கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Cinema songs should not be allowed in temples - High Court

 

 

கோயில்களில் சினிமா பாடல்களை அனுமதிக்க கூடாது -  உயர்நீதிமன்றம்


Cinema songs should not be allowed in temples - High Court


கோவில்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் பொழுது பக்திப் பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும், சினிமா பாடல்கள் பாட அனுமதிக்க கூடாது" - சென்னை உயர்நீதிமன்றம்


கோவில்களில் நடைபெறும் இசை கச்சேரியில் சினிமா பாடல்களை அனுமதிக்க கூடாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


புதுச்சேரி திருமலைராயன்பட்டினம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற இசை கச்சேரியில் சினிமா பாடல்கள் பாடப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, "கோவில்களில் இசை கச்சேரிகளில் பக்தி பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும். கோவில் வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் சினிமா பாடல்களை பாட அனுமதிக்க கூடாது" என்று திட்டவட்டமாக கூறியது.


இதையடுத்து, கோவில்களில் சினிமா பாடல்கள் தவிர பிற பாடல்கள் பாடப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் கவனிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Version: 0.3.2 - Updated on 31-07-2025

  தற்போது TNSED Schools  App-ல் Health and wellbeing - Students health screening module changes பதிவு செய்வதற்கான  புதிய அப்டேட் வெளியாகியுள...