பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-04-2025 - School Morning Prayer Activities
திருக்குறள்:
பால்: பொருட்பால்
இயல்:குடியியல்
அதிகாரம்:நன்றி இச் செல்வம்
உடைந்த சங்கு ஒரு நாளும் பரியாது
இரண்டொழுக்க பண்புகள் :
1. 'தர்மம் தலைகாக்கும்' என்பதை அறிவேன், எனவே, என்னால் இயன்ற அளவு தான தர்மம் செய்வேன்.
2. வசதி வாய்ப்புகள் பெருகுவதால் கர்வம் கொள்ள மாட்டேன்.
பொன்மொழி :
வாய்மைக்கு மிகவும் நெருங்கிய நண்பன் அச்சமின்மையே! -- நேரு
பொது அறிவு :
1. அணுவின் மைய பாகத்தை உருவாக்குவது எது?
நியூட்ரான் மற்றும் புரோட்டான்
2. இளம் அன்னப் பறவையின் பெயர் என்ன?
சிக்னட் cygnet
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
பல் துலக்கும் போதும், முகச் சவரம் செய்யும் போதும் தண்ணீர்க் குழாயை திறந்து விட்டுச் செல்லாமல் தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்துங்கள்.
ஏப்ரல் 01
கந்தசாமி என்பவர் வேலை தேடி அடுத்த ஊருக்குச் சென்றார்.அங்கே சிலர் வருத்தத்துடன் இருப்பதைப் பார்த்தார்.
"உங்களுக்கு என்ன துன்பம் நேர்ந்தது? ஏன் இப்படி வருத்தமாக இருக்கிறீர்கள்?'' என்று அன்புடன் கேட்டார்.
"இந்த ஊர் பண்ணையார் கொடுமைக்காரராக இருக்கிறார். எங்களிடம் அதிக வேலை வாங்குகிறார். கூலியும் சரியாக தருவது இல்லை. அவரை எதிர்க்க எங்களுக்குத் துணிவு இல்லை. நாங்கள் பசியாலும், பட்டினியாலும் வாடுகிறோம்,'' என்றனர்.
அவர்கள் துன்பத்தைப் போக்க வேண்டும், அந்தப் பண்ணையாருக்கு நல்ல பாடம் கற்றுத் தர வேண்டும்என்று நினைத்தார் கந்தசாமி.
"அந்த பண்ணையார் எப்படிப்பட்டவர்? அவரைப் பற்றிச் சொல்லுங்கள்,'' என்று கேட்டார்.
"அவர் சண்டைச் சேவல்கள் வைத்திருக்கிறார். எங்கே சேவல் சண்டை நடந்தாலும் அதில் அவர் கலந்து கொள்வார்,'' என்றான் அவர்களில் ஒருவன்.
"இந்தச் செய்தி எனக்குப் போதும். நான் சொல்வது போலச்செய்யுங்கள். உங்கள் துன்பத்தை நான் தீர்த்து வைக்கிறேன்,'' என்றார் கந்தசாமி.
""நீங்கள் எது சொன்னாலும் நாங்கள் கேட்கிறோம்,'' என்றனர்.
"எனக்கு ஒரு சண்டைச் சேவலும், இருநூறு பணமும் தேவை,'' என்றார்.தன் திட்டத்தை அவர்களிடம் சொன்னார்.
உடனே அவர்கள் அனைவரும் சேர்ந்து, இருநூறு பணம் திரட்டினர். ஒரு சண்டைச் சேவலையும் அவரிடம் தந்தனர்.அவர்களில் நால்வரை மட்டும் தன்னுடன் அழைத்துக் கொண்டார் கந்தசாமி.
பண்ணையாரின் வீட்டிற்குச் சென்றார். அவர் கையில் சண்டைச் சேவல் இருந்தது.பண்ணையாரை வணங்கிய அவர்,"ஐயா! சேவல் சண்டை என்றாலே உங்கள் பெயர் எங்கும் பரவி உள்ளது. நேற்று எங்கள் ஊரில் சேவல் சண்டை நடந்தது.
""அதில் உங்கள் பெயரைச் சொல்லி, இந்தச் சேவலை சண்டைக்கு விட்டேன். இந்தச் சேவல் வெற்றி பெற்று விட்டது.பரிசுப் பணமாக நூறு பணம் கிடைத்தது. உங்களால் கிடைத்த பரிசுப் பணம் இது. உங்களிடம் பணத்தைத் தர வந்தேன்,'' என்றார்.
பணத்தை அவரிடம் நீட்டினார்.பணத்தைப் பெற்றுக் கொண்டார் பண்ணையார்.
"உன் சண்டைச் சேவல் நன்றாக உள்ளது. நல்ல பயற்சியும் தந்துள்ளாய். என் பெயரைச் சொல்லிப் போட்டியில் கலந்து கொள். மேலும், மேலும் உனக்கு வெற்றி கிடைக்கும்,'' என்று பாராட்டினார்.
