ற நிலை.


குறிப்பாக வழக்கு எண்: 42657/2016, தீர்ப்பு நாள்: 06/09/2018ஐ காரணம் காட்டி எல்லோருக்கும் தடை என்ற நிலை...


தற்போது மண்டல தணிக்கை துறை இல்லை....


ஆனாலும் சென்னை தணிக்கையிலும் 

தற்போது 2007க்கு பிறகு எனில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும், அரசாணை 91, உயர் கல்வி துறை, நாள்: 03-04-2009 இன் படி M.Phil தணிக்கை தடை செய்யப்பட்டு வருகிறது...


இதற்கு மிகப் பெரிய தீர்வு கிடைத்துள்ளது.


சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண்: W.A.No.2328/ 2018, தீர்ப்பு நாள் 04-08-2023...

 

 பத்தி 34 இல் அரசாணை 91 நியமனம் பற்றி மட்டுமே சொல்கிறது அது ஊக்க ஊதிய உயர்வு குறித்து சொல்லவில்லை என்று மிகச் சிறந்த தீர்ப்பு வழங்கியுள்ளது...


பத்தி 35ல்....


 06-09-2018 நாளிட்ட தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.


ஏற்கனவே ஊக்க ஊதிய உயர்வு பெற்று வருபவர்கள் தொடரலாம்...


இந்த தீர்ப்பு காரணமாக 2007-2009 வரை தடை செய்யப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை திரும்ப வழங்க வேண்டும்...


இந்த வழக்கை வெற்றிகரமாக நடத்திட்ட சிவன் சாருக்கு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் 💐💐💐💐💐....


தணிக்கை தடை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நூற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்கு இது மிகப் பெரிய நிம்மதியான தீர்ப்பு...


தீர்ப்பு நகல் (Judgment Copy) இணைக்கப்பட்டுள்ளது... 🤝🏻


>>> எம்.பில்., (M.Phil.,) தணிக்கைத் தடை செய்யப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை திரும்ப வழங்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு - வழக்கு எண்: W.A.No.2328/ 2018, தீர்ப்பு நாள் 04-08-2023 (M.Phil., Incentive pay increase which was disallowed by audit objection should be given back - Madras High Court Judgment - Case No: W.A.No.2328/ 2018, Judgment Date 04-08-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின்போது வழங்கப்பட்ட தனி ஊதியம் ரூபாய் 750 வழங்கப்பட்டதற்கு, திருச்சி மண்டல தணிக்கை குழு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தணிக்கை தடையினை நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of Elementary Education depend on taking action to remove the Audit Objection done by the Trichy Zonal Audit Committee on the Personal Pay of Rs 750 given to Secondary Grade Teachers on Promotion) ந.க.எண்: 2904/ சி2/ 2022, நாள்: 13-10-2022...


>>> இடைநிலை  ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின்போது வழங்கப்பட்ட தனி ஊதியம் ரூபாய் 750 வழங்கப்பட்டதற்கு, திருச்சி மண்டல தணிக்கை குழு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தணிக்கை தடையினை நீக்கம் செய்ய  நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of Elementary Education depend on taking action to remove the Audit Objection done by the Trichy Zonal Audit Committee on the Personal Pay of Rs 750 given to Secondary Grade Teachers on Promotion) ந.க.எண்: 2904/ சி2/ 2022, நாள்: 13-10-2022...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



மதுரை மண்டல கணக்கு அலுவலகத்தில், நிலுவையில் உள்ள நிதி சார்ந்த தணிக்கை தடைகளை விரைந்து நிவர்த்தி செய்ய பள்ளிக் கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் செயல்முறைகள் (School Education Commissioner Financial Control Officer Proceedings to expeditiously resolve outstanding financial Audit Objections, In Madurai Zonal Accounts Office)...



>>> மதுரை மண்டல கணக்கு அலுவலகத்தில், நிலுவையில் உள்ள நிதி சார்ந்த தணிக்கை தடைகளை விரைந்து நிவர்த்தி செய்ய பள்ளிக் கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் செயல்முறைகள் (School Education Commissioner Financial Control Officer Proceedings to expeditiously resolve outstanding financial Audit Objections, In Madurai Zonal Accounts Office)...





காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில்(Karaikudi Alagappa University) SSP (Summer Sequential Programme) முறையில் நடத்தப்பெறும் M.Phil., உயர் கல்விக்கு ஊக்க ஊதிய உயர்வு(Incentive) வழங்க தகுதியில்லை என பள்ளிக் கல்வித் துறை மதுரை மண்டல கணக்கு அலுவலர் (தணிக்கை) RTI தகவல் கடிதம் ந.க.எண்:1642/அ1/2021, நாள்: 27-08-2021...



 காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில்(Karaikudi Alagappa University) SSP (Summer Sequential Programme) முறையில் நடத்தப்பெறும் M.Phil., உயர் கல்விக்கு ஊக்க ஊதிய உயர்வு(Incentive) வழங்க தகுதியில்லை என பள்ளிக் கல்வித் துறை மதுரை மண்டல கணக்கு அலுவலர் (தணிக்கை) RTI தகவல் கடிதம் ந.க.எண்:1642/அ1/2021, நாள்: 27-08-2021...


