சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு TET (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு கட்டாயம் இல்லை என்கிற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு வாபஸ்
An appeal filed by the Tamil Nadu government in the Supreme Court has been withdrawn against the Madras High Court Judgment that TET (Teacher Eligibility Test) is not mandatory for minority school teachers.
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
வணக்கம்,
சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு TET (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு கட்டாயம் இல்லை என்கிற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது என்கின்ற நிறைவான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
இதனால் தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் பதவி உயர்வு, சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்டவைகளில் இருந்த பல நெருக்கடிகள் இந்த மனு வாபஸ் மூலம் விலகும் என்பதை அறிவீர்கள்.
இந்நிலையில், ஆசிரியர் பெருமக்களின் நலனை முன்னிறுத்தி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்ட சட்டரீதியிலான முயற்சிகளின் பலனாக ஏற்பட்டிருக்கும் இந்த சட்டத்தீர்வின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவும் , நன்றி தெரிவிக்கவும் நாளை (20.02.2025) சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் நலன் காக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர், அவர்களை சந்திக்க முடிவு செய்து இருக்கிறோம்.
சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்லாமல்,
சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கும்,
அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கும், அங்கு பணிபுரியும் ஆசிரியர்,ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் பாதுகாப்பு அரணாக திகழும் அண்ணன் தளபதி அவர்களின் திராவிட மாடல் அரசிற்கு என்றும் தோள் கொடுப்போம்.
என்றும் மக்கள் பணியில்,
இனிகோ இருதயராஜ், எம்எல்ஏ.,