முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஒரு வார கால சிறை தண்டனை மற்றும் ₹5000 அபராதம் - உயர்நீதிமன்றம் உத்தரவு
One week jail term and ₹5000 fine for Chief Education Officer - High Court orders
நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஒரு வார கால சிறை தண்டனை மற்றும் ₹5000 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத நெல்லை மாவட்ட முன்னால் முதன்மைக் கல்வி அலுவலர் சின்னராசுவுக்கு ஒரு வார கால சிறை தண்டனை மற்றும் ₹5000 அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
பணி நிரந்தரம் தொடர்பாக தற்காலிக ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என நீதிபதி விக்டோரியா கெளரி அவர்கள் உத்தரவு
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பள்ளிக் கல்வித் துறை செயலர், மாவட்ட கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாத மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சின்னராசுக்கு ஒரு வார சிறை தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த ஆசிரியை ஹெலினி ரோனிகா ஜோசுபெல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், நான் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை சமாரியா செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக உடற்க்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தேன்.
இந்த பள்ளியில் ஏற்கனவே பணியாற்றி வந்த ஆசிரியர் பணியிட மாற்றம் செய்து சென்று விட்டதால் காலியாக இருந்த உடல் கல்வி ஆசிரியர் பணியை எனக்கு வழங்க பள்ளி நிர்வாகம் மாவட்ட கல்வி அதிகாரிக்கு பரிந்துரை செய்தது. ஆனால் பல காரணங்களை கூறி என்னை பணி நிரந்தரம் செய்ய மாவட்ட கல்வி அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
இதுகுறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2023 ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்தேன். வழக்கு விசாரணை செய்த நீதிமன்றம் எனக்கு பணி நிரந்தரம் வழங்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் உத்தரவு பிறப்பித்து இதுவரை நீதிமன்ற உத்தரவின் படி எனக்கு பணி வழங்கவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பள்ளிக்கல்வித்துறை செயலர், இயக்குனர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி விக்டோரியா கவுரி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவு முறையாக செயல்படுத்தப்படவில்லை. எனவே திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சின்னராசு மீது நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கையின் கீழ் கல்வி அதிகாரிக்கு ஒரு வார சிறை தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் நீதிமன்ற உத்தரவு முறையாக நிறைவேற்றி பிப்ரவரி 26 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.