அடுத்த வாரம் மீண்டும் அங்கு வந்தார் கந்தசாமி.அவருடன் அந்த ஊரைச் சேர்ந்த வேறு நான்கு பேர் வந்திருந்தனர்.
பண்ணையாரை வணங்கிய அவர்,"உங்கள் பெயரைச் சொல்லி நேற்றும் சேவல் சண்டையில் கலந்து கொண்டேன். எனக்கே வெற்றி கிடைத்தது. பரிசாகக் கிடைத்த நூறு பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்,'' என்று தந்தார்.
அவர் சூழ்ச்சியை பண்ணையார் அறியவில்லை. அந்தப் பணத்தையும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.
அடுத்த வாரம் கந்தசாமி நான்கு பேருடன் பண்ணையாரிடம் வந்தார்.அவர் கையில் சண்டைச் சேவல் இல்லை.இதை பார்த்த பண்ணையார்,"என்ன வெறுங்கையுடன் வந்திருக்கிறாய்? சண்டைச் சேவல் எங்கே?'' என்று கேட்டார்.
"நேற்று நடந்த போட்டியில் என் சண்டைச் சேவல் தோற்று இறந்துவிட்டது. கண்டிப்பாக அது வெற்றி பெறும் என்று நம்பினேன். அதனால் இவர்கள் ஒவ்வொருவரிடமும் நூறு பொற்காசு பந்தயம் வைத்தேன்.
இதுவரை வெற்றி பெற்றுக் கிடைத்த பணத்தை உங்களிடம்தான் தந்தேன். இப்போது தோற்று விட்டேன். இவர்களுக்கு நீங்கள்தான் பொற்காசுகளைத் தர வேண்டும்,'' என்றார் கந்தசாமி.
"நீ தோற்றதற்கு நான் எதற்கு பொற்காசுகள் தர வேண்டும்? என்ன விளையாடுகிறாயா?''என்று கோபத்துடன் கத்தினார் பண்ணையார்.
"சேவல் வெற்றி பெற்ற போது நீங்கள் எப்படிப் பணத்தைப் பெற்றுக் கொண்டீர்கள். இதேபோலச் சொல்லி அப்போது நீங்கள் மறுத்து இருக்க வேண்டாமா?
"வெற்றி பெற்றால் பணம் உங்களுக்கு. தோல்வி அடைந்தால் இழப்பு எனக்கா? இது என்ன நியாயம்? நீங்கள் பணத்தைப் பெற்றதற்கு இந்த ஊரில் நிறைய சாட்சிகள் இருக்கின்றன. மரியாதையாக இவர்கள் நால்வருக்கும் ஆளுக்கு நூறு பொற்காசுகள் தாருங்கள். இல்லை என்றால் ஊரைக் கூட்டி, உங்களை அவமானப்படுத்துவேன். உங்களிடமிருந்து, கட்டாயப்படுத்தி அந்த பொற்காசுகளை வாங்குவேன்,'' என்றார் கந்தசாமி.
அப்போதுதான் பண்ணையாருக்கு அவரின் சூழ்ச்சி புரிந்தது. ஊர் மக்களிடம் தன் பேச்சு எடுபடாது என்பதையும் அறிந்து கொண்டார்.
வேறு வழியில்லாத அவர், நானூறு பொற்காசுகளைஅவர்களிடம் தந்தார். "பேராசையினால் இப்படிப்பட்ட இழப்பு வந்ததே' என்று வருந்தினார் பண்ணையார்.
அந்தப் பொற்காசுகளை ஊர் மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தார் கந்தசாமி.
நீதி: பேராசை பெரும் நஷ்டம்
இன்றைய செய்திகள்
01.04.2025
* அதிகரித்து வரும் மின்தேவையை சமாளிக்க, 660 மெகாவாட் எண்ணூர் அனல் மின்னுற்பத்தி விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
* வணிகர்கள், தொழில்முனைவோருக்கு ஏப்ரல் 3-ல் ‘சாட் ஜிபிடி’ பயிற்சி வகுப்பு: சென்னையில் நடக்க உள்ளது.
* மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கான ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
* ‘மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக அதிகரித்துள்ளது. 3,900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 270 பேரை இன்னும் காணவில்லை’ என்று அந்நாட்டு ராணுவ ஆட்சிக் குழு தெரிவித்துள்ளது.
* மியாமி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச்சை வீழ்த்தி செர்பிய வீரர் மென்சிக் சாம்பியன்.
* கால்பந்து காட்சி போட்டி: இந்தியா ஆல் ஸ்டார் அணியை வீழ்த்தி பிரேசில் ஜாம்பவான் வெற்றி.
Today's Headlines
* To address the increasing electricity demand, the Tamil Nadu Electricity Board plans to implement a 660-megawatt expansion project for the Ennore Thermal Power Plant.
* A "ChatGPT" training workshop for business owners and entrepreneurs will be held in Chennai on April 3rd.
Covai women ICT_போதிமரம்