ரேபீஸ் நோய்க்கு ARV Anti-Rabies Vaccine தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் - பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் இயக்குநரகத்தின் பத்திரிகை செய்தி, நாள் : 16-03-2025
ARV vaccination for rabies - Press release from the Directorate of Public Health and Preventive Medicine, Date: 16-03-2025
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
ரேபீஸ் ஒரு கொடிய வைரஸ் நோய்
@@@@@@@@@@@@@@
கடந்த சில நாட்களுக்கு முன், இராணிப்பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த ஒரு நபர் நாய் கடித்து 3 மாதம் ஆகியும் ரேபீஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பதால் இறந்துவிட்டார் என விசாரணையில் தெரிய வந்தது.
எனவே மக்கள் அனைவரும் நாய் கடித்தவுடன் ARV (Anti-Rabies Vaccine) எனப்படும் தடுப்பூசியை செலுத்திக கொள்வது அவசியமாகிறது.
ரேபீஸ் ஒரு கொடிய வைரஸ் நோய் இந்நோயால் பாதிக்கப்பட்ட நாய், மனிதனை கடிப்பதால் மனிதன் பாதிப்புக்கு உள்ளாகின்றான்.
நாய்கள் கடிப்பதால் மட்டும் ரேபீஸ் வருவதில்லை. வீட்டில் வளர்க்கப்படும். நாய், பூணை ஆடு, மாடு மற்றும் வீட்டு விலங்குகள் கடிப்பதால் பரவுவதற்கு வாய்ப்புள்ளது.
நாய்கள் கடிப்பதால் மட்டும் இல்லாமல், நாய் புரண்டினால் உடலில் உள்ள சிறுகாயங்களில் உமிழ்நீர் பட்டாலும் ரேபீஸ் பரவும்.
நாய் கடித்தவுடன் காயத்தை குறைந்தது 15 நிமிடங்களுக்கு சோப்பு தண்ணீரால் கழுவ வேண்டும்.
ரேபீஸ் நோய்க்கு ARV (Anti-Rabies Vaccine) ப்படும் தடுப்பூசிகள் உள் நாய் கடித்தவுடன் 4 ஊசிகள் போட்டு கொள்வதன் மூலம் ரேபீஸ் நோயை 100% வரவிடாமல் தடுத்து விடலாம். நாய்கடித்தவுடன் இந்த தடுப்பூசி போடப்பட வேண்டும்.
1) முதல் நாள் - முதல் தவணை
2) 3வது நாள் - இரண்டாவது தவணை
3) 7 வது நாள் - மூன்றாவது தவணை
4) 28 வது நாள் - நான்காவது தவணை
இந்த தடுப்பூசி கைகளில் (Intra Dermal) தோலுக்கு கீழேப் போடப்படுகிறது.
மேலும், நாயின் ஆழமான கடிகளுக்கு ஏற்ப இம்யூனோகுளோபுளின் மருந்தும் அளிக்கப்படுகிறது.
இந்த ARV மற்றும் இம்யூலோகுளோபுளின் தடுப்பூசிகள் அனைத்து அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் (24X7) இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
எனவே பொது மக்கள் வெறிநாய்கடியின் அவசியத்தை அறிந்து உரிய நேரத்தில் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்று ரேபீஸ் எனப்படும் வெறிநாய்கடியிலிருந்து தற்காத்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.