>>> பள்ளிக் கல்வித் துறை மதுரை மண்டல கணக்கு அலுவலர் (தணிக்கை) RTI தகவல் கடிதம் ந.க.எண்:1642/அ1/2021, நாள்: 27-08-2021...



தணிக்கை தடை (AUDIT OBJECTION) எழாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆசிரியர்களுக்கான சில ஆலோசனைகள்...


 வட்டாரக் கல்வி அலுவலகங்களில்  மண்டல தணிக்கைத் துறை அலுவலர்களால், ஆசிரியர்களின் பணிப் பதிவேடு தொடர்பான தணிக்கை நடைபெறும் போது, தணிக்கை அலுவலர்களால் பொதுவாக சுட்டிக் காட்டப் படும் சிறு சிறு குறைபாடுகள்:


1. ஒரு ஆசிரியர் அரசுப் பணிக்கு வரும் முன்னரே, கூடுதல் கல்வித் தகுதி பெற்றிருந்தால், பணியில் சேரும் முன்னரே உயர் கல்வி பெற்றுள்ளார் என்ற பதிவை வட்டாரக் கல்வி அலுவலருக்கு விண்ணப்பித்து பணிப் பதிவேட்டில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.


2. உயர் கல்வி பயில்வதற்கான முன் அனுமதி ஆணை வழங்கப் படும் விவரம், 2012 ஆம் ஆண்டிற்கு பின்பு தான், பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப் படுகிறது. அதற்கு முன்னர் ஆணை மட்டும் தான், வழங்கப் பட்டது. ஆனால் தற்போது தணிக்கைத் துறை அலுவலர்கள், பணி நியமன நாள் முதல் இன்று வரை, பணிப் பதிவேட்டில் பதிவு செய்துள்ள அனைத்து கூடுதல் கல்வித் தகுதிகளுக்கும் முன் அனுமதி அல்லது பின்னேற்பு பதிவு செய்வது கட்டாயம் என வலியுறுத்துகின்றர். ஊக்க ஊதியம் பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும் முன் அனுமதி / பின்னேற்பு ஆணையை வட்டாரக் கல்வி அலுவலரிடம் காண்பித்து, பணிப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.


3. 10 ஆம் வகுப்பு முதல், நாம் பணிப் பதிவேட்டில் பதிவு செய்திருக்கும் அனைத்து கல்வித் தகுதிகளுக்கும் உண்மைத் தன்மைச் சான்றினைப் பெற்று பணிப் பதிவேட்டில் பதிவு செய்திருக்க வேண்டும். அதன் நகலும் ஆசிரியர் கைவசம் வைத்திருக்க வேண்டும்.


4. பணிப் பதிவேட்டில், தற்காலிக தேர்ச்சி சான்று மட்டும் பதிவு செய்திருத்தல் கூடாது. அப்படிப்பிற்கான பட்டச் சான்றை பணிப் பதிவேட்டில் பதிவு செய்திருக்க வேண்டும்.


5. இதற்கு முந்தைய தணிக்கையின் போது, ஏதேனும் குறைபாடுகள் சுட்டிக் காட்டப் பட்டிருந்தால், அவற்றை நிவர்த்தி செய்திருக்க வேண்டும்.


6. பணியிட மாறுதல் ஏதேனும் பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப் படாமல் விடுபட்டிருந்தால், அவற்றை உரிய ஆவணங்களின் அடிப்படையில் விடுதல் பதிவாக பதிவு செய்ய விண்ணப்பித்து, பதிவு செய்ய வேண்டும்.


7.  CL, RH தவிர பிற அனைத்து விடுப்பு வகைகள், ஈட்டிய விடுப்பு பணப் பயன், ஈட்டிய விடுப்பு கையிருப்பு, பணிக் காலம் சரி பார்ப்பு இவற்றில் ஏதேனும் விடுபட்டிருந்தால் சரி செய்து கொள்ள வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்ட காலம், ஊதியமில்லா விடுப்பாக பதிவு செய்யப் பட்டிருக்க வேண்டும். கலந்து கொண்ட போராட்ட நாட்களுக்கு ஏற்ப, ஆண்டு ஊதிய உயர்வு தள்ளி போயிருக்க வேண்டும்.


8. குடும்ப உறுப்பினர் விவரம், வாரிசு நியமனம் இவற்றில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் உடனே விண்ணப்பித்து சரி செய்து கொள்வது நல்லது.


9. பி.எட். கற்பித்தல் பயிற்சிக்காக, அரைச் சம்பள விடுப்பு எடுத்திருந்தால், அதை ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு கணக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.


10. பணிப் பதி வேட்டின் நகல் தங்களிடம் இருந்தால், அனைத்து பதிவுகளும் சரியாக உள்ளதா? என்பதை சரிபார்த்துக் கொள்வது நல்லது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Environment Clubs to be established in all schools - Chief Minister

 தமிழ்நாட்டின் எல்லாப் பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...