கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

New FASTag norms effective from 17-02-2024

 

புதிய FASTag விதிமுறைகள் 17-02-2024 முதல் நடைமுறை


New FASTag rules effective from 17-02-2024


போதிய பேலன்ஸ் இல்லாவிட்டால் 2 மடங்கு அபராதம் விதிக்க வாய்ப்பு


 ஃபாஸ்ட் டேக்கின் முக்கிய மாற்றங்கள்: நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) ஜனவரி 28, 2025 தேதியிட்ட சுற்றறிக்கையின்படி, ஃபாஸ்டேக் பரிவர்த்தனைகள் இனி சுங்கச்சாவடியில் டேக் ஸ்கேன் செய்யப்படும் நேரத்தைப் பொறுத்து சரிபார்க்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.


 ஸ்கேன் செய்வதற்கு 60 நிமிடங்களுக்கு முன்பு: சுங்கச் சாவடியை அடைவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு ஃபாஸ்ட் டேக் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டிருந்தாலோ அல்லது ஹாட் லிஸ்டில் இருந்தாலோ அல்லது குறைந்த பாலன்ஸ் கொண்டிருந்தாலோ பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். அதாவது சுங்கச்சாவடிக்கு வருவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே உங்கள் ஃபாஸ்ட் டேக்கில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் பரிவர்த்தனை ரத்து செய்யப்படும்.


ஸ்கேன் செய்யப்பட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு: ஃபாஸ்ட் டேக் ஸ்கேன் செய்யப்பட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு ப்ளாக்லிஸ்ட் செய்யப்பட்டால் அல்லது செயலற்ற நிலையில் இருந்தாலும் பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். அதோடு ஃபாஸ்ட் டேக் இந்த இரண்டு நிபந்தனைகளையுமே பூர்த்தி செய்திருந்தால் "எர்ரர் கோட் 176" உடன் பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். அதோடு வாகனத்திற்கு அபராதமாக 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்.


 பொதுவாக ஃபாஸ்ட் டேக் ஒயிட் லிஸ்ட்டட் மற்றும் பிளாக் லிஸ்டட் செய்யப்படும். ஒயிட் லிஸ்டட் என்பது ஆக்டிவாக உள்ள ஃபாஸ்ட் டேக்குகளை குறிக்கிறது. போதுமான பேலன்ஸ் இல்லாமல் இருப்பது, கேஒய்சி செயல்முறையை முடிக்காமல் இருப்பது, சரிபார்ப்பு செயல்முறை நிலுவையில் இருப்பது, வாகனப்பதிவு விவரங்களில் இருக்கும் முரண்பாடுகள் போன்ற காரணங்களினால் ஃபாஸ்ட் டேக் பிளாக் லிஸ்ட் செய்யப்படலாம்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கல்லூரிக் கனவு கையேடு - மே 2025

கல்லூரிக் கனவு கையேடு - மே 2025 Kalloori Kanavu Guide - May 2025 - College Dream Guide கல்லூரிக் கனவு கையேடு - மே 2025 - தமிழ்நாடு அரசு வெளி...